புத் 64 இல. 25

நந்தன வருடம் ஆனி மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 26

SUNDAY JUNE 17 2012

இவ்வார பலன்

கிரகம் நிற்கும் ராசி நிலை


குரு : இடபம் (நட்பு)
கேது : இடபம் (நீசம்)
ராகு : விருச்சிகம் (உச்சம்)
சூரியன் : இடபம் (பகை)
சனி : கன்னி (வக்கிரம்- நட்பு)
புதன் : மிதுனம் (ஆட்சி)
சுக்கிரன் : மீதுனம் (நட்பு)
செவ்வாய் : சிங்கம் (பகை)
சந்திரன் : மகரம், கும்பம், மீனம், மேடம்
 

17.06.2012 முதல் 23.06.2012 வரை

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா

மேடம்

அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்

மேட ராசிக்காரர்களுக்கு மேடம், சிங்கம், தனுசு, துலாம், விருச்சிகம் இந்த ராசிகளை லக்கினமாகவோ ராசியாகவோ உடையவர்களை கூட்டாளிகளாகத் தேர்ந்தெடுத்து கொண்டால் மனவேற்றுமை இன்றி இறுதிவரை பழகலாம். 3ம் இடத்து புதன் காரணமாக உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன்கவனத்துடன் நடப்பது நன்று. 3ம் இடத்து சுக்கிரன் எதிர்பாராத நல்ல மாற்றத்தை தரலாம்.


இடபம்

கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்

இடப ராசிக்காரர்களுக்கு இடபம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம் இந்த ராசிகளை லக்கின மாகவோ ராசியாகவோ உடையவர்களை கூட்டாளி களாக தேர்ந்தெடுத்துக் கொண்டால் மனவேற்றுமை இன்றி இறுதிவரை பழகலாம். 2ம் இடத்து புதன் காரணமாக தேவையில்லாத பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். 2ம் இடத்து சுக்கிரன் காரணமாக உங்களது பிரார்த்தனை இஷ்டம் நிறை வேறலாம்.


மிதுனம்

மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்

மிதுன ராசிக்காரர்களுக்கு மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், இடபம் இந்த ராசிகளை லக்கினமாகவோ ராசியாகவோ உடையவர்களை கூட்டாளிகளாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் மனவேற்றுமை இன்றி இறுதிவரை பழகலாம். 1ம் இடத்து புதன் காரணமாக உறவினர்களால் மனம் கவலை அடையலாம். 1ம்இடத்து சுக்கிரன் பெண்வழி ஆறுதலை தரலாம்.


கடகம்

புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்

கடகராசிக்காரர்களுக்கு கடகம், விருச்சிகம், மீனம், மேடம், மகரம் இந்த ராசிகளை லக்கினமாகவோ ராசியாகவோ உடையவர்களை கூட்டாளிகளாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் மன வேற்றுமை இன்றி இறுதிவரை பழகலாம். 12ம் இடத்து புதன் காரண மாக எதிர்பார்த்தது கைகூடி வருவது கடினமாக இரு க்கும். 12ம் இடத்து சுக்கிரன் எதிர்பாராத விதத்தில் பணம் வந்து சேரும்.


சிங்கம்

மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்

சிங்கராசிக்காரர்களுக்கு சிங்கம், மேடம், மிதுனம், கன்னி, தனுசு இந்த ராசிகளை லக்கினமாகவோ ராசியாகவோ உடையவர்களை கூட்டாளிகளாக தேர்ந்தெடுத்துக் கொண்டால் மனவேற்றுமை இன்றி இறுதிவரை பழகலாம். 11ம் இடத்து புதன் காரண மாக மனைவி மக்களால் மகிழ்ச்சி ஏற்படும். 11ம் இடத்து சுக்கிரன் பொருளாதாரம் உயரும்.


கன்னி

உத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்

கன்னிராசிக்காரர்களுக்கு கன்னி, தனுசு, மீனம், இடபம், மீதுனம், கடகம், துலாம் இந்த ராசிகளை லக்கினமாகவோ ராசிகளாகவோ உடையவர்களை கூட்டாளிகளாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் மனவேற்றுமை இன்றி இறுதிவரை பழகலாம். 10ம் இடத்து புதன் காரணமாக பொருளாதார ஏற்றம் ஏற்படும். குடும்ப சுகம் மேம்படும். பெண்வழி ஆதரவு உண்டு. 10ம் இடத்து சுக்கிரன் தேவையில்லாத பெய ரைத் தேடித்தரலாம்.


துலாம்

சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்

துலாராசிக்காரர்களுக்கு துலாம், மேடம், மிதுனம், கும்பம் இந்த ராசிகளை லக்கினமாகவோ ராசி யாகவோ உடையவர்களை கூட்டாளிகளாக தேர்ந் தெடுத்து கொண்டால் மனவேற்றுமை இன்றி இறுதிவரை பழகலாம். 9ம் இடத்து புதன் காரணமாக உடல் நலம் பாதிப்படையலாம். 9ம் இடத்து சுக்கிரன் எதிர்பாராத நல்ல மாற்றத்தைத்தரலாம்.


விருச்சிகம்

விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை

விருச்சிக ராசிக்காரர்களுக்கு விருச்சிகம், தனுசு, மேடம், இடபம், சிங்கம், கன்னி இந்த ராசிகளை லக்கினமாகவோ ராசியாகவோ உடையவர்களை கூட்டாளிகளாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் மனவேற்றுமை இன்றி இறுதிவரை பழகலாம். 8ம் இடத்து புதன் காரணமாக குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். 8ம் இடத்து சுக்கிரன் பெண்வழி சுகத்தைத் தரலாம்.


தனுசு

மூலம், பூராடம், உத்தராடம் 1ம் பாதம்

தனுசுராசிக்காரர்களுக்கு தனுசு, மகரம், மீனம், மேடம், சிங்கம், துலாம் இந்த ராசிகளை லக்கினமாகவோ ராசியாகவோ உடையவர்களை கூட்டாளிகளாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் மனவேற்றுமை இன்றி இறுதிவரை பழகலாம். 7ம் இடத்து புதன் காரணமாக குடும்பத்தில் பிரச்சினைகள் தலைதூக்கலாம். 7ம் இடத்து சுக்கிரன் பெண் நண்பர்களால் பிரச்சினையைத் தோற்றுவிக்கலாம்.


மகரம்

உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்

மகரராசிக்காரர்களுக்கு மகரம், கும்பம், இடபம், கடகம், கன்னி இந்த ராசிகளை லக்கினமாகவோ ராசியாகவோ உடையவர்களை கூட்டாளிகளாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் மனவேற்றுமை இன்றி இறுதிவரை பழகலாம். 6ம் இடத்து புதன் காரணமாக உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். 6ம் இடத்து சுக்கிரன் சில தடங்கல்களை தோற்றுவிக்கலாம்.


கும்பம்

அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி, 1,2,3ம் பாதம்

கும்பராசிக்காரர்களுக்கு கும்பம், இடபம், மிதுனம், துலாம், தனுசு, மகரம், மீனம் இந்த ராசிகளை லக்கினமாகவோ ராசியாகவோ உடையவர்களை கூட்டாளிகளாக தேர்ந்தெடுத்து கொண்டால் மன வேற்றுமை இன்றி இறுதிவரை பழகலாம். 5ம் இடத்து புதன் காரணமாக குடும்பத்தில் பிரச்சினை களை தோற்றுவிக்கலாம் 5ம் இடத்து சுக்கிரன் காரணமாக நண்பர்கள் உதவி புரிவார்கள்.


மீனம்

பூரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

மீன ராசிக்காரர்களுக்கு மீனம், கடகம், விருச்சிகம், மேடம், தனுசு, மகரம், கும்பம் இந்த ராசிகளை லக்கினமாகவோ ராசியாகவோ உடையவர்களை கூட்டாளிகளாக தேர்ந்தெடுத்துக் கொண்டால் மன வேற்றுமை இன்றி இறுதிவரை பழகலாம். 4ம் இடத்து புதன் காரணமாக குடும்பசுகம் மேம்படும். 4ம் இடத்து சுக்கிரன் காரணமாக இனசன உறவு மேம்படும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.