கொழும்பு சுகததாச மைதானத்தில் முடிவுற்ற 15வது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர்
விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கை கூடுதலான பதக்கங்களைக் பெற்ற சந்தர்ப்பமாக
அமைந்தது.
34 நாடுகளிளிலிருந்தும் 800 வீர வீராங்கனைகள் பங்குபற்றிய இப்போட்டித் தொடர் மிகவும்
சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
15வது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டி இறுதிநாள் நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக்
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே,
இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோர் கலந்து
கொண்டனர்.
கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் கடந்த 9ம் திகதி பிரதமர் தி.மு. ஜயரத்ன
தலைமையில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஆரம்பமான இந்தப் போட்டி நிகழ்வுகள் 4
தினங்கள் இடம்பெற்றன.
இலங்கை சார்பாக இந்தப் போட்டியில் 110 வீர, வீராங்கனைகள் பங்கேற்றினர். இலங்கைக்கு
400 மீற்றர் ஆண்கள், பெண்கள் போட்டியில் தங்கப் பதக்கமும் உயரம் பாய்தலில் வெள்ளிப்
பதக்கமும், 4x400 பெண்களுக்கான அஞ்சலோட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், 110
மீற்றர் தடைதாண்டி ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும், 3000 மீற்றர் தடைதாண்டி
ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் கிடைக்கப்பெற்றன.
இலங்கை 15வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 18 வருடங்களின் பின் தங்கப் பதக்கம்
பெற்றது குறிப்பிடத்தக்கது. 1994ம் ஆண்டு 100 மீற்றர் ஓட்டத்தில் தமயந்தி தர்ஷாவும்,
200 மீற்றர் ஓட்டத்தில் சுசந்திகா ஜயசிங்கவும் தங்கப் பதக்கம் பெற்றிருந்தனர்.
இம்முறை 400 மீற்றர் ஓட்டத்தில் ஆண், பெண் இரு பிரிவிலும் தங்கம் வென்ற பஸ்யால மஹா
வித்தியாலயத்தைச் சேர்ந்த துனுக் மதுசங்கவுக்கும், கேகாலை சென். ஜோசப் கல்லூரியின்
மாணவியும் இலங்கை மெய்வல்லுனர் குழுவின் தலைவியுமான ஷிவந்தி குமாரி ரத்நாயகவுக்கும்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர்
வாழ்த்து தெரிவித்து இருந்தனர். அதுமட்டுமல்லாமல் தங்கப் பதக்கம் பெற்ற வீரர்களுக்கு
5 இலட்சம் ரூபாவும் வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்றவர்களுக்கு தலா 3 இலட்சம், 1 1/2
இலட்சம் ரூபா பரிசும் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.
ஷிவந்தி குமாரி ரத்நாயக்க கடந்த வருடம் இந்தியாவில் நடந்த கனிஷ்ட பொதுநலவாய
விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கேகாலை மாவட்டத்தில் இருந்து 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற
ஷிவந்திக்கு சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் 5 இலட்சம் ரூபா பரிசு வழங்குவதாக
அறிவித்திருந்தார்.
இதேவேளை 3வது நாள் போட்டியைக் கண்டு களிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகததாச
விளையாட்டு அரங்கிற்கு திடீரென சென்று இலங்கை வீரர்களுக்கு பாராட்டுத்
தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இம்முறை அதிகூடிய பதக்கங்கள் பெற்று சீனா முதலிடத்திலும், சீன தாய்பே 2வது
இடத்திலும் உள்ளன. இலங்கை 7வது இடத்தில் உள்ளது.
இதேவேளை இம்முறை இந்தப் போட்டியில் பங்கேற்க 34 நாடுகளில் இருந்து 800க்கு மேற்பட்ட
வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர்.
அத்துடன் கடைசிநாள் இடம்பெற்ற 5 ஆயிரம், 3 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டிகளில்
இந்திய வீரர்கள் தங்கப்பதக்கம் பெற்றனர்.
பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ்;
களிமண் ஆடுகளத்தில் அசைக்க முடியாத அரசனாக விளங்கும் ரபெல் நடால் டென்னிஸ் முதல்
நிலை வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் தொடரில் ஏழாவது முறையாக
சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்தார். ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் கடந்த
வாரம் நடந்த இறுதியாட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தினார். இதன்
மூலம் 43 ஆண்டுகளுக்குப் பின் தொடர்ந்து நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்
என்ற புதிய சாதனை படைக்கும் ‘ஜாகோவிச்சின் எண்ணம் தகர்ந்தது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், பிரெஞ்ச் பகிரங்க கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் கடந்த
வாரம் முடிவடைந்தது. ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலகின் முதனிலை வீரரான
சேர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2 ஆம் இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ரபேல் நாடாலை
சந்தித்தார். விறுவிறுப்பான இப்போட்டியில் நடால் 6-4, 6-3, 2-6, 1-2 என முன்னிலை
பெற்ற போது மழை காரணமாக ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அடுத்தநாள் மீண்டும் ஆட்டம் நடந்தது. நான்காவது செட்டில் இருவரும் மாறி மாறி
தங்களது ‘சர்விசை’ கைப்பற்றினர். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் 6-4, 6-3,
2-6, 7-5 என போராடி வெற்றியைத் தன்வசப்படுத்தி ஏழாவது முறையாக சம்பியன் பட்டம்
வென்று சாதித்தார். “நடப்புச் சம்பியன் அந் தஸ்தை தக்க வைத்துக் கொண்ட நடால்
முன்னதாக 2005-08-2010-11ல் நடந்த பிரெஞ்ச் பகிரங்கத்தில் பட்டம் வென்றுள்ளார்.
தவிர, கடந்த ஆண்டு நடந்த விம்பிள்டன், அமெரிக்கப் பகிரங்கம் மற்றும் இந்த ஆண்டு
நடந்த அவுஸ்திரேலிய பகிரங்க இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சிடம் கண்ட ஹட்ரிக்
தோல்விக்கு தக்க பதிலடி கொடுத்தார் நடால். முதல் நிலை வீரரான நோவாக் ஜோகோவிச்
இதுவரை பிரெஞ்ச் பகிரங்க தொடரில் கிண்ணம் வென்றதில்லை.
களிமண் ஆடுகளத்தில் என்றும் நான்தான் அரசன் என்று நிரூபித்துவரும் நடால், பிரெஞ்ச்
பகிரங்கத்தில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டினார். இங்கு ஏழு முறை (2005-08,
2010-12) கோப்பை வென்ற இவர், ஆறு முறை பட்டம் வென்ற சுவீடனின் பிஜோர்ன் போர்க்கை
(1974-75, 78-81) பின்தள்ளி முதலிடம் பிடித்தார்.
அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை சுவீடனின்
பிஜோர்ன் போர்க்குடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் தலா 11 பட்டம்
வென்றுள்ளனர். முதலிரண்டு இடங்களில் சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் (16)
அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ் (14) உள்ளனர்.
பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ்
சம்பியன் பட்டம் வென்றார் ஷரபோவா
பிரெஞ்ச் பகிரங்க போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா
சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன் மூலம் அவுஸ்திரேலிய பகிரங்க, பிரெஞ்ச் பகிரங்க விம்பிள்டன், அமெரிக்க பகிரங்க
ஆகிய 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் பட்டம் வென்ற 10வது வீராங்கனை என்ற பெருமையைப்
பெற்றார் ஷரபோவா.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஷரபோவா 6-3, 6-2 என்ற நேர்
செட்களில் இத்தாலியின் சரா எர்ரானியைத் தோற்கடித் தார். தரவரிசையில் 2வது இடத்தில்
இருந்த ஷரபோவா, இந்த வெற்றியின் மூலம் முதுலிடத்திலிருந்த பெலாரஸ் வீராங்கனை
விக்டோரியாவை அஸரென்காவைப் பின் தள்ளிவிட்டு மீண்டும் முதலிடத்துக்கு
முன்னேறியுள்ளார். ஷரபோவா 2004ல் விம்பிள்டனிலும், 2006ல் அமெரிக்க ஓபனிலும்,
2008ல் அவுஸ்திரேலிய ஓபனிலும் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்தில்
இத்தாலியில் நடைபெற்ற இத் தாலிய பகிரங்க போட்டியிலும் சீன வீராங்கனை லீ நாவைத்
தோற்கடித்து பட்டம் வென்றார்.
யூரோ உதைபந்தாட்டப் போட்டி
ஐரோப்பிய அணிகள் பங்கேற்கும் 14வது யூரோ கிண்ண உதைபந்து தொடர் போலந்து- உக்ரைன்
ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகிறது. கடந்த உலகக் கிண்ணப் போட்டியில்
இறுதியாட்டத்துக்குத் தெரிவான நெதர்லாந்து அணி இம்முறை யூரோத் தொடரில் முதல்
சுற்றுடனே முதலாவதாக வெளியேறியது.
கடந்த வாரம் போலந்தில் நடந்த ஏ பிரிவு லீக் போட்டியில் கிரீஸ், செக்குடியரசு அணிகள்
மோதின.
முதல் பாதியில் செக் குடியரசு வீரர்கள் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பந்து
பெரும்பாலும் இவர் கள் வசம்தான் இருந்தது. 3வது நிமிடத்திலேயே ஜிராசக் ஒரு கோல்
அடிக்க 1-0 என முன்னிலை பெற்றது. இந்த அதிர்ச்சியில் இருந்து கிரீஸ் மீள்வதற்குள்
இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. இம்முறை ஜெப்ரிசெலாசி கொடுத்த அருமையான பாசை
பெற்ற பிலார் ஒரு கலக் கல் கோல் (6வது நிமிடம்) அடிக்க செக் குடியரசு அணி முதல் பாதி
முடிவில் 2-0 என்ற முன்னிலையில் நீடித்தது.
கிகாஸ் ஆறுதல்:
இரண்டாவது பாதியில் கிரீஸ் அணி எழுச்சி கண்டது. ஆட்டத்தின் 53 வது நிமிடத்தில் செக்
குடியரசின் தற் காப்பு பகுதி வீரர்களின் தவறை பயன்படுத்தி கிரீஸ் அணியின் கிகாஸ் ஒரு
கோல் அடித்¡ர். 2004ல் யூரோ கோப்பை வென்ற கிரீஸ் அணி தொடர் ந்து போராடிய போதும்
மேலும் கோல் அடிக்க முடிய வில்லை. இறுதியில் செக் குடியரசு அணி 2 -1 என்ற கணக்கில்
வென்று 3 புள்ளிகளை முழுமையாக பெற்றது.
இங்கிலாந்து - பிரான்ஸ் அணிகள்
சம நிலையில் முடிவு
யூரோ கிண்ண உதைபந்து தொடரில், இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் மோதிய விறுவிறுப்பான
லீக் போட்டி சமநிலை (1-1) ஆனது. ‘டி பிரிவு லீக் போட்டியில் இங்கி லாந்து, பிரான்ஸ்
அணிகள் மோதின. இரு அணிகளும் ஆரம்பத்தில் இருந்தே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின.
11வது நிமிடத்தில் பிரான்சின் சமிர் நஸ்ரி அடித்த பந்து கோல் போஸ்டில் இருந்து சில
‘அங்குலம் விலகிச் செல்ல, சுலப வாய்ப்பு நழுவியது.
ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் ‘பிரீ- கிக்’ வாய்ப்பில் நல்லமுறையில் பயன்படுத்திய
ஸ்டீவன் ஜெரார்ட் பந்தை வேகமாக அடித்தார். இதனை அப்படியே தலையால் மூட்டி ஜோலியான்
லெஸ்காட் ஒரு கலக்கல் கோல் அடிக்க, இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதற்கு
பதிலடி கொடுக்க பிரான்ஸ் வீரர்கள் அலை அலையாக புறப்பட்டனர். ஆட்டத்தின் 39 வது
நிமிடத்தில் ரிபரி கொடுத்த அருமையான ‘பாசை பெற்ற பிரான்சின் சமிர் நஸ்ரி ஒரு அசத்தல்
கோல் அடிக்க போட்டி 1-1 என சமநிலையை எட்டியது. இரண்டாவது பாதியில் இரு அணி
வீரர்களும் தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் போட்டி 1-1 என்ற கோல்
கணக்கில் சமநிலையில் முடிந்தது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன.
போலந்து - ரஷ்யா போட்டி
சமநிலையில் முடிவு
மேலும் ஒரு லீக் சுற்றுப் போட்டியில் போலந்து அணி யும் ரஷ்ய அணியும் மோதின.
ஆரம்பத்திலேயே ரஷ்ய அணியைச் சேர்ந்த லுடோவிக் ஓப்ரானிக் ஒரு கோல் அடித்தார். இதைத்
தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையா டிய போலந்து அணி. அவ்வணியைச் சேர்ந்த வியாசேஸ் லேவ்
மாலாப்விப் போட்டியின் 71ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்த போட்டி
1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
ரஷ்ய அணியினர் அடித்த ஒரு கோலை கீரிஸ் நடுவர் ஏற்க மறுத்ததால் ரசிகர்களிடையே மோதல்
ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பொலிஸார் தலையிட்டு சமரசம் செய்தனர்.
நெதர்லாந்தை வெளியேற்றியது ஜேர்மன்
உக்ரைனில் நேற்று முன்தினம் நடைபெற்ற யூரோக் கிண்ண உதைபந்துப் போட்டியில் கடினமான
பிரிவில் சிக் கிய நெதர்லாந்து அணி ஜேர்மனி அணியிடம் 1-2 என்ற கோல் கணக்கில்
தோல்வியைத் தழுவி முதல் சுற்றுடனேயே பரிதாபமாக வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜேர்மன் அணியில் மரிஓ கோம்ஸ் முதல் பாதியிலேயே இரண்டு கோல்களை அடித்து நெதர்லாந்து
விதியை முடித்தார். பிறகு ஆட்ட முடிவில் நெதர்லாந்து அணி பயங்கரமாக மோதியது. ஆனால்
சில அபாரமான தடுப்பாட்டத்தினால் ஜேர்மன் வெற்றியைப் பறித்தது.
துவக்கத்தில் நெதர்லாந்து அணியே சிறப்பாக விளையாடியது. ஆனால் ரொபின் வான் பெர்சி
கோல் அடிக்க கிடைத்த இரண்டு அருமையான வாய்ப்புகளை நழுவவிட்டார்.
உக்ரைனில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் சுவீடன்- உக்ரைன் போட்டியின் உக்ரைன் 2-0
என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணி வீரர்களும்
ஆக்ரோஷமாக மோதி னர். ஆனால் கோல் பெறப்படவில்லை. இரண்டாவது பாதியில் உக்ரைன் வீரர்
சிவ் சென்னோ அதிரடியாக 2 கோல் போட்டு அசத்தினார். அதன் மூலம் அவ்வணி மூன்று
புள்ளிகளைப் பெற்று ‘டி’ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. மற்றொரு ஆட்டத்தில்
டென்மார்க் அணியை போர்த்துக்கல் அணி 3-2 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்றது.
மற்றொரு ஆட்டம் போலத்தில் நடந்த நட்சத்திர அணிகளான ஸ்பெயினும்- இத்தாலியும் மோதின.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 1-1 என்ற கோல் அடிப்படையில்
சமநிலையில் முடிவுற்றது.