புத் 64 இல. 27

நந்தன வருடம் ஆனி மாதம் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 11

SUNDAY JULY 01 2012

 

மீண்டுமொரு தேர்தல் மழையில் நனையவுள்ள

மீண்டுமொரு தேர்தல் மழையில் நனையவுள்ள

மக்களை நோக்கிய வாக்குறுதி ஜhலம்!

மஜிண்டும் ஒரு தேர்தல் மழைக் காக அரசியல் மேகம் கருக் கட்டத் தொடங்கியிருக்கிறது. மலையகத்தின் ஒரு பகுதி மக்களும் வாக்குறுதி மழையால் மீண்டும் நனை யப் போகிறார்கள். அரசியல் கட்சிகளும் தொழிற்சங்க அமைப்புகளும் தமது பலத்தை உரசிப் பார்த்துக்கொள்வதற் கான ஒரு சாணைக்கல்லாக அமை கிறது இந்த மாகாண சபைத் தேர்தல்.

மலையகம் வாழ் தமிழ் மக்களின் அரசியல், சமுக, பொருளாதாரக் கட்ட மைப்பில் ஒரு புரட்சியை ஏற்படுத்த எண்ணியவர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் என்பதை ஏற்காமல் இருக்க முடியாது. ஆனால், அவரை குறைகூறுவோரும் உளர். வீ.கே. வெள்ளையன், கோ. நடேசய்யரைப் போன்று மக்களை கருத்தியல் ரீதியாக மாற்றி விழிப்புணர்வடையச் செய்ய வேண்டும் என்ற வேட்கை தொண்ட மானிடமும் இருந்தது. ஆனால் அவ ரின் அணுகுமுறை வேறாக இருந்தது. அதனால் அவரைப் படிப்பதற்கு சிலருக்கு முடியாமற்போனது என்றே கூறவேண்டும்.

தோட்டப்புற வாழ்வியல் சூழலிலிரு ந்து தொழிலாள சமூகத்தை விடுவித்து விட வேண்டும் என்பதற்காக அவர் எத்தனையோ செயற்றிட்டங்களை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தியும் காண்பித்தார். வீடமைப்பு, போக்குவர த்து, கல்வித்துறை மேம்பாடு, ஆசிரிய நியமனம், வாழ்வியல் வளம் எனப் பல்வேறு துறைகளையும் மேம்படுத் துவதற்குத் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தினாலும் அவரின் மறைவு க்குப்பின்னர் மலையக தொழிற்சங்க, அரசியல் கட்டமைப்புகளில் சிதைவு கள் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது.

தொழிற்சங்கத்தை மறுதலித்துவிட்டு அரசியல் அத்திவாரத்தை உறுதிப்படு த்த முடியாது என்பதால் - அநேகர் தொழிலாளர்களாக இருந்தபடியால் - தனியாக ஓர் அரசியல் பிரிவையும் வைத்தார். ஆனால், காங்கிரஸிலிருந்து வெடித்துச் சிதறி வெளிவந்த பெரியசாமி சந்திரசேகரன் முழு மூச்சான அரசியல் மட்டுமே மலையகத்தில் விடிவை ஏற்படுத்தும் என்று சொன் னார். இறுதியில், தொழிற் சங்கம் இல்லாமல் அரசியலை நகர்த்த முடியாது என்று உணர்ந்தார். அதன் காரண மாகத்தான் அரசியல் ஒரு பிரிவானதே யொழிய கட்சியாகவில்லை. சேவல், மயில், மண்வெட்டியெல்லாம் நிலை பெற முடியாமல் மறைந்து போயின. இதற்குக் காரணம், மலையக அரசியலை தொழிலாள சமூகத்துடன் மாத்திரம் வரையறுத்தமையாக இருக்கலாம். இன்று மீண்டும் ஒரு கூட்டணிக்கான முயற்சி. அது காலத்தின் தேவை; கட்டாயம்!

தோட்டக் கட்டமைப்பி லிருந்து வெளிவந்து தொழிலாள சந்ததியென்ற நாமத்தைத் துடைத்தெறிய முன்வந்துள்ள ஆசிரிய சமூகம், மலையக நகரங் களில் வாழும் வர்த்தக சமூகம், தோட்டங்களிலி ருந்து வேறோடு பிடுங்கிக் கொண்டு நகரங்களில் தமது இருப்பை நாட்டியி ருப்பவர்கள். கடைகள், வர்த்தக நிலையங்கள், ஆடைத்தொழிற் சாலைகள் ஆகியவற்றில் கடமையாற் றும் இளைஞர், யுவதிகள் என்போரை தூர வைத்துவிட்டு, தோட்டங்களை மட்டும் மையப்படுத்(துவதால்)தியதால் இந்தத் தொடர் தோல்வி. அரசியல் தலைவர்களும் தொழிற்சங்கத் தலைமை களும் என்னதான் தொழிலாள சமூக த்தை மூளைச் சலவை செய்தாலும், அவர்கள் தோட்டத்திற்கு வெளியில் உள்ள தம் பிள்ளைகளால் மீள் சலவை செய்யப்படுவார்கள்.

இஃது, அன்று செளமியமூர்த்தியார் இந்திய வச்சாவளி மக்கள் பேரணியை ஆரம் பித்த காலச் சூழலைவிட, இன்று பாரிய அளவில் மாற்றமடைந்திருக் கிறது. எனவே மலையகத்தின் ஒட்டு மொத்த சமூகப் பிரிவினரையும் உள்ளடக்காத அரசியல் பயணம் வெற்றியைத் தருவதில்லை என்பதே உண்மை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் மறுக்க முடியாத சக்தியாக விளங்குகிறது. எனினும் பிளவுகள், பிரிவுகள் என்பதைத் தவிர்க்கவும் இயலாது. அதேபோன்று மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டமைப்பாக இல்லாவிடினும் தனிப் பெரும் சங்கமாக விளங்குகிறது. தொழிலாள சமூகம்சார் அனைத்துக் கட்டுமானங்களும் காங்கிரஸிற்குள் கட்டுண்டு கிடக்கின்றன. விரும்பியோ விரும்பாமலோ காங்கிரஸ் ஊடாகவே எந்தத் திட்டத்தையும் செயற்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுத் தப்பட்டிருக்கிறது. இதனைத் தனி வழி செல்வோரால் சகித்துக்கொள்ள இயலாதுதான். என்றாலும் இலங்கை தொழிலாள காங்கிரஸைத் தவிர்த்த ஓர் அரசியல் கூட்டணி மலையகத்தில் சாத்தியமாகுமா? அது மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்துமா, வெற்றியைத் தருமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அரசியலுக்காகத்தான் சங்கம் என்று சொன்னாலும், இன்று சங்கத்தை நடத்துவதற்காகவே அரசியல் செய்யும் தலைவர்களும் இருக்கிறார்கள். மிகக் குறுகிய காலத்தில் அரசியலுக்கு வந்த திகாம்பரம், பிரபா கணேசன், வடிவேல் சுரேஷ் போன்றோரும் சங்கம் அமைத்து தமிழ் வளர்க்கிறார்கள். இதில் மனோ கணேசன், புத்திரசிகாமணி, அருள்சாமி ஆகியோரும் விதிவிலக்கானவர்கள் அல்லர். இந்த இலட்சணத்தில்தான் மாகாண சபைத் தேர்தலுக்கான ஒரு கூட்டணியை அதுவும் இ.தொ.கா அல்லாத - உருவாக்கு வதற்கு முயற்சி மேற்கொள் ளப்படுகிறது.

தொழிற்சங்கப் பேதங்களுக்கு அப்பால், மலையகத்தில் பல மான ஓர் அரசியல் கூட்டணி உருவாக்கப்பட வேண்டும் என்பது காலாகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எனினும் தேர்தல் காலங்களில் அதற்கான முயற்சிகள் துளிர்விட்டபோதிலும், பின்னர் அவை துளிர்விடாமல் கருகிவிடுகின்றன. வெளிப்படைத்தன்மையுடன் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளைப் பிரதிபலிக்காமல், தத்தம் கட்சிகளுக்கு ஓர் உறுப்பினரையேனும் தெரிவு செய்துகொள்ள இயலுமா என்ற ஒரே எதிர்பார்ப்பை மட்டுமே சங்கங்கள் தமது கூட்டணி அபிலாஷையாகக் கொண்டிருக்கின்றன. அதன் காரணமாகவே, கூட்டணி அமைக்கும் முயற்சி கூத்தணியாக மாறுகிறது.

பலமுள்ள ஆளும் கட்சியிலோ அல்லது பிரபல எதிர்க்கட்சியிலோ இணைந்து போட்டியிடுவதென்றாலும் ஆசனப் பகிர்வே அவர்களின் அடிநாதமேயன்றி மக்கள் நலன் அல்ல. எங்ஙனமேனும் சலுகைகளைப் பெற்றுவிடுவதற்குப் புதிய புதிய உத்திகளைப் பிரயோகிக்க முயற்சித்தாலும் சமூக மேம்பாட்டு ரீதியிலான கோரிக்கைகள் எதுவும் பெரிதாக முன்வைக்கப்படுவதில்லை என்ற கல்வியாளர்களின் குற்றச்சாட்டு மலையக அரசியல், தொழிற்சங்கத் தலைமைகள் மீது தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. அதேபோல், தேர்தலுக்குப் பின்னர் மக்களிடமிருந்து தொடர்பாடல் ரீதியாக அந்நியப்பட்டுச் செல்வதும், வலுவான அரசியல் கருத்தியலைக் கட்டியெழுப்ப முடியாமைக்கான காரணமாகும். ஆனால், மீண்டும் மக்கள் செல்வாக்கைப் பெறுவதற்காக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்குவதும், மறு தரப்பினரை விமர்சிப்பதற்காகப் பரஸ்பரம் சேற்றை வாரி இறைத்துக்கொள்வதும் இவர்களது பயணம் மக்களுக்குச் சாதகமானது அல்ல என்பதை உணர்த்திவிடுகின்றன.

ஆகவே, மலையகத் தொழிற்சங்க அமைப்புகள் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலை மையமாகக் கொண்டு பொதுவான கூட்டணியை உருவாக்குவதற்கு முயற்சிப்பதாயின், அது நிரந்தர அரசியல் கூட்டணிக் கான அடிக்கல்லாக இருக்க வேண்டும்.

தொழிலாளர்கள், அவர் தம் வாரிசு கள், கல்வியாளர்கள், வர்த்தக சமூகத் தினர், ஊடகவியலாளர்கள் எனப் பரவலான கருத்தாடல்களை ஒருமுகப் படுத்தி அதன் பின்னர் அரசியல் கூட்டணிக்கு அடித்தளம் இடவேண்டும்.

மலையக மக்களின் வாழ்வாதாரம், சமூக, அரசியல், கலை, பண்பாட்டு விழுமியம், பொருளாதாரம் எனக் கூட்டணியின் சிந்தனை விரிவதற்குப் பலதரப்பட்டோரின் கருத்துகளையும் உள்வாங்க வேண்டும். அப்போதுதான் தேர்தலில் வெற்றுக்கனியை இணைந்து பறிக்க முடியும். அது எப்படியென் பதை அடுத்தவாரம் பார்ப்போம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.