உலக அரங்கில் இலங்கையின் மதிப்பு உயர அரும்பணியாற்றுபவர் ஜனாதிபதி
உலக அரங்கில் இலங்கையின் மதிப்பு உயர அரும்பணியாற்றுபவர் ஜனாதிபதி
பாபு சர்மா அறிக்கை
அண்மையில் ஐ.நா பாது காப்பு சபையினால் முன்வைக் கப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தை
இலங்கை அரசு வெற்றிகர மாக நிறை வேற்றியுள் ளது என ஐக்கிய நாடுகளின் பிரதம
அதிகாரியின் சிறுவர் மற்றும் ஆயுதப் போராட்டம் பற்றிய வருடாந்த அறிக் கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீமூன் இது பற்றி இலங்கை அரசுக்கு
பாராட்டுத் தெரிவித்துள்ளார். அத்துடன் காணாமல் போன சிறுவர்களின் விவகாரங்களில்
இலங்கை அரசு எடுக்கும் முயற்சியை யுனிசெப் நிறுவனமும் பாராட்டி யுள்ளது.
மேலும் உலக சமாதான புள்ளி விபர ஆய்வின்படி சமாதானத்தில் முன்னேறி வரும் 5 நாடுகளின்
பட்டியலில் இலங்கை இடம்பெற்றிருப்பதும் முக்கியமான அம்சமாகும்.
இந்த சமாதானப்பட்டியல் விபரத்தை அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் இருக்கும்
சமாதான பொருளாதார சம்பந்த நிறுவனம் தனது 2012ம் ஆண்டுக்கான சமாதான புள்ளி
விபரவியலில் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலை இலங்கையின் நன்மதிப்பு உலகநாடுகள் மத்தியில் உயர ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததையும் பொருளாதார வளர்ச்சி திட்டங்களையும்
ஆசியாவில் இலங்கையை ஆச்சரியமிக்க நாடாக மாற்ற வேண்டும் எனும் ஜனாதிபதியின் தீவிர
செயற்பாடு அடிப்படை காரணமாகும்.
மேலும் உலக அரங்கில் இலங்கையின் நற்பெயருக்கு ஜனாதிபதிக்கு இலங்கைவாழ் அனைத்து
மக்களும் இனமத போதமின்றி ஆதரவு வழங்குவார்கள்.
என ஜனாதிபதியின் இந்த மத அலுவல்கள் விவகார இணைப்பாளர் பிரம்மஸ்ரீ ராமச்சந்திர
குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.