புத் 64 இல. 25

நந்தன வருடம் ஆனி மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 26

SUNDAY JUNE 17 2012

 
ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதால் வெளிநாட்டுக் கொள்கை மாறாது

ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதால் வெளிநாட்டுக் கொள்கை மாறாது

அரசாங்கம் தெரிவிப்பு

புலம் பெயர் தமிழர்களாலோ அன்றி புலிகளாலோ மேற்குலகில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களையோ அல்லது ஆர்ப்பாட்டங்களையோ இலங்கை அரசு எவ்விதத்திலும் பொருட்படுத்தப் போவதில்லையென்று இலங்கை அரசின் உயர்மட்ட பேச்சாளரொருவர் கூறினார்.

இலங்கை அரசுக்தெதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களுக்கு அஞ்சி எமது வெளிவிவகார கொள்கையில் மாற்றங்கள் செய்து கொள்ளப்போவதும் இல்லையென்று மேலும் அவர் கூறினார்.

அண்மையில் பிரித்தானிய ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற மகாராணியின் வைரவிழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அங்கு புலம்பெயர் தமிழர்களால் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகளுக்கு மிகவும் மனம் வருந்துவதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்திருந்தார்.

இலங்கை பிரித்தானிய நல்லுறவில் எவ்வித மாற்றமுமின்றி ராஜதந்திர கலந்துரையாடலில் இலங்கை அபிவிருத்திக்கான சகல ஒத்துழைப்புகளையும் நல்குவதாக கருத்து பரிமாறிக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.