புத் 64 இல. 25

நந்தன வருடம் ஆனி மாதம் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 26

SUNDAY JUNE 17 2012

 

னுகுஊஊ யின் புத்தம் புதிய இணையத் தளம் அறிமுகம்

னுகுஊஊ யின் புத்தம் புதிய இணையத் தளம் அறிமுகம்

அபிவிருத்தி வங்கிகளில் முன்னோடியாகத் திகழும் DFCC வங்கியும், அன்றாட வங்கிச் சேவைகளை வழங்கும் DFCC வர்தன வங்கியும் இணைந்து ஒரே இடத்திலேயே அவை தொடர்பான தகவல்களை மிக விரைவாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் தம்மை ஸ்திரப்படுத்தி, உள்ளிணைப்புச் செய்து கொள்ளும் வகையில் www.dfcc.lk என்ற தமது புதிய இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்துள்ளன.

செளகரியமான, இலகுவான வழிகாட்டல்கள் கொண்ட இணையத்தள நுழைவாயிலின் மூலமாக இடையறாத வங்கிச் சேவைகளை வழங்கும் நோக்குடன் இணைய உலகில் பரீட்சயம்மிக்க தற்போதைய தலைமுறையின் நிதியியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமென வங்கிக் குழுமம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது.

DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான நிஹால் பொன்சேகா இது பற்றிக் கூறுகையில்,

“இந்த www.dfcc.lk என்ற இணையத்தளத்தின் மூலம் எமது தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே தளத்திலேயே கிடைக்கப் பெறுவதுடன், வலிமையான உள்ளடக்கங்களின் மூலம் பாவனையாளர்கள் அதிக அளவில் இதை உபயோகிப்பதை ஊக்குவிப்பதையும் உறுதி செய்கின்றது.

இணையத்தளத்தின் மூலமான எமது வங்கிச் சேவை நுழைவாயில் தளத்தின் இணைப்புத்திறனுடன் நேரடியாக வங்கிக் கிளையொன்றில் பெற்றுக் கொள்ளும் சேவைக்கு ஒப்பான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் எண்ணத்துடன், எமது வாடிக்கையாளர்க ளுக்குத் தேவையான சேவைகளை ஒரு பொத்தானை அழுத்தியவுடன் மிக விரைவாகப் பெற்றுக் கொள்ளவும் வழிகோலுகின்றது” என்று கூறினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.