என்ன காரணத்தினால் ஒரு மனிதன் சிறுப்பிள்ளையை துஷ்;பிரயோகத்திற்கு உள்ளாக்குகின்றான்
என அநேக மக்களால் புரிந்து கொள்ள முடியா மலிக்கின்றது. அவ்வாறு துஷ்பிரயோ
கிப்பவர்களில் 10வீதமானோர் மன நோயால் பாதிக்கப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர
சிறுவர் துன்புறுத் தல்களிலிருந்து தனிப்பட்ட, சமூக மற்றும் பண்பாட்டு காரணிகள் செல்
வாக்கு செலுத்துகின்றன. அக்காரணிகளை நான்கு வகையாக பாகுபடுத்தலாம்.
அநேகமான சிறுவர்கள் வன்முறை நடத்தையினை தமது பெற்றோர்களிட மிருந்தே கற்றுக்
கொள்கின்றனர். உதாரணமாக தாய், தந்தை இருவரும் சண்டையிட்டுக் கொள்வர். இதன்
காரணமாகவும் துஷ்பிரயோகங்கள் வளர்கின்றன. ஆய்வுகளின் மூலம் 30 வீத துஷ்பிரயோகங்கள்
பெற்றோர் களினாலேயே ஏற்படுகின்றது என்பது தெரிய வந்துள்ளது.
சமூக நிலைமைகளே ஒரு குடும்பத் தில் சிறுவர் துஷ்பிரயோகங்களை ஏற்படுத்துகின்றன எனக்
கூறலாம். சமூக நிலைமைகள் வேலையின்மை, நோய்வாய்ப்பட்டிருத்தல், வறுமையான வீட்டு
சூழ்நிலை, சராசரியாக பெரிய தொரு குடும்பம், ஊனமுற்றக் குழந்தைகள் வீட்டிலிருத்தல்,
குடும்ப அங்கத்தவர்களின் இழப்பு என்பன தீர்மானிக்கின்றன. வறுமையான குடும்பங்களிலேயே
அதிக சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்ற தென அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மலையகப் பகுதிகளில் காலை பெற்றோர் தொழிலுக்கு செல்வதனால் பிள்ளைகளை சிறுவர்
பராமரிப்பு நிலையங்களில் விட்டு செல்லுதல் வேண்டும் ஆனால் சில பெற்றோர் இதனை
தவறவிட்ட பிள்ளைகளை தமது வேலை இடைவேளையில் தேனீர் எடுத்துவர சிறுவர்களை
பயன்படுத்துகின்ற நிலை காணப்படு கின்றது. பின்னர் அச்சிறுவர்கள் வீடு களில்
தனிமைப்படுத்தப்படுகின்றனர். பெற்றோர் பாதுகாவலர்களால் துஷ்;பிரயோகங்களுக்கு
உள்ளாக்கப் படுபவர்கள் சமூகத்தினால் தனிமைப் படுத்தப்படுகின்றனர். சில வன்முறை யான
பெற்றோர்கள் ஏதாவதொரு சமூக நிறுவனத்தை தன்னகத்தே கொண்டுள்ளதோடு பெரும்பாலும்
நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சிறியளவில் தொடர்பு உடையவர் களாகவும்
காணப்படுகின்றனர். இதனால் துஷ்பிரயோகக்காரர்கள் தப்பித்துக் கொள்வதோடு சமூக
விழுமியங்கள், தரங்கள் என்பவற்றை யும் மாற்றியமைக்கின்றனர்.
சில குடும்பங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்களும், புறக்கணிப்புக்க ளும் துணிந்து
வளர்ந்து வருகின்றன. தாய், தந்தையர்களுடன் வாழும் போதும் கூட சிறுவர் துஷ்பிரயோகத்
திற்கு உள்ளாவது அதிகமாய் உள்ளது. மேலும் பெற்றோர்களுக்கிடை யிலான பிரச்சினைகள்
என்பதுவும் துஷ்;பிரயோகத்துக்கு காரணமாக அமைகின்றது.
இப்பிரதேசத்தில் லயன் வீடுகள் தான் அதிகம். இவ்வீடுகள் 3 அறைகளை மாத்திரம்
கொண்டுள்ளது. ஒரு சில குடும்பங்களில் 6 அல்லது அதற்கு மேற்பட்டோர் வாழ்கின்றார் கள்.
இதுவும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளமைக்கு காரணமாக அமைந்துள்ளது
மொத்தத்தில் பல்வேறு காரணங்களால் உலகலாவிய ரீதியில் சிறுவர் துஷ்;பிரயோகம்
அதிகரித்துக் கொண்டு வருகின்றது.
துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுவர்களின் பெற் றோர்களின் கல்வி நிலை பின்தங்கிய
நிலையில் உள்ளதை அவதானிக்க லாம். குறிப்பாக 50 வீதத்துக்கு மேற் பட்டோர் பாடசாலைக்கு
செல்லாதவர் களாகவே உள்ளனர். ஏனையோரும் தரம் 6 மட்டுமே கற்றுள்ளனர். இப்படியிருக்க
தங்களின் பிள்ளைகளை யும் பாடசாலைக்கு அனுப்ப தவறி விட்டனர். இதுவும் இப்பிரதேசத்தில்
சிறுவர் துஷ்;பிரயோகம் அதிகரித்து வருவதற்கு காரணமாக அமைந்துள் ளது எனலாம். சிறுவர்
துஷ்;பிரயோ கம் தொடர்பாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் அறியாத
மக்களாகவே காணப்படுகின் றனர். அதனால் தம் பிள்ளைகளை வேலைக்கும், மற்றவர்களை
நம்பியும் விடுகின்றார்கள். இதுவும் ஒரு காரணமாக அமைகின்றது.
இப்பிரதேசத்தில் சிறுவர் துஷ்;பிர யோகம் அதிகரித்து வருவதற்கு பொருளாதார
நிலைப்பாடும் வறுமை யும் கூட காரணமாக அமைந்துள் ளது. நாளுக்கு நாள் அடிப்படை
உணவுப்பொருட்களின் விலை அதிகரித்து செல்கின்றது. இதனை ஈடுகொடுக்க முடியாதவர்களாகவே
இப்பிரதேச மக்கள் காணப்படுகின்ற னர். 45வீதத்திற்கு மேற்பட்டோர் வறுமைக் கோட்டுக்கு
கீழ்தான் வாழ்கின்றார்கள் அதனால் தங்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பு கின்றார்கள்.
மேலும் வறுமையில் வாடும் பிள்ளைகள் திருடுகின்றார்கள்;.
இப்பகுதியுள்ள சிறுவர்களின் பெற் றோர்களின் 96 வீதத்துக்கு மேற்பட் டோர்
தேயிலைத்தோட்டங்களிலே வேலை செய்கின்றார்கள். காலை 8.00 மணி முதல் மாலை 5.00 வரை
இவர்கள் வேலைசெய்வதனால் பிள்ளைகள் சரியான முறையில் கவனிக்கப்படாத நிலையில் வளர்கின்
றார்கள். மேலும் வறுமை காரணமாக வெளிநாடுகளுக்கும் சிறுவர்களின் தாய்மார்
சென்றுள்ளனர். இதுவும்கூட இப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வருவதற்கு
காரணமாக அமைந்துள்ளது. இப்பகுதிகளில் மடம் என்கின்ற சிறுவர் பராமரிப்பு நிலையங்களே
காணப்படுகின்றன. இங்கு போதியளவு வசதியின்மை நிகழ்கின்றது. பராமரிப்பாளர்கள்.
சுத்தமான நீர், இடவசதி, சுகாதார, உணவு மற்றும் பராமரிப்பு என்பன
போதாமையிலுள்ளதையும் காணமுடிகின்றது. (தொடரும்)
மேலும் அதிகளவான து~;பிரயோகம் பராமரிப்பாளர்களினாலேயே நடைபெறுகின்றது. பெரும்பாலும்
பராமரிப்பாளர்கள் சகோதர மொழி இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதனால் பிள்ளைகள் தமது
தேவையினை அவர்களிடம் கூற முடியாதுள்ளது.
சிறுவர்களுக்கு ஏற்படும் தாக்கங்கள்
சிறுவர் து~;பிரயோகம் அல்லது புறக்கணிப்பு என்பது பாரியளவில் விளைவுகளை ஏற்படுத்தக்
கூடியனவாக உள்ளன. பௌதீக ரீதியாக ஏற்படும் காயங்கள், ஊமைக்காயங்கள், சிராய்வுகள்,
எலும்பு முறிவுகள், மூளை பாதிக்கப்படல், நிரந்தரமான ஊனமாக்கப்படல் அல்லது
உயிரிழத்தல், ஆகியன ஏற்படுகின்றன. இது தவிர உளவியல் ரீதியாக பல்வேறு தாக்கங்கள்
ஏற்படுகின்றன. மன நோய்கள், சுய நினைவினை இழத்தல் என்பனவும் ஏற்பட வழிவகுக்கின்றன.
இதன் காரணமாக தற்கொலைகளும் பாரியளவில் ஏற்படுகின்றன. து~;பிரயோகத்தின் பின்பு
சிறுவர்களின் நடத்தையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. வன்முறைகளும் இள வயது
குற்றங்களும் அதிகரிக்கின்றன.
பாலியல் து~;பிரயோகங்களுக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கும் பாரிய பிரச்சினைகள்
ஏற்படுகின்றன. குடும்பத்தினுள்ளே தவறான பாலியல் நடத்தைகளுக்கும் இது
வழிவகுக்கின்றது. மேலும், பாலியல் ரீதியான பிரச்சினைகள், பாலியல் உறவுகளை
தவிர்த்தல், பாலியல் குடும்ப நிலை அல்லது விபச்சாரத்தில் ஈடுபடல் என்பனவும்
ஏற்படுகின்றது.
சிறுவர் து~;பிரயோகத்தை தடுக்க பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கலாமா என சிந்தியுங்கள்
சிறுவர் து~;பிரயோகத்தில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தடுதலே அதிகமாக உள்ளது. எனவே
சிறுவர்களை வேலைக்கமர்;த்துவோரை பற்றிய தகவல்களை பொலிஸ் நிலையம் அல்லது பொலிஸ்
உத்தியோகத்தர்கள் அல்லது ஊரிலுள்ள பொறுப்பான உத்தியோகத்தர்களிடம் தெரிவிக்கலாம்.
இவ்வாறான தகவல்களை பெறுவோர் அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
பாடசாலைச் செல்லாமை மற்றும் பாடசாலையிலிருந்து இடைவிலகல் ஆகியவற்றை தவிர்க்க
நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்
இப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு சிறுவர்களின் முக்கியத்துவம் பற்றியும், சிறுவர்
உரிமைகள் தொடர்பாகவும், சிறுவர் து~;பிரயோகம் தொடர்பாகவும் தெரிவிக்கவேண்டும்.
அத்தோடு சிறுவர் து~;பிரயோகத்தினால் ஏற்படம் பாதிப்புகள் பற்றியும்
அறிவிக்கவேண்டும்.
பயிற்சிப் பட்டறைகளை ஏற்படுத்தி சிறுவர் து~;பிரயோகம் தொடர்பான விளக்கங்களை
இப்பிரதேச மக்களுக்க வழங்கலாம்.
சிறுவர் து~;பிரயோகத்துக்கான மேற்குறிப்பிட்ட காரணங்களை சரிவர கண்டு அவற்றினை
நிவர்த்தி செய்ய வேண்டும். குறிப்பாக வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்,
பொருளாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவற்றினைக் குறிப்பிடலாம்
சிறுவர்களை சரியானமுறையில் பாதுகாப்போடு வளர்க்க நடவடிக்கைளை எடுக்க வேண்டும்.
இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் வாயிலாக இப்பிரதேசத்தில் சிறுவர்
து~;பிரயோகத்தினை குறிப்பிட்டளவு குறைக்கலாம் எனக் கருதுகின்றேன்.