கிழக்கு மாகாண அதிகாரத்தை கோரி நிற்பது வேடிக்கையானது!
வடக்கில் கைப்பற்றிய உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தையே சீராக நடத்த முடியாத
நிலையில் தமிழ் கூட்டமைப்பு;
கிழக்கு மாகாண அதிகாரத்தை கோரி நிற்பது வேடிக்கையானது!
அரச எதிர்ப்பு அரசியலை தொழிலாக நடத்துபவர்களால் அரச நிர்வாகத்தை கையாள முடியுமா?
முஸ்லிம்களை அன்று உதறித்தள்ளியவர்கள் இன்று அரியாசனம் ஏறுவதற்காக அவர்களை அரவணைக்க
ஆசை வார்த்தை கூறி வருவதாகவும் விசனம்
எம்.சுஐப், வி. அருள்செல்வன்
சாதாரண உள்ளூராட்சி மன்றங்களில் கூட அரசின் நிர்வாகப் பொறிமுறையைச் சரியாகக் கொண்டு
நடத்த முடியாத தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மாகாண நிர்வாகத்தைக் கோருவது எந்த
விதத்தில் நியாயமாகுமென்று புத்தி ஜீவிகள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அரச எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்துக் கொண்டு அரசின் நிர்வாக இயந்திரங்களை அவர்களால்
கிரமமான முறையில் செயற்படுத்தவே முடியாது. இதற்கு வடக்கில் அவர்கள் கைப்பற்றிய சில
உள்ளூராட்சி மன்றங்கள் நல்ல எடுத்துக்காட்டாகு மென்றும் புத்திஜீவிகள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.
பூநகரி, யாழ்ப்பாணம், வவுனியா முதலான பல உள்ளூராட்சி சபைகளைப் பொறுப்பேற்ற சில
மாதங்களிலேயே அவற்றின் நிர்வாகத்தை சீர்குலையச் செய்தனர். அரச எதிர்ப்பு
செயற்பாட்டின் விளைவாக குறைந்தது அவர்களின் சொந்தக் கட்சி அங்கத்தினர் களிடையேயும்
இணக்கப்பாடான அரசியலை கூட்டமைப் பினரால் கொண்டு நடத்த முடியவில்லை. இந்த
இலட்சணத்தில் கிழக்கில் கூட்ட மைப்பினர் மாகாண சபைத் தேர்தலில் தமக்கு
வாக்களிக்குமாறு கேட்கின்றனர். உண்மையில் தீர்க்கதரிசனமற்ற முறையில் ஐந்து
தசாப்தங்களாக எதிர்ப்பு அரசியல் நடத்திவந்ததால் மக்கள் எந்தப் பயனையும் அடையவில்லை
என்பதே வரலாறு. ஆகவே,அதே அரசியல் முன்னெடுப்புக்காக மீண்டும் மக்களைத் தவறாக
வழிநடத்த மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமிழ் மக்கள் துணை போகக் கூடாதென்றும்
சுட்டிக்காட்டியுள்ள தமிழ்ப் புத்தி ஜீவிகள், எதிர்வரும் தேர்தலில் சிந்தித்து
செயற்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர். இதுவிதமிருக்க,
தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் வடக்கு, முஸ்லிம்களுக்கான தென்கிழக்கு
மாகாண சபைகள் பற்றி கிழக்குத் தேர்தல் மேடைகளில் பிரஸ் தாபித்துவருவது குறித்து
முஸ்லிம் புத்திஜீவிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். காலாவதியாகிவிட்ட
தீர்வுகள் பற்றி தேர்தல் மேடைகளில் சம்பந்தன் ஐயா பேசுவது சந்தர்ப்பவாதப்
பேச்சுக்களாஎன்ற கேள்வியும் எழுந்து நிற்கின்றது. வட புலத்திலிருந்து வெளி
யேற்றப்பட்டு சுமார் 22 ஆண்டுகளுக்கு மேலாக அகதி முகாம்களில் வாழும் முஸ்லிம்களின்
மீள்குடியேற்றம் தொடர்பாக தமிழ் - முஸ்லிம் ஒற்றுமைக்காக மேடைகளில் குரல் கொடுக்கும்
தமிழ்க் கூட்டமைப்பினர் ஏதாவது உருப்படியான திட்டங்களை தெரிவித்தனரா? வடமாகா ணத்தில
மீள்குடியேறச் செல்லும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு இன்னுமே தடையாகவுள்ள
ஆயுதக் குழுக்களிலிருந்து ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்து எம். பிக்களாகவுள்ள தமிழ்க்
கூட்டமைப்பு முக்கியஸ்தர்களின் நடவ டிக்கைகளை அந்த தலைமை கண்டும் காணாதது போல்
இருப்பதன் மர்மம் தான் என்ன? சுனாமி பொதுக்கட்டமைப்பில், சிரான் அமைப்பில்
முஸ்லிம்கள் புறக் கணிக்கப்பட்டபோது தமிழ்க் கூட்டமைப்பு வாளாவிருந்தன் நோக்கம்
என்ன?
ரணில் அரசாங்கத்துக்கும் புலிகளுக்கு மிடையில் வெளிநாடுகளில் இடம்பெற்ற பல்வேறு
பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் தனித்தரப்பு, சமதரப்பு கோரிக்கைகள் எல்லாம் எழுந்த
போது தமிழ்க் கூட்டமைப்பு மெளனம் சாதித்தது ஏன்? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்
தற்போதைய அரசுக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்கும் அண்மையில் நடந்த பேச்சுவார்த்தைகளில்
முஸ்லிம்களும் பங்குபற்ற வேண்டுமென முஸ்லிம் தலைவர்கள் எவ்வளவோ கரணம் போட்டும்
அதற்கு இடமளிக்காத தமிழ்த்தலைமை இப்போது சிறுபான்மை யினத்தின் ஒற்றுமைபற்றியும்
விடுதலை பற்றியும் மேடைகளில் பேசுவதேன்?
கிழக்கில் தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை காலாகாலமாக இருந்து வருகின்றது. எனவே புதிதாக
தேர்தல் மேடைகளில் அரசியல் வாதிகள் அதனை சுட்டிக்காட்ட வேண்டிய எந்த அவசியமும்
கிடையாதென மக்கள் தெரிவிக்கின்றனர். சுட்டிக்காட்டுகின்றனர். கிழக்கு மாகாண சபையை
கைப்பற்று வதற்காக முஸ்லிம்களுடன் புதிதி¡கக் கைகோர்த்து நிற்கும் தமிழ்த் தலைமைகள்
கடந்த காலச் செயற்பாடுகளை அசை போட்டுப்பார்க்க வேண்டுமென கிழக்கு மாகாண மக்கள்
தெரிவிக்கின்றனர். கிழக்கு மாகாண சபையை தமிழ்த்தலை மைகளும் முஸ்லிம் தலைமைகளும்
இணைந்து கைப்பற்றி விட்டால் சிறு பான்மை மக்க்ளின் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா?
இந்தக் கேள்விகளுக்கு இவர் களின் பதில்தான் என்ன?
வடக்கு- கிழக்கு இணைப்பை வலி யுறுத்தும் தமிழ்த்தலைமைகளும் அந்தப் பிரிப்பை மனதார
நேசிக்கும் முஸ்லிம் தலைமைகளும் ஒன்று சேர்ந்து மாகாண ஆட்சியை சிறப்பாக வழிநடத்த
முடியுமா? இது சாத்தியமா என்ற கேள்விகள் எல்லாம் எழுந்துள்ளன.
எனவே மக்களை திசை திருப்பி கிழக்கை மீண்டும் அழிவுக்கு இட்டுச் செல்வதை கிழக்கு
அரசியல்வாதிகள் கைவிட வேண்டுமென்பதே புத்திஜீவிகளின் உருக்கமான வேண்டுகோளாகும்.