அவனிடம் இருந்த பொன்னைக் கொண்டு இதுபோல் எத்தனையோ அவனால் வாங்க முடியும். ஆனால்
இப்போது முடியாதே. அவன் அதற்கு ஆயத்தமாக வரவில்லை. என்பது தான் குறையாக இருந்தது.
தேர் விட்டத்திலே சுற்றிவர மணித் தொங்கல்கள் தொங்கின. முத் தாலும் பவளத்தாலும்
மாலைகள் தொங்கின. ஓடும் போது அந்த மணிகள் சலசலத்துக் கொண்டிருக்கும் என்பது
அவனுக்குப் புலனாகியது.
அதனருகே நின்ற காவலர்கள் “ஐயா இது மணித் தேர். இதனை பெரும் வீட்டுப் பிள்ளைகள் இங்கு
வரும் போது வாங்கிப் செல் வார்கள். மனோ வேகத்தில் செல்லக் கூடியது. நீங்கள்
விரும்பினால் இதை வாங்கிக் கொள்ளலாம்” என்றார்கள்.
“இதை வாங்க வேண்டும் என்று தான் ஆசையாக இருக்கிறது. இன்னுமொரு சந்தர்ப்பத்தில்
பார்க்கலாம்” என்றான் விமல தர்மராஜன்.
“இந்த குதிரைகளை எல்லாம் எங்கிருந்து எடுக்கிaர்கள்?” என்றான்
“எல்லா நாட்டுக்கும் குதிரைகள் எங்கள் நாட்டின் ஊடாகவே செல்கின்றன. கட லும்
துறைமுகமும் உள்ள நாடு எங்களுடையது தான். மரக்கலங்களில் குதிரைகள் வரும் அப்போது
எல்லோரும் போட்டிபோட்டுக் கொண்டு ஏலம் வைத்து எடுப்பார்கள். அவரவர் நாட்டுக்கு
குதிரைப் படைகளுக்கு குதிரை தேவை யல்லவா? ஆனால் இந்தக் குதிரைகள் பஞ்சகல்யாணக்
குதிரைகள் இவை கட்டளை அனுப்பி சவூதி அரேபியாவில் இருந்து எங்கள் அரசரால் எடுத்து
வரப்பட்டவை அதிகமாக இவ்வாறான குதிரைகள் அஸ்வமேத யாகம் செய்வதற்காகவே தருவிக்கப்படும்.
“இவ்வாறு கஷ்டப்பட்டு எடுத்த குதிரைகளைப் பூட்டி இத்தேரை விற்கிaர்களே அது தான்
எனக்குப் புதுமையாக இருக்கிறது”. என்றான். அவர்கள் அந்த இரகசியத்தை சொல்லக் கூடாது
என்பது அரசனின் கட்டளை. விமலதர்மராஜனைப் பார்க்கும் போது அவன் ஒரு சிறுவனாக
இருப்பதும். அழகாக இருப்பதும் அவனே இத்தேரை வாங்க வேண்டும் என்று அவர்கள் மானசீகமாக
விரும்பினார்கள். ஆனால் காரணத்தைச் சொல்ல வில்லை.
அவனைப் பார்த்தும் ஒரு நாட்டின் இளவரசனாக இருப்பானோ என்ற ஐயம் கூட அவர்களுக்கு
எழுந்தது.
அடுத்த முறை திரும்பி வந்து அதை வாங்கிச் செல்லலாம் என்று வந்து விட்டார்கள். ஆனால்
விமலதர்மராஜனுக்கு இரவில் தூக்கமே வரவில்லை. காரணம் அந்தத் தேரில்
பூட்டப்பட்டிருந்த நாலு பஞ்சகல்யாணக் குதிரைகளும் அவன் மனக் கண்முன்னே நின்று
கொண்டிருந்தது.
* உலகில் மிக உயர்ந்த பாலை வனம் சிலியில் உள்ள அடகாமா.
* மின்சார ரயில் முதன் முதலில் ஓட்டப்பட்டது இங்கிலாந்தில்.
* அமெரிக்காவின் சொர்க்கத் தீவு என அழைக்கப்படுவது ஹவாய் தீவு.
* கொரியர் சேவிஸ் முதன் முதலில் தோன்றிய நாடு இங்கிலாந்து.
* பொதுவுடமை மேதை கார்ள் மார்க்ஸின் கல்லறை லண்டனில் உள்ளது.
* உலகில் தாயின் பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாகப் பயன்படுத்துவர்கள் ஸ்பெயின்
நாட்டினர் ஆகும்.
* உலகில் அதிகளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம் பனாமா கால்வாய்.
* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு ஜேர்மனி.