ஸ்ரீ ஜவஹர்லால் நேரு அவர்களின் ஆலோசனையின் கீழ், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி
மக்கள் தமது தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை ஸ்தாபித்தனர்.
ஜவஹர்லால் நேருவின் ஆலோசனை யின் கீழ் தோற்றம் பெற்ற எஸ். தொண்ட மான் தலைமையிலான
இ.தொ.காவிற்கு பின்னர் பல புதிய அரசியல் கட்சிகளும், தொழிற் சங்கங்களும் தோற்றம்
பெறத் தொடங்கின. அதன் பிரதிபலிப்பாக ஏ. அசீஸ், வி.கே. வெள்ளையன், கவிஞர் சி.வி.
வேலுப்பிள்ளை மற்றும் எஸ். நடே சன் போன்றோர் மலையக அரசியலில் புதிய பரிமாணங்களை
தோற்று வித்தனர். 1960 களில் பெருந்தோட்டங்களுக்கு அப்பாலிருந்த நகர்ப்புற
இளைஞர்களினு டைய அரசியல் பங்கேற்பிற்கு மறைந்த இர. சிவலிங்கம் போன்ற தலைவர்கள்
காரணமாக இருந்தனர். அதன் பின்னர் 1980 இல் இளைஞர் எழுச்சியின் காரண மாக ஏற்பட்ட
சிந்தனைகளால், பல புதிய அரசியல் கட்சிகள் மலையகத்தில் தோன் றின. மறைந்த பெ.
சந்திரசேகரன் தலைமை யில் புதிய இலட்சியங்களைக் கொண்ட மலையக மக்கள் முன்னணி, மலையக
தொழிலாளர் முன்னணி போன்ற புதிய அரசியல் தொழிற்சங்க இயக்கங்களும் 1989 களின்
இறுதியில் ஆரம்பிக்கப்பட்டன.
இதனால் இளைஞர்களின் அபிலாசை களை பிரதிபலிக்கின்ற கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகள்
மலையக அரசிய லில் முக்கியத்துவம் பெறத் தொடங்கின.
அண்மைக்காலங்களில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க
முன்னேற்றம் ஏற்பட்டுள் ளதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின் றேன். இலங்கையிலுள்ள
1.4 மில்லியன் இந்திய தமிழ் வம்சாவளியினரில் 70 வீத மானோர் பெருந்தோட்ட துறைகளில்
வசிக்கின்றனர். உள்ளக மற்றும் வெளியக இடப்பெயர்வு, குறைந்தபட்ச சமூக நகர்ச்சி போன்ற
காரணங்களினால் தேயிலை மற்றும் இறப்பர் பெருந்தோட்டங்களில் வதியும் மக்களின்
விகிதாசாரம் வீழ்ச்சிய டைந்துள்ளது.
துரதிஷ்டவசமாக இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்குமிடையே கைச்சாத்
திடப்பட்ட பல்வேறு உடன்படிக் கைகளின் காரணமாக எமது சமுதாயம் துண்டாடப்பட்டுள்ளது.
இவ்வுடன்படிக்கை களின் விளைவாக 1980 களில் சுமார் 700,000 இந்திய வம்சாவளியினர்
இந்தியா வுக்கு திருப்பியனுப்பப்பட்டனர். அது மாத்திரமன்றி இலங்கையின் வடக்கு,
கிழக்கு மாகாணங்களிலும் சுமார் 7000 குடும் பங்கள் குடியேறியுள்ளமை மறுக்க முடியாத
உண்மையாகும். இங்கு சுதந்திரம் கிட்டியது முதல் இந்திய சமூகத்தினர் நாடற்றோராக
மாற்றப்பட்டதுடன் குடியு ரிமை மற்றும் வாக் குரிமை என்பன பறிக்கப்பட்டு அவர்கள்
பிரதிகூலமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். புதிய பிரஜா வுரிமைச் சட்டங்கள்
உருவாக்கப்பட்டு குடியுரிமை மற்றும் வாக்குரிமை என்பன படிப்படியாக 1980 களின்
பின்னர் எமக்கு வழங்கப்பட்டு இந்த நிலை அகற்றப்பட் டது. தமது தேர்தல் தொகுதிகளில்
குறை ந்த வாக்கு பிரதிநிதித்துவம் காரணமாக சுமார் 25 வருடங்களாக பாராளுமன்றத் தில்
தமது பிரதிநிதித்துவத்தை இழந்திருந் தனர். 1948 ஆம் ஆண்டு வாக் குரிமை
பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் பிரதிநிதித்துவத்தை எமது சமூகம் இழந்து வந்தது.
வாக்குரிமை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தில்
முன்னேற்றத்தை அடைந்த னர். இந்திய வம்சாவளிச் சமூகத்தினர் தமது இழந்த உரிமைகளை
மீளப்பெறுவ தற்கு, 1980 களின் பின்னர் இலங்கையின் சகல அரசியல் தலைவர்களும் இச்சமூகத்
திற்கு ஆதரவு வழங்கியுள்ளமையை இங்கு குறிப்பிட வேண்டும். உண்மையி லேயே
பெரும்பான்மையினத்தைச் சேர் ந்த இத்தலைவர்களின் ஆதரவுடனேயே எமது இந்திய வம்சாவளித்
தலைவர்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெ டுத்தனர். இலங்கையில் அதிகாரத்திலிருந்த
சகல தேசிய அரசாங்கங்களும் நாட்டின் சமூக, பொருளாதார அபிவிருத்தியினை மேம்படுத்த,
இந்திய வம்சாவளி அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் தமது ஆதரவினை அவர்களுக்கு
வழங்கினர். எவ்வாறாயினும் இன்று ஆறு பாராளுமன்றப் பிரதிநிதிகள் மட்டும் இருப்பது
போதுமானதல்ல. இலங்கையின் ஐக்கியம் மற்றும் சுயாதிபத்தியம் ஆகிய வற்றுக்கு இலங்கை
வாழ் இந்திய சமுதா யத்தினர் பக்கபலமாக இருந்ததோடு அவர்கள் பயங்கரவாதத்திற்கு
ஒருபோதும் ஆதரவு வழங்கவில்லை. உண்மையிலேயே இலங்கையின் தேசிய அரசியல் நீரோட் டத்தில்
தம்மை முழுமையாக இணைத்துக் கொண்டு தாம் இந்திய வம்சாவளி இலங்கையினர் என்பதை
பெருமையாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். இனம், கலாசாரம் மற்றும் மொழி என்பவற்றால்
அவர்கள் இந்திய வம்சாவளி என்ற போதும் நாட்டுப்பற்று எனும் போது தம்மை இலங்கை யர்கள்
என்று கூற அவர்கள் ஒருபோதும் தயங்கியதில்லை. இலங்கையின் பல்வேறு பிரதான அரசி யற்
கட்சிகளின் அரசாங்கங்களில் எமது தலைவர்கள் அமைச்சர்கள், பிரதியமைச் சர்கள்,
அமைச்சின் செயலாளர்கள், பல் கலைக்கழகப் பேராசிரியர்கள், வெளிநாட் டுத் தூதுவர்கள்
போன்ற முக்கிய பதவி களை வகித்துள்ளனர். எமது சமூகத் தலைவர்களான அமரர் எஸ். தொண்ட
மான், அமரர் பெ. சந்திரசேகரன், ஏ. அkஸ் ஆகியோர் பெரும்பான்மை சமூகத் தினரால்
முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு, அவர்கள் பல்வேறு வழிகளில் கெளரவிக்கப்பட்டும்
உள்ளனர். அவர்கள் அரசாங்கத்தில் முக்கிய பதவி வகித்ததோடு, அரசாங்க கொள்கைகளை
வகுப்பதில் பலத்த செல்வாக்கையும் செலுத்தி யுள்ளனர். இந்தியாவுடன் சிறந்த
நல்லுறவுகளை பேணி எமது சமூக மேம்பாட்டுக்காக உழைத்துள்ளனர்.
இலங்கை அரசியலில் இந்திய வம்சாவளியினர் இன்றியமையாத பகுதி யினராக இருப்பதோடு
நாட்டின் சமூக, பொருளாதார நிலைகளை மேம்படுத்த அளப்பரிய பங்கினை ஆற்றி வந்துள்ள னர்.
இலங்கையின் பெருந்தோட்டப் பொருளாதார அபிவிருத்தியானது அங்கு நகரங்களின் வளர்ச்சி,
வங்கித்துறை, பாதைகள், புகையிரதம், துறைமுகம், இல வசக் கல்வி, இலவச சுகாதார சேவைகள்
போன்றவற்றின் விருத்திக்கும் வழிகோலி யுள்ளது. இந்திய வம்சாவளி தோட்டத்
தொழிலாளர்களின் மிகையான முயற்சியி னால் ஈட்டப்பட்டுள்ள மேற்குறிப்பிடப் பட்ட
துறைகளின் வளர்ச்சிக்கு பங்களிப் புச் செய்துள்ளது என இலங்கைப் பொரு ளியல்
நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அரசியல் மற்றும் அபிவிருத்தி மாத்திர மின்றி
கல்வித்துறையில் அவர்கள் அடைந்த முன்னேற்றமும் இங்கு குறிப் பிடுதல் அவசியமாகும்.
பல தசாப்த காலமாக இச்சமூகத்தின் அங்கத்தவர்கள் கல்வியில் கீழ் மட்ட நிலையிலும்
படிப் பறிவற்றவர்களாக இருந்துள்ளனர். ஆரம்ப பாடசாலைகள் அடிப்படை கல்வியை
வழங்கியதோடு அவை பெருந்தோட்ட முகாமையாளர்களால் பரிபாலிக்கப்பட்டன. உண்மையிலேயே
அவர்களது கல்வி முறை, தேசிய கல்வி முறைக்கு அப்பாற்ச் செயற்பட்டது. 1970 களில்
மாத்திரமே அப்போதய பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்கவிற்கு இர. சிவலிங்கம், எஸ். நடே
சன் ஆகியோர் வழங்கிய ஆலோசனைக் கமைய தோட்டப் பாடசாலைகள் சுவீகரிக் கப்பட்டு தேசிய
அமைப்பில் ஒன்றிணைக் கப்பட்டன. மாணவர்கள் யாவரும் தமது தாய் மொழியான தமிழிலேயே தமது
கல்வியினைத் தொடர்ந்துள்ளமை ஒரு முக்கிய அம்சமாகும்.
பயிற்று மொழியாக பெரும்பான்மை சமூகத்தின் சிங்கள மொழியினை இவர் கள் மீது
திணிப்பதற்கு அரசாங்கம் எவ் வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்பதை இங்கு நான்
குறிப்பிட விரும்பு கின்றேன். பல்கலைக்கழகம் வரை இந்திய வம்சாவளி மாணவர்கள் தமது
கல்வியை தமிழ் மொழியிலேயே தொடர்கின்றனர். ஒருவரின் இனத் தனித்துவத்தின் மையக்
கல்லான மொழிசார் பாரம்பரியங்கள் மற்றும் கலாசாரம் என்பவற்றை பேணிப் பாதுகாத்து
வாழ்கின்றமை இந்திய வம் சாவளி மக்கள் வாழ்க்கையில் தென்படும் சிறப்பம்சமாகும்.
தென்னாபிரிக்கா, பிஜி, சுரினாம் மற்றும் மாற்றினித்தீவுகள் போன்ற நாடுகளில் வதியும்
இந்திய வம்சாவளி போலல்லாது இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினர் இன்றும் தமிழையே பேசு
வதும், தங்களது மூதாதையினரின் கலாசாரம் முக்கியத்துவம் மிக்கதுமான மரபுகளைப் பேணி
வருவதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டும். அண்மைக் காலத்தில் தொடர்ச்சியாக ஆட்சி
செய்த அரசாங்கங்களின் ஆதரவுடன் இந்திய வம்சாவளி சமூகத்தினர் அவர்களுக்கே உரிய
கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி என்பவற்றை
நிறுவியுள்ளமை இச்சமூகத் திற்கு மூன்றாம் நிலை உயர் கல்வியினை வழங்கு வதற்கு
உதவுகின்றது.
இலங்கை அரசாங்கத்தினூடாக சுவீடன், ஜேர்மனி மற்றும் கனடா போன்ற நாடு களிடமிருந்தும்
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற அமைப்புக ளிடமிருந்தும் இந்திய வம்சாவளி
சமூகத் தினர் தமது சமூகத்தின் மேம்பாட்டிற்காக நன்கொடைகள் மற்றும் உதவிகள் என்ப
வற்றைப் பெற்றுள்ளனர். இலங்கையில் இந்திய வம்சாவளி அரசியல் தலைவர்கள் எஸ்.
தொண்டமான் மற்றும் பெ. சந்திர சேகரன் ஆகியோர் அடைந்துள்ள மகத் தான வெற்றி 1980
களிலிருந்து அவர்கள் பெற்றுள்ள நிறுவன அபிவிருத்தியாகும்.
இந்திய வம்சாவளியினரின் கலாசார மற்றும் வரலாற்றுத் தனித்துவத்தைப் பிரதிபலிக்கும்
பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கு இந்திய வம்சாவளிப் புத்தி ஜீவிகள் கருத்து
முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தமக்கெனப் பல்கலைக் கழகமொன்றைத் ஸ்தாபிக்க
வேண்டுமென்ற கோரிக்கையை விடுப்பது இந்திய வம்சா வளித் தமிழ் சமூகத்தினர் கல்வி
ரீதியாக அடைந்துள்ள முன்னேற்றத்தினை எடுத் துக் காட்டுகின்றது. உண்மையிலேயே
கல்வியியல், பொருளாதாரம், புவியியல் ஆகிய மூன்று துறைகளிலும் மூன்று பேராசிரியர்கள்
இச்சமூகத்தில் உருவாக் கப்பட்டுள்ளனர். இது மாத்திரமின்றி பல இராஜதந்திரிகள்,
கல்விமான்கள், வைத்தி யர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பொறியி யலாளர்கள் போன்றோரும்
இந்திய வம்சா வளி சமூகத்தினை உயிர்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளனர்.
கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி, இறக்கு மதி வர்த்தகம் ஆகிய துறைகளில் பிரகா சிக்கும்
பல வர்த்தகத் தலைவர்களையும் இந்திய வம்சாவளி சமூகம் உருவாக்கி யுள்ளது. இவர்களில்
பலர் தமது வியாபார வலைப்பின்னலை உலகெங்கும் வியாபிக் கச் செய்துள்ளமை
குறிப்பிடத்தக்கதோடு, அவர்களின் செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தினால்
பாராட்டப்பட்டுள்ளன. தொழிலதிபர்களான மனோ செல்வநாதன், தெ. ஈஸ்வரன், மறைந்த ஏ.வை.எஸ்.
ஞானம் ஆகியோர் வர்த்தகத்துறையில் உச்ச நிலை யில் செயல்படும் பிரமுகர்களாவர்.
இலங்கையில் வதியும் இந்திய வம்சாவளி தமிழர்களின் தனித்துவம் மற்றும் சுய கெளரவம்
ஆகியவற்றையும் பேணிப் பாதுகாக்க ஒரு இந்திய மரபுரிமை கிரா மத்தை அமைக்க வேண்டுமென்ற
கருத்தை குமார் நடேசன் முன்வைத்துள்ளார். எமது மூதாதையர் விட்டுச் சென்ற கலாசார மர
புரிமையை பேணுதல் மற்றும் அக வணக் கம் செய்தல் போன்றவற்றைக் கொண்ட மரபுரிமை
கிராமமொன்றை அமைக்க வேண்டியுள்ளது. அது மாத்திரமன்றி எமது முதாதையர்களான அந்த
அற்புத மனிதர் கள் தேயிலைச் செடிகளிலுள்ள மொட்டினை பறிப்பதில் காட்டிய திறமையினால்
இலங்கை யினை உலகப்படத்தில் பிரசித்தமான ஒரு இடமாகவும் மாற்றியுள்ளனர். உத்தேசிக்கப்
பட்ட நூதனசாலையில் ஏனைய வரலாற்று ரீதியிலான புகைப்படங்கள் மற்றும் ஓவியங் கள்
என்பனவற்றை காட்சிக்கு வைக்க வேண்டுமென எண்ணியுள்ளனர்.
நிச்சயமாக குமார் நடேசன் அவர்களின் இந்த மரபுரிமை என்ற எண்ணக்கரு இந்திய வம்சாவளி
மக்களின் கீர்த்தியினை மேம்படுத்தும் அதேவேளை, இச்சமுதாயத் தினர் தீர்வுகளை
மேற்கொள்ளும்போது வலுவூட்டல் மற்றும் நம்பிக்கை என்பவற் றையும் ஏற்படுத்தும்
என்பதில் ஐயமில்லை. எனவே இந்த விடயத்தில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அதீத
ஆர்வமும் கரிசனையும் காட்டி இந்த பெறுமதிமிக்க எண்ணக்கருவின் நோக்கத்தினை அடைய உதவ
வேண்டும். இன்று அமைதி தோன்றி யுள்ள இலங்கையில் வெளிநாட்டு முதலீட் டிற்கான
வாய்ப்புகள் ஏராளம் உண்டு. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏராள மான சலுகைகளையும்
அரசாங்கம் வழங்கி வருகின்றது. இலங்கைக்கும் இந்தியாவுக்கு மான வர்த்தகம் மற்றும்
தொழில் தொடர்பு கள் பெரு வளர்ச்சி பெற்று வருகின்றன. இந்நிலையில் உலகளாவிய
வெளிநாட்டு இந்திய முதலிட்டாளர்கள் இதனைக் கருத்திற் கொள்ள வேண்டுகின்றேன்.