ஒரு தமிழனை முதலமைச்சராக்குவதன் மூலமே ஊடுருவல் அரசியலுக்கு ஆப்பு
அரசாங்கத்துடன் இணைந்திருப்பதே ஆரோக்கியம்;
ஒரு தமிழனை முதலமைச்சராக்குவதன் மூலமே ஊடுருவல் அரசியலுக்கு ஆப்பு
தமிழரை ஒன்றுபட பிரதியமைச்சர் முரளிதரன் அழைப்பு
வாழைச்சேனை நிருபர்
தமிழ் மக்கள் மத்தியில் தற்போதுள்ள சில அரசியல்வாதிகளின் ஊடுருவலை இல்லாமல் செய்ய
வேண்டுமானால் அரசாங் கத்துடன் இணைந்து செயற் படும் ஒரு தமிழனுக்கு வாக்களித்து முத
லமைச்சராக்க வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்
கருத்து வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர
கூட்டமைப்பில் 5 முஸ்லிம்கள் உட்பட 14 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்.
இதில்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டி யிடும் பங்காளிக் கட்சிகளை விட நேரடிக்
கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் போட்டி யிடும் ஒரு தமிழனை வெற்றிபெறச்
செய்து முதலமைச் சராக்குவதன் மூலம் நாம் பாரிய அபிவி ருத்திகளை அடைய முடியும்
என்றும் அவர் கூறினார். மட்டக்களப்பு சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் நடைபெற்ற
தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு
தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற்ற அதிகாரசபை பணிப்பாளர் கே. சத்தியவரதன் தலைமையில் நடைபெற்ற
இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாண சபைத்
தேர்தலில் போட்டியிடும் மகளிர் வேட்பாளர் திருமதி ருத்ரமலர் ஞான பாஸ்கரன்,
மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன் மற்றும் பிரதேச மக்கள்
பலரும் கலந்து கொண்டனர்.
பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தொடர்ந்தும் உரையாற்றுகையில் எமது
மாவட்டத்தில் தேசத்தின் மகுடம் திட்டத்தின்மூலம் ஐம்பதாயிரம் இலட்சம் ரூபா நிதி
செலவிடப்படவுள்ளது. இதன் மூலம் கதிரவெளி தொடக்கம் துறைநீலா வணை வரை அபிவிருத்தி
செய்யப்பட வுள்ளது. சித்தாண்டிப் பிரதேசத்திலிருந்து சந்தணமடு ஆற்றங்கரை வரை காப்பட்
வீதி அமைப்பதற்காக நான்கு கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த தேர்தலைப் பொறுத்தவரை யார் கூடிய விருப்பு வாக்கு பெறுகிறாரோ அவர்தான்
முதலமைச்சர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். வாக் களிக்கும் விடயத்தில்
மிகவும் கவனமாக இருக்கவேண்டும். வழமைபோல் எதிர்க் கட்சியினருக்கு
வாக்களித்துவிட்டால் ஒரு முஸ்லிம் தான் முதலமைச்சராக வருவார் அதன் பின்பு வீதிகளில்
குறைகூறி திரிவதில் எதுவித பயனும் இல்லை.
தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம் அரசியல் ஆதிக்கத்தை குறைக்க வேண்டு மானால்
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் ஒரு தமிழனுக்கு வாக்களித்து முதலமைச்சராக்க
வேண்டும். வெற்றி லைக்கும் வாக்களித்து மூன்று விருப்பு வாக்குகளையும் அரசாங்கத்தின்
நேரடிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பின் நிறுத்தப்பட்டுள்ள
தமிழனுக்கே வழங்கவேண்டும். இல்லாவிட்டால் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காக
காத்தான்குடியிலோ ஏறாவூரிலோ அல்லது ஓட்டமாவடியிலோ காவல் நிற்கும் நிலை ஏற்படும்.