புத் 64 இல. 25

நந்தன வருடம் ஆனி மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 26

SUNDAY JUNE 17 2012

 

தெற்காசிய இயற்கை உயிரின வள அமுலாக்க வலையமைப்பு; அங்குரார்ப்பண பிராந்திய ஒன்றுகூடல் இலங்கையில்

தெற்காசிய இயற்கை உயிரின வள அமுலாக்க வலையமைப்பு; அங்குரார்ப்பண பிராந்திய ஒன்றுகூடல் இலங்கையில்

தெற்காசிய இயற்கை உயிரின வள அமுலாக்க வலையமைப்பின் (SAWEN) அங்குரார்ப்பண பராந்திய ஒன்றுகூடல் நிகழ்வு சுற்றுச்சூழல் வள அமைச்சரான அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் விவசாய அபிவிருத்தி அமைச்சரான மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரால் நீர்கொழும்பு ஜெட்லிங் லகூன் ஹோட்டலில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. ஆசியப் பிராந்தியத்தில் இயற்கை உயிரினங்கள் மற்றும் இயற்கை வளங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு எதிராகப் போராடும் பிரதான இலக்குடன் (SAWEN) அமைப்பின் தேசிய மத்திய அமைப்பான இலங்கை இயற்கை உயிரின வளப் பாதுகாப்புத் திணைக்களத்தால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆசியப் பிராந்தியத்தில் இடம்பெறுகின்ற இயற்கை உயிரினங்கள் மற்றும் இயற்கை வளங்களின் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடும் முகமாக ஆசிய வல்லுனர்கள் குழு 2012 மே மாதத்தில் நிறுவப்பட்டிருந்தது.

2011 ஆம் ஆண்டில் பூட்டானிலுள்ள பாரோ நகரத்தில் சட்டவிரோத இயற்கை உயிரின வள வர்த்தகம் தொடர்பான தெற்காசிய வல்லுநர்கள் குழுவின் இரண்டாவது ஒன்றுகூடல் நிகழ்வில் தெற்காசிய இயற்கை உயிரின வள அமுலாக்க வடிவமைப்பு (SAWEN) ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. (SAWEN) அமைப்பின் அடுத்த ஒன்றுகூடல் நிகழ்வு இலங்கையிலேயே இடம்பெற வேண்டும் என இந்த அங்குரார்ப்பண ஒன்றுகூடலில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக தீர்மானித்திருந்தனர்.

2012 ஜூன் 3 முதல் 6 வரை இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில் அனைத்த சார்க் நாடுகள், இன்டர்போல் அமைப்பு, சர்வதேச சுங்க அமைப்பு TRAFFI (இயற்கை உயிரின வர்த்தக கண்காணிப்பு வலையமைப்பு ) சீனா CITES முகாமைத்துவ அதிகாரசபை, அமெரிக்க அரசாங்கம், போதைபொருள் மற்றும் குற்றத்தடுப்புக்களுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு UNODC உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், தொழில்நுட்ப மற்றும் இடைச்செயற்பாட்டு அமர்வுகளும் அடங்கியிருந்தன. இப்பிரதிநிதிகள் அனைவரும் தங்களுக்கிடையில் தொடர்பாடல் வலையமைப்பொன்றை ஏற்படுத்தி செயற்திறன்மிக்க வழியில் அறிவையும், தகவலையும் பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த தளமேடையாகவும் இந்நிகழ்வு அமையப்பெற்றது.

பிராந்தியத்தில் சட்ட அமுலாக்க நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் தெற்காசிய இயற்கை உயிரின வள அமுலாக்க வலையமைப்பின் (SAWEN) வேலைத்திட்ட நிகழ்ச்சி நிரலில் பல்வேறு சாத்தியமான நடவடிக்கைகள் இனங்காணப்பட்டுள்ளன. தகவல் ஆற்றல் மற்றும் தொழில்நுட்பங்களில் காணப்படும் இடைவெளிகளைக் களைவதில் இந்த நாடுகளில் காணப்படுகின்ற தேவைகளைக் குறைக்கும் பொருட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் எவ்வாறு மற்றைய நாடுகளுடன் இணைந்து செயற்படுதல் போன்ற நடவடிக்கைகள் நிகழ்ச்சி நிரலில் அடங்கியிருந்தன. பிராந்தியத்தில் அருகிவருகின்ற உயிரின வகைகளின் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத வர்த்தகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளே இக்கூட்டு முயற்சியின் இலக்காகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.