புத் 64 இல. 25

நந்தன வருடம் ஆனி மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 26

SUNDAY JUNE 17 2012

 
வட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் துட்டுக்கு ரெண்டு கொட்;டைப் பாக்கா

வட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் துட்டுக்கு ரெண்டு கொட்;டைப் பாக்கா

தமிழகப் பங்களிப்பைத்

தொடலாமா, விடலாமா?

தலைநகரில் தமிழ் வளர்த்த பண்ணையா கிய எங்கள் வாழைத்தோட்டத்தின் பொன் விழாவை நோக்கிய எஸ்.ஐ. நாகூர்கனி, தினகரன் (20.05.2012) வார மஞ்சரியில் “நம் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு தமிழகப் பங்களிப்பை தொடலாமா? விடலாமா? என்ற தலையங்கத்தில் மணிப்புலவர் இலக்கிய கூட்டமொன்றில் பேசிய கருத்துக்களை மிகவும் கண்ணியமாக விமர் சித்து எழுதிய ஆக்கத்தை வாசித்தேன்.

மணிப்புலவர் ஒரு காலத்தில் எங்கள் வாழைத்தோட்ட மிகிந்து மாவத்தை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் (இன்றைய அதன் பெயர்: அல் ஹிக்மா கல்லூரி) படிப்பித்த காலத்தில் புரிந்த அவரது திருவிளையாடல்களை நானும் ஒரு பழைய மாணவன் என்ற வகையில் மறுவாரம் எழுதட் டுமா என எழுத்தாளரிடம் கேட்டபோது “வேண் டாம் நான் எழுதியதே போதும். இஸ்லாத்தில் விரட்டி விரட்டி அடிக்க அனுமதியில்லை” என்றார். இது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.

பிரஸ்தாப ஆக்கம் தொடர்பாக கலைவாதி கலீலிடம் மணிப்புலவர் என்ன சொல்லியிருக் கிறார் தெரியுமா? “ராஜா பல்லக்கில் போகும் போது எவராவது கல்லெறிந்தால், ராஜா திருப்பி கல்லெறிவதில்லை. வேறெவரையாவதுதான் ராஜா கல்லெறிய ஏவுவார்” எனக் கூறியுள்ள மணிப்புலவர், ஏவி விட்ட கல், கடந்த தினகரன் (03.06.2012) வாரமஞ்சரியில் ஹிதாயதுல்லாஹ் மிர்சா என்ற பெயருடையார் எழுதிய ஆக்கமாக வந்து விழுந்துள்ளது. சத்திய எழுத்தாளரின் ஆக்கத்தை வாசித்த ஒருவர் சொல்கிறார்.... அவர் அடித்த கல், குறி தவறாமல் ராஜாவாக இருந்தவர் தலையில் பட்டு இரத்தக் காயத்தோடு பல்லக்கினுள் விழுந்து கிடக்கிறார். அவரால் எழும்பவே முடியாத போது திருப்பி எப்படி கல் எறிவார்? அவர் கல் எறியும்படி ஏவிய வலி பொறுக்க முடியாத வேதனையில் கத்திய கதறலை, ஒழுங்காகப் புரிந்து கொள்ளாத நிந்தவூரைச் சேர்ந்த ஹிதாயத்துல்லா மிர்சா - சத்தி எழுத்தாளரின் கண்ணியமான வரிகளை வாசித்துப் புரிந்து கொள்ளாமல் குருடன் பார்த்த யானையை விவரித்தது போல ஏதேதோ உளறி கொட்டியுள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரி யில் மிர்சா எழுதிய ஆக்கம், தெளிவில்லாத வரின் உளறல் போன்று, மயக்கம் தரும் குழப்ப வரிகளாகவே உள்ளன. சத்திய எழுத்தாளர் முன்வைத்த கருத்துக்களுக்கு, கருத்து வழியில் மோதும் தகுதி மணிப்புலவருக்கே இல்லாத காரணத்தினால்தான், இன்னொரு அப்பாவியை ஏவிவிட்டுள்ளார். அந்த அப்பாவியோ என்ன எழுதுவது? எப்படி மறுப்பது எனத் தெரியாமல் முன்னுக்குப் பின் முரணான வரிகளை எழுதி தினகரன் பக்கத்தையே பாழ்படுத்தி விட்டிருக் கிறார். நாகூர் கனி தனது ஆக்கத்தில் “தமிழ கப் பங்களிப்பைத் தொடலாமா? விடலாமா? என எழுப்பிய வினாவுக்கு மணிப்புலவரோ அவருக்காக வக்காளத்து வாங்கும் மிர்சாவோ பதில் கூறியிருக்கலாம். அதுதான் பிரஸ்தாப ஆக்கத்தின் பிரதான அம்சம். தொடலாம் என்று மணிப்புலவர் சொல்வாரேயானால், தமிழ் சங்கத்தில் நடந்த “யாத்ரா” மீளறிமுக விழாவில் மணிப்புலவர் “வாழைத் தோட்டத்தின் தமிழ்ப் பத்திரிகை முன்னோடிகளை ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கூறிய கூற்றினை வாபஸ் பெற வேண்டும். விடலாம் எனக் கூறவாரே யானால் ஒட்டு மொத்தமாக எல்லாத் தமிழகப் பங்களிப்புகளையும் துறக்க வேண்டும்.

இது சாத்தியமா? விடலாம் என்ற நிலைக்கு வந்தால், தமிழ் நாட்டிலிருந்து இறக்குமதியான தமிழ் மொழி உட்பட, அனைத்தையும் விட வேண்டும். இதன் யதார்த்தத்தை இனியாவது மணிப்புலவர் மிர்சா போன்றோர் கற்றாய்ந்தொழுக வேண்டும். மேடை கிடைத்து விட்டது என்பதற் காக எதையாவது உளறி, எல்லோரையும் மடை யர்களாகவும், நான் மட்டுமே புத்திசாலி என பூனை போல சிந்திக்க வேண்டாம்.

அடுத்த முக்கிய அம்சம் என்னவெனில் எங்கள் வாழைத்தோட்ட முற்போக்கு இலக்கிய வாதியான மர்ஹ¥ம் எச்.எம்.பி. முஹிதீனின் சிபார்சின் பேரில் ஸ்ரீமா அம்மையார் ஆட்சி யில் தமிழகத்தின் குப்பை இதழ்கள் யாவும் தடை செய்யப்பட்டு, சுதேசிய இலக்கியம் பத்திரிகைகள் வளர இடம் விடப்பட்டது. அக்காலப் பிரிவில் மணிப்புலவர் கருத்துப்படி ஏன் சுதேசிய பத்திரிகைகள் தினசரிகள் தோன்றி, தொடர்ந்து வாழ்ந்து வரவில்லை என்பதற்கு இந்த மணிப்புலவரோ மிர்சாவோ காரணங்களை அடுக்கியிருக்க வேண்டும். அதை செய்ய வில்லை...... ஏன்?

இப்படி சத்திய எழுதாளரின் ஆக்கத்தில் விளக்கம் தரவேண்டி இடங்கள் பல இருக்க அவற்றை எல்லாம் தொட்டும் பாராமல் நாகூர் கனி என்ற பெயரில் “நாகூர்” இருப்பதால், அவரது தந்தைபற்று மணிப்புலவரின் வாதத்தை ஏற்காமல் தடுக்கிறது என மிர்சா எழுதியிருப்பது எவ்வளவு பெரிய அபத்தம்! இதன்படி பார்த்தால் இந்நாட்டிலிருந்து தலை வர்கள் உட்பட, பலரை அவர்களின் பெயருக் காக நாடு கடத்த வேண்டிவரும். எவ்வளவு சின்னத்தனமான சிந்தனை இது! இனியாவது வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் வழியை சொல்லுங்கள்; பழி போடாதீர்கள்!

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.