புத் 64 இல. 25

நந்தன வருடம் ஆனி மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 26

SUNDAY JUNE 17 2012

 
இலண்டனில் நுவரெலியா தேயிலைக்கு கிராக்கி

இலண்டனில் நுவரெலியா தேயிலைக்கு கிராக்கி

ஒரு கோப்பை தேநீர் ரூ. 5000

இரண்டாம் எலிசபெத், மகா ராணியாக முடிசூடி 60 வரு டங்கள் பூர்த்தியாகியுள்ளதை முன்னிட்டு லண்டனிலுள்ள ‘கிழக்கு இந்திய கம்பனி’ என்ற நிறுவனம் விசேட தேயிலையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

மகாராணியின் கணவரான இளவரசர் பிலிப்பினால் 1954ஆம் ஆண்டு நுவரெலியாவின் பெட்ரோ தோட்டத்தில் நடப்பட்ட தேயிலைச் செடியிலிருந்து பறிக்கப்பட்ட தேயிலைக் கொழுந்துகளிலிருந்து இந்த தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தேயிலை அடங்கிய 60 கிராம் பெட்டியொன்றின் விலை 75 பவுண்களாகும். (15000 ரூபா) இந்த தேயிலையினால் தயாரிக்கப்பட்ட ஒரு கோப்பை தேநீர் 25 பவுண்களுக்கு (ஐயாயிரம் ரூபா) விற்பனை செய்யப்படுகிறது.

இந்த தேயிலை தங்கம் மற்றும் வெள்ளி நிறங்களில் அமைந்துள்ளதுடன் அதன் நீளமும் சாதாரண தேயிலையை விட அதிகமாகவே காணப்படுகின்றமை அதன் விசேட அம்சமாகும்.

வித்தியாசமானதொரு இனிப்புச் சுவையைக் கொண்ட இந்த தேயிலையினால் தயாரிக்கப்பட்ட தேநீரைப் பருகும் போது தொண்டைக்கு மிகவும் இதமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.