புத் 64 இல. 27

நந்தன வருடம் ஆனி மாதம் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஷஃபான் பிறை 11

SUNDAY JULY 01 2012

 

வாய்விட்டு சிரிப்போம்

வாய்விட்டு சிரிப்போம்

“வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டு போகும்” என்பது முதுமொழி நாம் வாழ்வில் எத்தனையோ துன்ப துயரங்களை அனுபவக்கி றோம். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கிறது. உடல் ரீதியான தாக்கம் மனரீதியான தாக்கம் என்பன வாழ்வில் தடைக் கற்களாக முன்நிற்கும். ஒருவரின் முகம் மலர்ச்சி யாக இருப்பதற்கு சிரிப்பு ஒன்றே போதுமானது.

“பொன்னகையை விட புன்னகைக்கு வலிமை அதிகம்”

ஒரு நாளில் நாம் எத்தனை தடவைகள் சிரித்திருப்போம் என ஒரு கணம் சிந்திப்போமே யானால் அப்போது தெரியும் சிரிப்பின் வலிமை பற்றி வான்புகழ் கொண்ட வள்ளுவப்பெருமானும் கூறத்தவரவில்லை.

“இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அதொப்பதில்” சிரித்து மகிழ்வாக இருப்பபவர்களுக்கு அடிக்கடி நோய்கள் வராது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அதற்காக பிறர் நம்மைப் பார்த்து கேலிசெய்து சிரிக்குமளவுக்கு நம் செயற்பாடுகள் அமைந்துவிடக்கூடாது.


ஒலிம்பிக் சின்னத்தில் காணப்படும் ஐந்து நிற வளையங்கள்

கறுப்பு - ஆபிரிக்காக் கண்டம்
நீலம் - ஐரோப்பாக் கண்டம்
மஞ்சள் - ஆசியாக் கண்டம்
பச்சை - அவுஸ்திரேலியாக் கண்டம்
சிவப்பு - அமெரிக்காக் கண்டம்


பூங்கா

பூத்தது பூத்தது பூங்கா
பூத்தரும் பூத்தரும் பூங்கா
பூவையர் போற்றிடும் பூங்கா
பூக்களின் இராச்சியம் பூங்கா!

***

மாசிலாத் தேன் தரும் பூங்கா
மாட்கள் மேவிடு மலர்களின் பூங்கா
மாநில(ம்) மேகமும் காணலாம் பூங்கா
மாந்தரை யீர்த்திடும் மணந்தரும் பூங்கா!

***

பாரெனப் பாரெனப் ‘பா’ தரும் பூங்கா
பார்த்ததும் பார்வையை யீர்க்கிற பூங்கா
பாரினில் பசுமைகள் சேர்க்கிற பூங்கா
பார்த்திடப் பரவசம் நேர்கிற பூங்கா


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.