களுத்துறை மாவட்டத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் கல்விப்
போதனை இடம்பெறும் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு ஒரு கோடி 25 இலட்சம்
செலவில் மூன்று மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடமொன்று அம்ஜாத்தின் முயற்சியால் பிரதி
அமைச்சர் நிர்மல கொதலாவலவின் நிதி ஒதுக்கீடு மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
இக்கட்டிடத்திற்கு இப்பகுதி மக்கள் "அம்ஜாத் கட்டிடம்" என்று பெயர் சூட்டி
கெளரவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அப்பாடசாலையில் உள்ளக வீதியும் கொங்கிaட்
இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளமை மற்றொரு சிறப்பம்சமாகும்.
தர்காநகர் ஸாஹிராக் கல்லூரியின் கட்டிடத்தின் இரண்டாம் மாடி 65 இலட்சம் ரூபா செலவில்
பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இப்பாடசாலை உள்ளக வீதியும் கொங்ரீட் முறையில்
புனரமைக்கப்படவுள்ளது. அவர் இதற்கு நிதி ஒதுக்கியுள்ளார்.
மஹகொட ஐ. எல். எம். சம்சுதீன் வித்தியாலயத்திற்கு ஒருகோடி 25 இலட்சம் ரூபா செலவில்
புதிய கட்டிடமொன்று அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக 35 இலட்சம் ரூபாவை அம்ஜாத்
ஒதுக்கினார்.
நZம் ஹாஜியார் மகளிர் கல்லூரிக்கும் ஒரு கோடி 25 இலட்சம் செலவில் நவீன கட்டிடமொன்று
அமைக்க அவர் நிதியை ஒதுக்கியுள்ளார். களுத்துறை முஸ்லிம் மகளிர் கல்லூரி, தர்கா நகர்
அல்- ஹம்ரா மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கு
அடுத்த வருடம் புதிய கட்டிடம் அமைத்துக்
கொடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அட்டுளுகமை அல்- கஸ்ஸாலி மகா வித்தியாலயத்திற்கு விளையாட்டு மைதானமொன்றை
பெற்றுக்கொடுக்கவும் முன்வந்துள்ளார்.
பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரிக்கு சகல வசதிகளையும் கொண்ட விஞ்ஞான ஆய்வு கூடமும்
அமைக்க அவர் நிதி ஒதுக்கியுள்ளார்.
எலுவில, எகொட உயன, அம்பலந்துவ, ஹொரேதுடுவ, மாளிகாஹேன ஆகிய பகுதிகளில் உள்ள முஸ்லிம்
பாடசாலைகளின் தேவைகளும் அடுத்து வரும் காலத்தில் நிறைவேற்றிக் கொடுக்க இருப்பதாகவும்
அம்ஜாத் தனது எதிர் காலத் திட்டங்கள் குறித்து விபரிக்கையில் குறிப்பிட்டார்.
மாகாண சபை உறுப்பினர்களான அம்ஜாத், ஏ. எம். யூஸ¤ப் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில்
மாகாண ஆளுநர் அஸ்ஸெய்யித் அலவி மெளலானா பகீரதப் பிரயத்தனம் எடுத் ததன் விளைவாக
முதலமைச்சர் பிர சன்ன ரணதுங்க மேல் மாகாணத்தில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க
முன்வந்திருக்கிறார். மேல் மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் நிலவும்
ஆசிரியர் பற்றாக்குறை இதன் மூலம் ஈடுசெய்யப்படும்.
இன்று கல்வித்துறையில் மற்றொரு விசித்திரம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சுமார் 80,
90 வீதமான பெண்களே ஆசிரியர் பதவிகளில் இருப்பதோடு உயர் கல்வி பெறுவதிலும் பெண்களே
மிக மிக மிகைத்துக் காணப்படுவதாகும்.