சிறுவர் தொழிலுக்கு எதிரான வாரமாக ஜூன் 12 முதல் 19 ஆம் திகதி வரை
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலைகள், கல்விக் காரியாலயங்கள், சிறுவர் நன்னடத்தை
அதிகார சபை, மனித உரிமை கள் ஆணைக்குழு, கிராம மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,
பெருந்தோட்ட முகாமைத் துவம், பொலிஸ் நிலையங்கள், பிரதேச செயலக அதிகாரிகள் போன்ற
அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளிடையே சிறுவர்களை பாதுகாத்தல், நிறுவனங்களின்
பொறுப்புக்கள், கடமைகள் தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் விளக்கப்படுத்தலையும்
மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
சிறுவர் தொழில், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிராக பெருந்தோட்ட மக்களிடையே
விழிப்புணர்வு நடவடிக்கைகளை பெரும்பாலான அரச சார்பற்ற நிறுவனங்கள் மேற்கொண்டு
வருகின்றன. மனித அபிவிருத்தி தாபனம் அடிமட்ட மக்கள் மத்தியில் மாத்திரம்
விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சம்பந்தப்பட்ட அரசாங்க நிறு
வனங்களிடையேயும் நபர்களிடையேயும் அறிவூட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
சிறுவர் தொழிலுக்கு எதிரான பிரசாரத்தை இக்காலப் பகுதியில் கண்டி, கேகாலை, நுவரெ லியா,
அம்பாறை போன்ற மாவட்டங்களில் பாடசாலைகள், கல்விக் காரியாலயங்கள், சிறுவர் நன்னடத்தை
அதிகார சபை, மனித உரிமை கள் ஆணைக்குழு, கிராம மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,
பெருந்தோட்ட முகாமை த்துவம், பொலிஸ் நிலையங்கள், பிரதேச செயலக அதிகாரிகள் போன்ற
நிறுவனங்களுடன் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன. மனித
அபிவிருத்தி தாபனம், பெண்கள் ஒத்துழைப்பு ஒன்றியம், பிரஜைகள் கண்காணிப்பகம், மற்றும்
கிராமிய மட்ட அமைப்புக்களின் உறுப்பினர் களுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.
உலகில் பல்வேறு வறுமையான நாடுகளில் பாடசாலை செல்ல வேண்டிய சிறுவர்கள் தொழில்களில்
ஈடுபட்டு வருவதனால் அவர்களின் உடல், உள நலம் பாதிக்கப்படு வதுடன் சிறுவர்களின்
உரிமைகளும் மீறப்படுகின்றன.
இலங்கையை பொறுத்தவரையில் சிறுவர் ஊழியம் வேகமாக அதிகரித்து வருவதுடன் அது பெரும்
பிரச்சினையாகவும் தலை தூக்கியுள்ளது. குறிப்பாக மலையக சிறுவர்கள், யுத்தத்தினால்
பாதிப்புக்குள்ளான பகுதிகள், கரையோர, மற்றும் கிராமங்களில் சிறுவர் உழைப்பு ஒரு
பிரச்சினையாக வளர்ந்து வருகின்றது. சிறுவர் தொழிலாளர்கள் அதி கரிப்பும்
சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களும் ஒப்பீட்டு ரீதியில் மலையக பெருந்தோட்ட
சமூகத்திலேயே அதிகமாகக் காணப்படுகின்றது.
உயிர் வாழ்தல், பாதுகாப்பு, அபிவிருத்தி, பங்குபற்றல் போன்ற விடயங்கள் கவனத்திற்
கொள்ளப்படல் வேண்டும் என சர்வதேச சிறுவர் உரிமைகள் சாசனம் வலியுறுத்தி யுள்ளதுடன்,
பதினெட்டு வயதுக்கு குறைந்த சகலரும் சிறுவர்கள் என வரை விலக் கனப்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பதிலாக அவர்களை
வேலைக்கமர்த்துதல், பாலியல் துஷ்பிரயோகங்கள், கடத்தல் மற்றும் மோசடி, அடித்தல்,
துன்புறுத்தல், கொலை செய்தல் என பல பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருகின்றன.
ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் சாசனம் உறுப்புரை 32(1) இல் சிறுவர் தொழில்
ரீதியாக சுரண்டப்படுதல் தொடர்பாக வலியுறுத்தும் அதேவேளை உறுப்புரை 28, 29 இல்
சிறுவர்களின் கல்வி உரிமை தொடர்பாக வலியுறுத்துகின்றது. அத்தோடு 14 வயதுக்குட்பட்ட
சகலருக்கும் இலவசக் கல்விக் கொள்கையை அரசு நடைமுறைப் படுத்துகின்றது. எனினும்
மலையகம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் அதிகரித்து வரு
கின்றது. இவ்வாறு வேலைக்கு அமர்த்தப்படும் சிறுவர்கள் பாலியல் சுரண்டல்களுக்கு
உள்ளாக்கப்படுகின்றனர். மர்மமான முறையில் கொலை செய்யப்படுவது, சிறுமிகள் சிறு
பராயத்தில் கர்ப்பம் தரித்தல் போன்ற பல்வேறு பிரச்சினை கள் அதிகரித்து வருகின்றது.
சிறுவர்களை வேலைக்கமர்த்துவதற்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்ற
போதிலும் பிரச்சினைகள் தொடர்கின்றன. ஏதாவது பிரச்சினை என்றால் பெற்றோர் வேலைக்கு
அனுப்பிய பிள்ளை களை உடன் வீட்டுக்கு அழைத்து வருவதும் சில நாட்கள் கடந்தபின்
மீண்டும் சிறுவர் தொழிலாளர்களாக நகர்ப்பகுதிகள், செல்வந்தர் வீடுகள் மற்றும்
கடைகளுக்கு தொழிலுக்காக அனுப்புவதை காணக்கூடியதாக உள்ளது.
இவ்வாறான நிலைமைகளை கருத்திற்கொண்டு மனித அபிவிருத்தி தாபனம் சிறுவர் உழைப்பிற்கு
எதிராக செயற்பட்டு வருவதுடன் ‘கல்வி சிறுவர்களது உரிமையாகும், எமது கடமையாகும்’
என்ற தொனிப்பொருளில் பல செயற் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
சிறுவர் துஷ்பிரயோகத்திற்குள்ளான பல சிறுவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும்
சட்ட மற்றும் புனர்வாழ்வு உதவிகளை செய்து பாதிக்கப்பட்ட சிறுவர்களை மீளவும் பாட
சாலைகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் சிறுவர் குழுக் களை
அமைத்து மலையகப் பாடசாலைகளில் கல்வி அபிவிருத்தி சார் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு
வருகின்றது.
இதன் அடிப்படையில் சிறுவர் தொழிலை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் மலையக மக்களிடையே
சிறுவர்களிடையே சிறுவர் தொழிலுக்கு எதிரான அல்லது பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர்களை
சித்திரவதை செய்தல் போன்றவற்றுக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.