புத் 66 இல. 30

சர்வதாரி வருடம் ஆடி மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ரமழான் பிறை 29

SUNDAY JULY 27 2014

 

 

ஐ. நா. விசாரணைக்கு ஆதரவில்லை, இன அழிப்பு இடம்பெறவில்லை, இலங்கை அரசுடன் தாராள நட்புறவு:

TNA மோடி அரசின் அதிர்ச்சி வைத்தியம்

இடிபோல இருந்தாலும் இதுவே உண்மை என்பதை கூட்டமைப்பு உணர்ந்து கொள்ள வேண்டும்

இந்தியாவை மலைபோல் நம்பிக்கொண்டு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சொந்த நாட்டுக்கு எதிர்ப் பிரசாரம் செய்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு புதிதாக ஆட்சி பீடமேறிய நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கம் அதிர்ச்சி வைத்தியம் ஒன்றைக் கொடுத்துள்ளது. கடந்த வாரம் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி தலைமையில் இந்தியாவிலிருந்து இலங்கை வந்திருந்த இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் ஐவரடங்கிய குழுவினால் தெரிவிக்கப்பட்ட அந்நாடு தொடர்பான உண்மையான பல விடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

                                                            விவரம்»

 

 

தனிமனித உரிமை, ஆதிக்கமற்ற ஜனநாயக அமைப்பு காலத்தின் கட்டாயம்

குமரகுருபரன் தலைமையில் ஜனநாயக தேசிய முன்னணி

வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் வகையில் ஒரு பரந்துபட்ட தனி மனித உரிமை ஆதிக்கமற்ற ஜனநாயக அமைப்பு ஒன்றின் தேவை காலத்தின் கட்டாயமாக உண ரப்பட்டுள்ள நிலையில், அதனை நிறைவு செய்யும் வகையில் ஜனநாயக தேசிய முன்னணி ...

                                                            விவரம்»

ஓமந்தையில் நடந்தது என்ன?

பிரிகேடியர் வணிகசூரிய விளக்கம்

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வடக்கிலிருந்து வருகை தந்த ஊடகவியலாளர் குழுவுக்கு இராணுவத்தினர் ஓமந்தையில் வைத்து எவ்விதமான இடை யூறுகளையும் விளைவிக்கவில்லை என்று இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகமைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று சனிக் கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக் கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஓமந்தையில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அவர், தொடர்ந்து தெளிவுபடுத்துகையில், ஓமந்தை சோதனை சாவடியில், பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்தே சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

விவரம்»

லேக் ஹவுஸ் SLBC இணைந்த

City FM  சேவை ஆரம்பம்

ஊடகத்துறை வரலாற்றில் பத்திரிகைகளின் தாய் வீடான லேக்ஹவுஸ் நிறுவனமும், வானொலித்துறை தாயகமான இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனமும் இணைந்து சிட்டி எப்.எம். 89.6, 89.8 ஆகிய அலை வரிசைகளில் ஒவ்வொரு மணித்தியாலமும் “30 நிமிடத்தில் சூடான செய்திகள்” என்ற தொனிப்பொருளில் கடந்த புதன்கிழமை முதல் செய்தி சேவையொன்றை ஆரம்பித்துள்ளன.

விவரம்»

 

 

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.