|

கியூபாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விமான நிலையத்தில் கியூப
பிரதி வெளிவிவகார அமைச்சர் திருமதி அனா தெரேசிதா
கொன்ஸாலிஸ் ஃபாக்ரா முதலானோர் வரவேற்றனர். (படம்: சுதத்
சில்வா)சில்வா)
|
|
 |
|
மேடைகளில் மக்கள் முன் வீர முழக்கம்; ஊடகங்களில் வேறொரு விளக்கம்
தமிழரசு கட்சியின் தடுமாற்ற அரசியல் இனியும் தொடருமா?
உடனடியாக தெளிவுபடுத்த வேண்டுமென புத்திஜீவிகள் வேண்டுகோள்
தமிழரசுக் கட்சியின் யாப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது தவறு நேர்ந்திருப்
பதாக அக்கட்சியினர் கூறுவது அவர்களின் தடுமாற்ற அரசியலைப் புலப்படுத்துவதாகப்
புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாநாட் டின்போது கட்சியின் தலைவர் இரா. சம்பந் தன்
ஆற்றிய உரையே சர்ச்சையைத் தோற்று வித்திருக்கிறது. அந்தச் செய்தியை முதன் முதலில்
‘இந்து’ பத்திரிகையே வெளியிட்டிருந்தது. அப்போது அதுபற்றி தமிழரசுக் கட்சியினர்
எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இப்போது, சம்பந்தனின் கருத்துக்கு எதிராக
நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென தேசப் பற்றுள்ள சில அரசியல் கட்சிகள் கோரியுள்ளன.
நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
விவரம் » |
|
 |
உலக அரங்கில் இலங்கையின் மதிப்பு உயர அரும்பணியாற்றுபவர் ஜனாதிபதி
அண்மையில் ஐ.நா பாது காப்பு சபையினால் முன்வைக் கப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தை
இலங்கை அரசு வெற்றிகர மாக நிறை வேற்றியுள் ளது என ஐக்கிய நாடுகளின் பிரதம
அதிகாரியின் சிறுவர் மற்றும் ஆயுதப் போராட்டம் பற்றிய வருடாந்த அறிக் கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவரம் » |
|
 |
இலண்டனில் நுவரெலியா தேயிலைக்கு கிராக்கி
ஒரு கோப்பை தேநீர் ரூ. 5000
இரண்டாம் எலிசபெத், மகா ராணியாக முடிசூடி 60 வரு டங்கள் பூர்த்தியாகியுள்ளதை
முன்னிட்டு லண்டனிலுள்ள ‘கிழக்கு இந்திய கம்பனி’ என்ற நிறுவனம் விசேட தேயிலையொன்றை
அறிமுகப்படுத்தியுள்ளது.
மகாராணியின் கணவரான இளவரசர் பிலிப்பினால் 1954ஆம் ஆண்டு நுவரெலியாவின் பெட்ரோ
தோட்டத்தில் நடப்பட்ட தேயிலைச் செடியிலிருந்து பறிக்கப்பட்ட தேயிலைக்
கொழுந்துகளிலிருந்து இந்த தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
விவரம் » |
|
 |
|
 |
கிழக்கு முதலமைச்சராக மீண்டும் சந்திரகாந்தன் தெரிவாகுவது உறுதி
சந்தேகம் வேண்டாமென்கிறார் செல்வேந்திரன்
தமிழர்களின் தேசிய கட்சி அமெரிக்காவின் கைப்பொம்மையாம்!
கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு, மீண்டும் அதற்கான தேர்தல் இடம் பெறுமாயின் இன்றைய
முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீண்டும் முதலமைச்சராகுவார். இதனையிட்டு
எவரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. காரணம் கிழக்கு மண்ணில் வாழும் மூவின
மக்களையும் ஒற்றுமையுடன் கட்டிக் காக்கும் ஆளுமையும், திராணியும் சிவநேசதுரை
சந்திரகாந்தனுக்கு உண்டு என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.
விவரம் » |
|
 |
முதலமைச்சர் மாறி மாறி நியமிக்கப்பட்டால் தமிழ் - முஸ்லிம் உறவு காத்திரமாகும்
முஸ்லிம் முதலமைச்சர் கோருவதில் என்ன தவறிருக்கிறது எனக்கேட்கிறார் சுபைர்
கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் ஒருவர் முதலமைச் சராக வரவேண்டு மென அந்த மாகாண
முஸ்லிம்கள் கோரிக்கை விடுப்பதில் என்ன தவறிருக்கின்றதென்று மாகாண அமைச்சர் எம்.எஸ்.
சுபைர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விவரம் » |
|
 |
சவூதி அரேபியாவின் இளவரசர் மரணம்
சவூதி அரேபியாவின் இளவரசர் நயாப் பின் அப்துல்லாசிஷ் அல்-சவூத் ஜெனீவாவில்
மரணமாகியுள்ளதாக சவூதி தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளி யிட்டுள்ளது. இறக் கும்போது
அவருக்கு வயது 78.
விவரம் » |
|
 |
ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதால் வெளிநாட்டுக் கொள்கை மாறாது
அரசாங்கம் தெரிவிப்பு
புலம் பெயர் தமிழர்களாலோ அன்றி புலிகளாலோ மேற்குலகில் மேற்கொள்ளப்படும்
பிரசாரங்களையோ அல்லது ஆர்ப்பாட்டங்களையோ இலங்கை அரசு எவ்விதத்திலும் பொருட்படுத்தப்
போவதில்லையென்று இலங்கை அரசின் உயர்மட்ட பேச்சாளரொருவர் கூறினார்.
இலங்கை அரசுக்தெதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களுக்கு அஞ்சி எமது வெளிவிவகார
கொள்கையில் மாற்றங்கள் செய்து கொள்ளப்போவதும் இல்லையென்று மேலும் அவர் கூறினார்.
விவரம் » |
|
 |
கியூபா ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோ ஜனாதிபதி மஹிந்த இருதரப்பு பேச்சு
கியூபாவுக்கான மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று
கியூப ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோவை சந்தித்துப் பேச்சு நடத்துகிறார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹவானாவில் உள்ள ஒசே மர்டி வானூர்தி தளத்திற்கு நேற்று
முன்தினம் மாலை சென்றடைந்தார். அதன்போது, அவரை கியூபாவின் வெளிவிவகார அமைச்சர்
மற்றும் அங்குள்ள இலங்கை தூதுவர் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
விவரம் » |
|
|