புத் 66 இல. 16

விஜய வருடம் சித்திரை மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஜுமாதல் ஆகிரஹ் பிறை 19

SUNDAY APRIL 20 2014

 

 

கால வீணடிப்பால் தேவையற்ற பிரச்சினைகளுடன் மக்களது இயல்புவாழ்வு மீண்டும் பாதிப்பு:

தெரிவுக் குழுவில் இணைகிறது வுNயு

பிரச்சினைக்கு விரைவாக தீர்வினைக் காண வேண்டும் என்பதை உணர்த்தினர் மக்கள்

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்று இனப்பிரச்சினைக்கான தீர்வினை விரைவாகக் காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கட்சிக்குள்ளும், வெளியேயும் கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இவ்விடயத்தில் இதுவரை பிடிவாதப் போக்கிலிருந்த தமிழ்க் கூட்டமைப்பு அதன் போக்கில் நெகிழ்வுப் போக்கான நிலையை எடுத்துள்ளது.

                                                            விவரம்»

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட மட்டக்களப்பு கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் மண் முனைப் பாலம் நேற்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படம். அமைச்சர்களான பiர் சேகுதாவூத், வி. முரளிதரன் ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர். (படம்: சுதத் சில்வா)

எதிர்க்கட்சிகளின் வளர்ச்சிக்காக முஸ்லிம் சமூகத்தை சிக்கலுக்குள் தள்ளிவிட சிலர் முயற்சி

முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பின் பொய் பிரசாரத்திற்கு முஸ்லிம் புத்திஜீவிகள் கண்டனம்

சிறு சம்பவங்களை மிகைப்படுத்தி அதில்அரசியல் ஆதாயம் தேடும் தனிப்பட்ட சிலர்

நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சில அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறு. சிறு சம்பவங்களை மிகைப்படுத்தி அதன் மூலமாக அரசியல் பிரசாரம் செய்ய எதிர்க்கட்சிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் முயற்சிகளில் முஸ்லிம் அமைப்புக்கள் சிலவும், முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பு எனக் கூறிவரும் அமைப்பு ஒன்றும் ஈடுபட்டுவருவதாக முஸ்லிம் புத்திஜீவிகளும். கல்விமான்களும் குற்றம் சாட்டியுள்ளனர். தமது தனிப்பட்ட, தாம் சார்ந்த அமைப்புக்கள் மற்றும் தாம் சார்ந்த எதிரணிக் ....

விவரம் »

மதங்களிடையே பிரச்சினையை தோற்றுவிக்க சிலர் முயற்சி

அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது - ஜனாதிபதி

மதங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதும், சமயங்களின் சுதந் திரங்களைப் பெற்றுக்கொடுப்பதும் எமது பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.  கிராந்துரு கோட்டை மகாவலி பிரதேச பி, சீ வலயத்தில் வாழும் 5,500 பேருக்கு காணி உறுதி வழங்கும் வைபவம் மகாவலி விளையாட்டரங்கில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாக பங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற் கண்டவாறு கூறினார்.  ஜனாதிபதி தனதுரையில் மேலும் கூறியதாவது; இப்போது இல்லாத பிரச்சினைகளை புதிது புதிதாக உருவாக்கு கின்றனர். நல்லிணக்கம் பற்றிக் கூறுகின்றனர். மதங்களுக்கிடையில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.

                                                            விவரம்»

TNA எம்.பி. ஒருவரை காணவில்லையாம்

வன்னி மக்கள் முறைப்பாடு

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் கூட்டமைப்பு சார்பில் மூன்று உறுப்பினர்கள் பா¡ளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கல நாதன், வினோநோகராதலிங்கம் ஆகியோரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆவர். இவர்களில் வினோ எம்.பியை காணவில்லை என வன்னி மக்கள் முறையிட்டுள்ளனர். இது தொடர்பில் இணையத்தளம் ஒன்றிற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கந்தையா சுப்பிரமணியம் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில். வன்னி தேர்தல் தொகுதியில் நாங்கள் மூன்று எம்பிமாரை தெரிவு செய்தும். ஆனந்தன் எம்.பி. அடிக்கடி வந்து போறார். அவருடைய இரண்டு பேர் இங்க மாகாண சபைக்கு தெரிவாகி இருக்கினம்.

                                                           விவரம் »

 

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.