புத் 66 இல. 15

விஜய வருடம் பங்குனி மாதம் 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஜுமாதல் ஆகிரஹ் பிறை 12

SUNDAY APRIL 13 2014

 

 

நல்லையா குமரகுருபரன் பதவி நீக்கத்தின் எதிரொலி:

ஜ. ம. முவிற்குள் முறுகல் தீவிரம்

நம்பி வாக்களித்த தமிழ் மக்கள் கவலை

இருதரப்பும் பரஸ்பரம் ஏட்டிக்குப் போட்டியாக அறிக்கை

ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியின் பிரதித் தலைவராக இருந்த நல்லையா குமரகுருபரன் அக்கட்சியிலிருந்து திடீரென விலக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. முன்னணியின் (ஆரம்பகால உறுப்பினராக இருந்து வந்த) குமரகுருபரன் அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை மாலை அவசரமாகக் கூடிய அக்கட்சியின் அரசியல் உயர்மட்டக் குழு குமரகுருபரனை பிரதித் தலைவர் பதவியிலிருந்து நீக்கியதுடன் சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவற்றுக்கு இருவார காலத்தினுள் பதிலளிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தது.

                                                            விவரம்»

வாசகர்களுக்கு இனிய புதுவருட வாழ்த்துகள்

புதுவருடத்தின் உதயத்துடன் ன ஐக்கியமும் மலரட்டும்

பிரதமர் தி. மு. ஜயரட்ண

இலங்கையர் அனைவருக்கும் சமாதானம், மகிழ்ச்சி மற்றும் செளபாக்கியத்தினைக் கொண்டுவரும் சிங்கள, தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியினை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். சூரிய பகவான் மீன இராசியிலிருந்து மேட ராசியினை வந்தடைவது ஒரு புதிய வருடத்தின் உதயம் மட்டுமன்றி அது சிங்களவர்,....

விவரம் »

சகவாழ்வும் நல்லிணக்கமும் புதுவருட அர்ப்பணமாகட்டும்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

இயற்கை அருளின் அபரிமித விளைச்சலில் இருந்து தன்னிறைவுபெற்ற ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் வெற்றிப் பெருமையுடன் இந்த தமிழ், சிங்கள புத்தாண்டை நாம் கொண்டாடுகின்றோம்.  மிகச் சிறந்த பெறுமானங்களைக் கொண்ட ஒரு சிரேஷ்ட கலாசார முதுசத்தினால் மட்டுமே மானிடப் பெறுமானங்கள் நிறைந்த மக்களை உலகுக்குத் தரமுடியும். இப்பண்டிகையைப் போன்ற தேசிய கலாசாரக் கொண்டாட் டங்களின் மூலம் இதற்கான அடித்தளம் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. செழுமைமிக்க கலாசாரப் பாரம்பரியங்களைத் தொடர்ச்சியாகப் பேணுவது தேசம் சுபீட்சத்தை நோக்கி துரித முன்னேற்றம் அடைந்துவருகின்றது என்பதற்கான அடையாளமாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

                                                            விவரம்»

மலையக சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுதல்

புதுவருடத்தில்

இ. தொ. கா. திடசங்கற்பம்

இம்மலரும் புத்தாண்டில் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும் குறிப்பாக இந்திய வம்சாவளி மக்களுக்கும், எமது மனமுவந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். இப்புத்தாண்டு எம்மவரின் சமூக மேம்பாடு, பல்துறை வளர்ச்சி, காத்திரமான வாழ்வாதார திட்டங்கள், இந்நாட்டின் ஏனைய மக்களுக்குரிய உரிமைகள், சலுகைகள் ஆகியவை வாய்ப்பதற்கு வழிகோல வேண்டு மென வேண்டுகின் றோம் என இ.தொ. கா. பொதுச் செயலா ளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்ச ருமான ஆறுமுகன் தொண்டமான் தமது சித்தி ரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரி வித்துள்ளார்.

                                                           விவரம் »

 

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.