எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் எதனடிப்படையில் போட்டியிடுவது
என்பது குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்பட வில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வெளிநாடு சென் றுள்ள கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்
நாடு திரும்பியதும், இதுகுறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கட்சியின்
பொருளாளரும், எம்.பி. யுமான அஸ்லம் மொஹமட் சலிம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் கூட்டணியாக போட்டியிடுவதாயின், முதலமைச்சர் வேட்பாளராக
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் எனவும்,
இதுகுறித்துகட்சித் தலைமை ஜனாதிபதியுடன் அடுத்த சில நாட்கள் பேச்சு
நடத்தவுள்ளதாகவும் மொஹமட் சலிம் எம்.பி தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண
சபையில் போட்டியிடுவது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பிரதான
எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக
அரசியல் வட்டாரங்களின் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இதுகுறித்து மொஹமட் சலிம் எம்.பியிடம் கேட்டபோது, அவ்வாறான எந்தப்
பேச்சுக்களும் இடம்பெறவில்லையென மறுத்துவிட்டார்.