புத் 64 இல. 25

நந்தன வருடம் ஆனி மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 26

SUNDAY JUNE 17 2012

 
தேருநர் இடாப்புக்களின்

தேருநர் இடாப்புக்களின்

மீளாய்வு நடவடிக்கைகள்

ஜனநாயக ஆட்சி முறை யொன்றின் கீழ் மக்கள் பிரதி நிதிகளை வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதற்காக தகைமையு ள்ள வாக்காளர்களை பதிவு செய்தல் அடிப்படை தேவைப்பாடொன்றாகும். வலுவிலுள்ள சட்டத்திற்கிணங்க தேருநர்களைக் கணக்கெடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள செயற்திட்டத்திற்கிணங்க தேருநர்களை கணக்கெடுத்து இடாப்பைத் தயாரித்தல் தேர்தல் நிர்வாகத்தினரின் பொறுப்பாகும். இலங்கையில் தேருநர்களைக் கணக் கெடுத்தலும் தேருநர் இடாப்பைத் தயாரித்தலும் 1980 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க தேருநர்களைப் பதிவு செய்தல் சட்டத்திற்கிணங்க மேற் கொள்ளப்படுகின்றன. அதற்கிணங்க தேர்தல் மாவட்டமொன்றுக்கான பொறுப்பா ளர் மாவட்டப் பதிவு அலுவலராவார். (அரசாங்க அதிபர் / மாவட்டச் செயலாளர்) என்பதுடன் இது தொடர்பாக அவருக்கு அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் தேர்தல்கள் ஆணையாளர் வழங்குவார். இப்பணிகள் மாவட்ட மட்டத்தில் ஒன்றிணைத்தல், அதனுடன் தொடர்புடைய அலுவலக / ஒன்றிணைப்புப் பணிகள் உதவிப் பதிவு அலுவலர்களாக கடமையாற்றும் மாவட்ட பிரதி / சிரேஷ்ட உதவி / உதவித் தேர்தல்கள் ஆணையாளர்களினால் நிறைவேற்றப்படுகின்றன.

அரசியலமைப்பின் 3 ஆம் உறுப் புரைக்கமைய இலங்கை சனநாயக குடியரசின் இறைமை மக்களுக்குரியதாகும். ஆட்சித் தத்துவங்கள், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை என்பன இறைமையின் கீழ் உள்ளடங்கும்.

மக்களின் இறைமையின் கீழ் வரும் ஆட்சி அதிகாரத்தின் கீழ் சட்டமாக்கல் தத்துவம் பாராளுமன்றத்தினாலும் நடைமுறைப்படுத்தப்படும். மக்கள் தீர்ப்பொன்றின் போது அது மக்களாலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அதற்கிணங்க மக்கள் தம் வாக் குரிமையைப் பிரயோகித்து பாராளுமன்றத் திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்படும் உறுப்பினர்களும், மக்களது வாக்குரிமை யைப் பிரயோகித்து நிறைவேற்று அதிகாரத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதியொருவரையும் தேர்ந்தெடுப்பர்.

உயர் நீதிமன்றத்தினதும் மேன்முறை யீட்டு நீதிமன்றத்தினதும் நீதியரசர்களை நியமனஞ் செய்தலும் பதவி நீக்கலும் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதியவர்களால் மேற்கொள்ளப்படும்.

மேலே காணப்படும் தகவல்களுக் கிணங்க பொதுமக்கள் தமது வாக்குரிமை யைப் பயன்படுத்தி மக்கள் இறைமையான ஆட்சி அதிகாரத்தையும் வழி நடத்துகின்றமையால் மக்களின் இறைமை யான வாக்குரிமையின் முக்கியத்துவம் யாதென தெளிவாகின்றது.

அரசியலமைப்பின் 4 (உ) உறுப் புரைக்கிணங்க "வாக்காளரொருவராவத ற்கான தகைமையைப் பெற்று தனது பெயரை தேருநர் இடாப்பில் உட்சேர்க்கப்பட்டுள்ள சகல பிரசைகளுக்கும் வாக்குரிமையை செயற்படுத்த முடியும்" இதற்கிணங்க எவரேனுமொரு பிரசைக்கு தனது வாக்குரிமையை செயற்படுத்த இயலுமாவது தேருநர் இடாப்பில் பெயர் உட் சேர்க்கப்பட்டிருந்தால் மாத்திரமேயாகும்.

03. தேருநர் இடாப்புக்களின் மீளாய்வு நடவடிக்கைகள் ஒவ்வோர் ஆண்டும் யூன் மாதம் 01 ஆம் திகதி ஆரம்பமாவதால் அதற்கு முன்னர் இந்த கணக்கெடுக்கும் நடவடிக்கைகளில் பங்குபற்றும் கணக்கெ டுப்பு அலுவலர்கள் (கிராம அலுவலர்கள் அல்லது விசேட கணக்கெடுப்பு அலு வலர்கள்) பயிற்றப்படுவர். இலங்கைத் தீவின் பெரும்பாலான பிரதேசங்களில் கிராம அலுவலர்கள் மூலம் இத் தேருநர் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுமென் பதுடன், கொழும்பு நகரம், திருகோண மலை நகரம், தெஹிவளை, நீர்கொழு ம்பு நகரங்களை அண்மித்த சில பிர தேசங்களில் மாத்திரம் கிராம அலுவலர்களுக்கு மேலதிகமாக அரசாங்க சேவையில் ஈடுபட்டுள்ள விசேட கணக்கெடுப்பு அலுவலர்கள் ஒரு சிறு தொகையினரும் நியமன செய்யப்பட்டு கணக்கெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

04. தேருநரொருவராக பதிவு செய்வதற்கு குறிப்பிட்ட ஆண்டின் ஜூன் மாதம் 01 ஆம் திகதிக்கு

இலங்கை பிரசையொருவராகவிருத்தல்

வயது 18 வருடங்களைப் பூர்த்தி செய்திருத்தல்

குறிப்பிட்ட முகவரியில் சாதாரண வதிவைக் கொண்டிருத்தல் வேண்டும்.

மேற்குறித்த தகைமைகளைப் பூர்த்தி செய்திருப்பினும் அரசியலமைப்பின் 89 ஆம் உறுப்புரையில் காணப்படும் ஏதே னுமொரு தகைமையிழப்பிற்கு ஆளாகியி ருந்தால் தேருநரொருவராக பதிவு பெறும் சந்தர்ப்பம் கிடைக்காது. அவைகள் சுருக்கமாக கீழே காட்டப்பட்டுள்ளன.

இலங்கையில் வலுவுடையதாகவிருக் கும் ஏதேனும் சட்டத்தின் கீழ் சித்தசு வாதீனமற்றவரென வெளிப் படுத்தப் பட்டிருந்தால்,

இரண்டாண்டுகளுக்குக் குறையாத வொரு காலத்திற்கான மறியற்றண்ட னையால் தண்டிக்கப்படக்கூடிய தவரொன்றுக்காக குற்றத்தீர்ப்பளிக்கப்பட் டதன் பின்னர் அதனால் விதிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குக் குறைவாக ஒரு காலத்திற்கான மறியற்றண்டனையை அனுபவித்து வருபவராயிருந்தால், அல்லது நேர்முற்போந்த ஏழு ஆண்டுக் காலப் பகுதியின் போது அத்தகைய தண்ட னையை அனுபவித்தவரொ ருவராயிருத்தல்,

தேர்தலுடன் தொடர்புடைய குற்றங்களை புரிந்திருந்தால்,

இலஞ்சச் சட்டத்தின் கீழான தவறுகள்,

குடியியற் தகுதியீனம்

05. கிராம அலுவலர்கள் ஊடாக அல்லது விசேட கணக்கெடுப்பு அலுவலர் கள் ஊடாக குறிப்பிட்ட ஆண்டின் ஜூன் மாதம் 01 ஆம் திகதி முதல் அத ற்காக தயாரிக்கப்பட்டுள்ள படிவமொன்று (பிசீ படிவம்) சகல பிரதான குடியி ருப்பாளர்களுக்கும் கையளிக்கப்படுவ தற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படுமென்பதுடன் அந்தப் படிவத்தின் 1 ஆம் பகுதியில் அந்த வீட்டிற்கான வீட்டு இலக்கம் உட்பட உரிய தகவல்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 2011 ஆண்டின் தேருநர் இடாப்புத் திருத்தத்திலிருந்து அந்த வீட்டிற்கான தேருநர்களின் தகவல்களடங்கிய இடாப்பின் குறிப்பிட்ட பகுதியையும் பிசீ படிவத்தில் ஒட்டி கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் மூலம் பிரதான குடியிருப்பாளர் தனது வீட்டின் கீழ் பெயர்கள் உட்சேர்க்கப்பட்டுள்ள தேருநர்கள் யார்? என்றும் அவை சரியா? என்றும் அடையாள அட்டை இலக்கங்கள் சரியா? வென்றும் பரீட்சித்தப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட் டுள்ளது. பிசீ படிவங்களின் விநியோகம் ஜூன் மாதம் 01 ஆம் திகதி முதல் ஜுலை மாதம் 15 ஆம் திகதி வரையில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் அது வரையில் ஏதேனுமொரு வீட்டிற்கு பிசீ படிவமொன்று கிடைக்கப்பெறவில்லை யாயின் உடனடியாக கிராம அலுவலரை அல்லது மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திற்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும், இதற்கு மேலதிகமாக 2012.07.15 ஆம் திகதி முதல் 2012.09.30 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் கிராம அலுவலரிட மிருந்து மாவட்டத் தேர்தல்கள் அலுவலகங்களிலிருந்து அல்லது தேர் தல்கள் திணைக்கள இணையத்தளத்தி லிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஸிரி படிவமொன்றின் மூலம் உரிய விபரங்களை மாவட்டத் தேர்தல்கள் அலுவலகங்களுக்கு ஆற்றுப்படுத்த முடியும்.

06. கணக்கெடுப்பு அலுவலரிடமிருந்து பிரதான குடியிருப்பாளருக்குக் கிடைக் கப்பெறும் படிவத்தை பூர்த்தி செய்து அதை மீள கையேற்பதற்காக வீட்டிற்கு வருகைதரும் கணக்கெடுப்பு அலுவலரிடம் அதனுடன் தொடர்புடைய ஏனைய ஆவணங்களையும் பரீட்சித்துப் பார்ப்பதற் காக கையளிப்பது பிரதான குடியிருப் பாளரின் பொறுப்பாகும். பிரதான குடியிருப்பாளர் பிசீ படிவத்திலுள்ள அறிவுறுத்துரைகளையும் கவனத்திலெ டுத்து தனது வீட்டின் கீழ் தகைமை பெற்றுள்ள அனைத்து தேருநர்களின் பெயர்களையும் அதில் உட்சேர்ப்பதற்கும் புதிதாக வதிவுமாறி வந்திருக்கும் சந்தர்ப்பங்களில் முன்னைய வதிவு முகவரியை குறிப்பிடுவதற்கும் அடையாள அட்டை இலக்கங்களை சரியாக குறிப்பிடுவதற்கும் கேட்கப்பட்டிருக்கும் ஏனைய தகவல்களையும் பூர்த்தி செய்து உரிய இடத்தில் தனது பெயரையும் முகவரியையும் குறிப்பிட்டு கையொ ப்பத்தையிட்டு கிராம அலுவலரிடம் ஒப்படைத்தல் வேண்டும். பிரதான குடியிருப்பாளர்களிடமிருந்து பிசீ படிவங்களை மீள கையேற்றல் 2012.09.09 ஆம் திகதியுடன் முடிவுறுத்த வேண் டியுள்ளமையால் அதுவரையில் உங்கள் வீட்டிற்குக் கிடைத்த படிவத்தை பூர்த்தி செய்து மீள கையளிக்க முடியாது போய் இருப்பின் உடனடியாக கிராம அலுவலரை விசாரிக்கவோ மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திற்கு அறிவிக்கவோ வேண்டும். கிராம அலுவலர் அப்படிவங்களை திரும்ப கையேற்கும் போது அடையாள அட்டைகள், பிறப்புச் சாட்சிப் பத்திரங்கள், பிரசாவுரிமை சான்றிதழ்கள் என்பவற்றை பரீட்சித்து உட்சேர்க்கப்பட்டுள்ள தகவல்கள் சரியாகவுள்ளதாவென பார்த்துவிட்டு கையேற்கப்பட்டதற்கான பற்றுச்சீட்டொன்றை பிரதான குடியிருப்பாளருக்கு வழங்க வேண்டும்.

07. கணக்கெடுப்பு அலுவலர்களால் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அரசியற் கட்சி முகவர்களை கிராம அலு வலர் பிரிவுவாரியாக நியமனஞ் செய்யும்படி தேர்தல்கள் ஆணையாளர் சகல அரசியற் கட்சிகளின் செய லாளர்களுக்கும் அறி விப்பார். அவ்வாறு அறிவிக்கப்பட்டதன் பின்னர் நியமனஞ் செய்யப்படுகின்ற முகவர்கள் கணக்கெடுப்பு அலுவலர்கள் பிசீ படிவங்களை பிரதான குடியிருப் பாளர்களுக்கு விநியோகிப்பதற் காக வீடு வீடாக செல்லும் போது அத்துடன் செல் வதற்கும் அந்நடவடிக்கைகள் முடிவுள்ளதும் கிராம அலுவலரின் அலுவலகத்தில் அவ ற்றை பரீட்சித்து அது தொடர்பான கண் காணிப்பு அறிக்கையொன்றை தேர்தல்கள் ஆணையாளருக்கு கையளிக்கவும் சந்தர்ப் பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிழையற்ற தேருநர் இடாப்பொன்றை தயாரித்துக் கொள்ள முடியுமென நம்பப் படுகின்றது.

08. இவ்வாறு தேருநர்களை கணக்கெடுக்கும் நடவடிக்கைகளின் போது எழும் சில பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு அவதானிக்கப்படவுள்ளது. விசேடமாக இது தொடர்பாக பொதுமக்கள் காட்டும் ஆர்வமற்ற தன்மை இப்பணிகளுக்கு தடையாக அமைகிறது. தனது பெயரை ஒரு வருடம் தேருநர் இடாப்பில் உட் சேர்த்துவிட்டால் எதிர்காலத்தில் மீண்டும் உட்சேர்க்கும் தேவைப்பாடு இல்லையெனவும் பெயர் எதிர்வரும் ஆண்டுகளில் தொடர்ந்தும் பதிவாகுமென்றும் அவர்கள் கருதுகின்றனர். எனினும் வருடா வருடம் பெயர்களை உட்சேர்த்து பிசீ படிவத்தை கிராம அலுவலருக்கு கையளிக்காவிட்டால் அவர்களின் பெயர்கள் தேருநர் இடாப் பிலிருந்து நீக்கப்பட்டு விடும். சற்சமயம் பாடசாலைகளுக்கு சிறுவர்களை உட்சேர் ப்பதற்கும், பல்வேறு நேர்முகப் பரீட்சைகள் போன்ற தேவைகளுக்கு தேருநர் இடாப்பை கோருவதும் அந்த நேர்முகப் பரீட்சைகளின்போது தேருநர் இடாப்பில் பெயர் உட்சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு விசேட கவனம் செலுத்தப்படுவதும் காணிகளின் உரிமையை உறுதிப்படுத்துவதற் கும் இது பயன்படுத்தப்படுவதால் பதிவு இல்லாதபோதும் பெயர்களை உட்சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த இடாப்புக்களை தயாரிக்கின்ற போது கணக்கெடுப்பு அலுவலர்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங் கொடுக்கின்றனர்.

09. கணக்கெடுப்பு அலுவலர்கள் களக் கணக்கெடுப்பு பணிகளை முடிவுறுத்தியதும் குறிப்பிட்ட பிசீ படிவங்களை கிராம அலுவலர் பிரிவின் கிராமங்கள், வீதிகள், தெருக்கள் என்பவற்றின் கீழ் கட்டுக்களாகக் கட்டி தேர்தல்கள் அலுவலகத்திற்குக் கொண்டு வந்ததும் வாக்கெடுப்புப் பிரிவுகளுக்குப் பொறுப்பான அலுவலர்களால் பரீட்சித்துப் பார்த்து கையேற்கப்படுகின்றது. அவ்வேளையில் விசேடமாக நடைமுறை இடாப்பிலிருந்து நீக்க வேண்டியுள்ள பெயர்களடங்கிய நிரலொன்றும் (“அ” நிரல்), நடைமுறை இடாப்பிற்கு புதிதாக சேர்க்க வேண்டியுள்ள பெயர்களடங்கிய நிரலொன்றும் (“ஆ” நிரல்) கையேற்கப்படுவதுடன் இதன் மூலம் அடுத்த ஆண்டின் தேருநர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் ஆரம்பமாகின்றன. இச்சந்தர்ப்பத்தில் மாவட்டத்தினுள்ளும் மாவட்டங்களுக்கிடையேயும் பன்மைப் பதிவுகளை பரீட்சித்து தேருநர்களை அறிவுறுத்தி ஒரு முகவரியிலிருந்து பெயர் நீக்கப்படும். வாக்கெடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பான அலுவலரினால் கையேற்கப்படும் இந்த “அ”, “ஆ” நிரல்களின் பெயர்கள் கணனிமயப்படுத்தி அதன் பிரதியை நடைமுறையிலிருந்தும் இடாப்பின் பிரதிகளுடன் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகங்களில், சகல கிராம அலுவலர் அலுவலகங்களில், சகல பிரதேச அலுவலகங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள், சகல அஞ்சல் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் பார்வைக்கு வைக்கப்படும். அவ்வாறு காட்சிப்படுத்தல் அக்டோபர் மாதம்அல்லது நவம்பர் மாதம் 28 நாட்களுக்கு இடம்பெறுமென்பதுடன், அக்காலப் பகுதியினுள் எவரொருவருக்கேனும் தனது பெயர் அல்லது வேறு ஒருவரின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா இல்லையாவென பரீட்சித்துப் பார்த்து மேன்முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தகைமையற்றவரொருவரின் பெயர் தேருநர் இடாப்பில் உட்சேர்க்கப்பட்டோ அல்லது உட்சேர்ப்பதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டோ இருக்குமாயின் அதற்கு எதிராக ஆட்சேபனை தெரிவிப்பதற்கும் எவராலும் முடியும். இச்சந்தர்ப்பம் குறிப்பிட்ட ஆண்டின் தேருநர் இடாப்பில் பெயரை உட்சேர்ப்பதற்கு எவரொருவருக்கேனும் கிடைக்கும் இறுதி சந்தர்ப்பமாகும். ஆகவே ஆரம்ப கணக்கெடுப்பு பணிகளின் பின்னர் கிடைக்கும் இச்சந்தர்ப்பத்தில் தனது பெயர் இடாப்பில் உட்சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையாவென பரீட்சித்துப் பார்த்து இல்லாதிருப்பின் உரிமைக் கோரிக்கையொன்றை சமர்ப்பித்தல் அனைவரினதும் பொறுப்பாகும். இவ்வாறு செய்யாது தேருநர் இடாப்பு அத்தாட்சிப்படுத்தப்பட்டதன் பின்னர் அல்லது தேர்தலொன்று நடக்கும் போது அல்லது வேறேதும் தேவைக்காக இடாப்பை பரீட்சித்து பெயர் இல்லையென அறிந்ததும் அதற்காக கோரிக்கைகளை சமர்ப்பித்தல் பயனற்றது.

10. மேற்குறித்த காலப்பகுதியினுள் உரிமைக் கோரிக்கையொன்று அல்லது ஆட்சேபனையொன்று சமர்ப்பிக்கப்படுமாயின் அது சம்பந்தமாக கோரிக்கை விடுத்தவரிடமும் குறிப்பிட்ட பிரிவின் கிராம அலுவலரிடமும் தகவல்கள் கோரப்படும். அவ்வாறு தகவல் கேட்கும் பட்சத்தில் தேவையான தகவல்கள் சரியாகப் பெற்றுக்கொடுக்கப்படுமாயினும் குறித்த கிராம அலுவலர் அதை உறுதிப்படுத்தியிருப்பாராயின் நேர்முகப் பரீட்சைக்கு முகங்கொடுக்காது தனது பெயரை தேருநர் இடாப்பில் உட்சேர்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அல்லது உரிமை ஆட்சேபனை விசாரணையொன்றுக்கு அவர் முகங்கொடுத்து அவரது தகைமையை வாய்மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் நிரூபித்தல் வேண்டும். தகைமை பெற்றிருப்பது உறுதியாகுமாயின் உரிமைக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் இடாப்பில் பெயர் சேர்க்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் எழுத்து மூலம் அறிவிக்கப்படும். எவரேனுமொருவர் தகைமை இல்லாது பதிவு செய்யப்பட்டுள்ளதாக தென்படுமாயின் அந்தப் பெயருக்கான ஆட்சேபனையையும் தெரிவிக்க முடியும். அது இரண்டு பிரதிகளில் சரியான தகவல்களைக் கொண்டதாகவிருத்தல் வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கின்ற வரை குறிப்பிட்ட ஆளுடன் விசாரணைக்கு அழைக்கப்படும். அவ்வேளையில் அவர் அவ்விடத்தில் வதிவைக் கொண்டவரல்லவென்றும் வேறு இடத்தில் வதிவதாகவிருந்தால் அது தொடர்பான தகவல்களையும் நீங்கள் வழங்க வேண்டும். ஆட்சேபனைக்காக தெரிவிக்கப்படும் விடயங்களைக் கொண்டு விசாரணை நடத்துபவர் மற்றவரிடம் (ஆட்சேபனைக்குள்ளானவரிடம்) இது தொடர்பாக விசாரிக்க வேண்டுமா இல்லையாவென தீர்மானிப்பார்.

11. மாவட்டப் பதிவு அலுவலரினால் மேற்கொள்ளப்படும் உரிமைக் கோரிக்கை / ஆட்சேபனைத் தெரிவித்தல்கள் என்பவற்றின் விசாரணைகளின் பெறுபேறுகள் உரிமைக் கோரிக்கை சமர்ப்பித்தவர்களுக்கும் ஆட்சேபனையொன்றாயின் அதை சமர்பித்தவருக்கும் ஆட்சேபனைக்குள்ளானவருக்கும் அறிவிக்கப்படும். இந்த தீர்மானத்திற்கு இணங்கவில்லையாயின் பத்து நாட்களுக்குள் மாவட்ட நீதிமன்றத்தில் இம்முடிவுக்கெதிராக மேன்முறையீடொன்றை செய்யலாம்.

12. அதற்கிணங்க கணக்கெடுப்பு அலுவலர் கணக்கெடுப்பின் இறுதியில் தேர்தல்கள் அலுவலகத்திற்குக் கையளிக்கின்ற ‘அ’, ‘ஆ’ நிலல்களைக் கொண்டும் அவை காட்சிப்படுத்தப்பட்டதன் பின்னர் சமர்ப்பிக்கப்படுகின்ற உரிமைக் கோரிக்கை ஆட்சேபனைத் தெரிவித்தல்களின் விசாரணைகள் முடிவடைந்ததும் ஒவ்வொரு வாக்கெடுப்பு மாவட்டவாரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமைக் கோரிக்கைகளை உட்சேர்த்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆட்சேபனைத் தெரிவித்தல்களின் பெயர்களை நீக்கியும் குறிப்பிட்ட வருடத்திற்கான இடாப்பு தயாரிக்கப்படுவதுடன் அதை தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்ட திகதியில் அத்தாட்சிப்படுத்துவார். 2012 ஆம் ஆண் டின் தேருநர் இடாப்பு மீளாய்வு தொடர்பான முன் நிகழ்ச்சித் திட்டத்திற்கிணங்க 2012.12.31 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்படல் வேண்டும். இவ்விடாப்பு அடுத்த ஆண்டின் இடாப்பு தயாரிக்கப்பட்டு அத்தாட்சிப்படுத்தும்வரை செல்லுபடியாகும். அக்காலப்பகுதியினுள் தேர்தல்களேதும் நடத்தப்படுமாயின் அதற்கான செல்லுபடியான இடாப்பும் இதுவாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.