புத் 64 இல. 32

நந்தன வருடம் ஆடி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரமழான் பிறை 16

SUNDAY AUGUST 05 2012

 
தமிழர் பிரதிநிதித்துவத்தை தடுக்க சிலர் கடும் முயற்சி

தமிழர் பிரதிநிதித்துவத்தை தடுக்க சிலர் கடும் முயற்சி

மனோ கணேசன் சீறிப்பாய்ச்சல்

சப்ரகமுவ மாகாணத்தில் மலையகத் தமிழ் மக்கள் தமது நியாய மான ஜனநா யக பிரதிநிதித் துவத்தை பெற்றுக்கொள்வதை தடுத்து நிறுத்த சில நபர்கள் பயன்படுத்தப்படு கின்றார்கள். சப்ரகமுவவுடன் நின்று விடாமல், கிழக்கு மாகாணத்திலும் இவர்கள் தங்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளனர்.

இதே நபர்கள்தான், வட மாகாணத்திலும், கொழும்பு மாவட்டத்திலும் கடந்த வருடம் நடைபெற்ற மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை தேர்தல்களின்போதும், தமிழர் வாக்குகளை சிதறடிக்க முயற்சி செய்தார்கள் என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலின்படி நடந்துகொள்ளும் இந்த நபர்களை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மிகத்தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக இரத்தினபுரி, கேகாலை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய ஐந்து மாவட்டங்களையும் சார்ந்த தமிழ் வாக்காளர்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழர் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கில் பல்வேறுபட்ட பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். பொய் வதந்திகளை திட்டமிட்டு பரப்பினார்கள். ஆனால் வடக்கிலும், கொழும்பிலும் நடைபெற்ற தேர்தல்கள் மூலம் தமிழ் மக்கள் இந்த தனி நபர்களுக்கு மறக்க முடியாத பாடங்களை கற்று தந்தார்கள்.

வரலாற்றில் இருந்து பாடம் கற்காத இந்த நபர்கள் இன்று மீண்டும், தமது கைகளால் சூரியனை மறைக்க முயல்கிறார்கள். தமிழர் வாக்குகளை சிதறடித்து, தமிழர் பிரதிநிதித்துவங்களை குறைக்கவும், இல்லாது ஒழிக்கவும் சதி முயற்சிகளில் ஈடுபடும் இந்த நபர்களுக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்களும், சப்ரகமுவ மாகாண தமிழ் மக்களும் உரிய பதிலடிகளை அளிப்பார்கள் என்று நான் கூறிவைக்க விரும்புகின்றேன்

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.