புத் 64 இல. 24

நந்தன வருடம் வைகாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 19

SUNDAY JUNE 10 2012

 

காந்தியின் சிந்தனை

காந்தியின் சிந்தனை

* அன்பு, அறம், நன்றியறிவு, தேசாபிமானம், முதலிய நற்குணங்கள் மனித வர்க்கத்திற்கு சேமத்தை உண்டு பண்ணக் கூடியவைகள்.

* உலகம் அறிந்த மகாபெரிய ஜனநாயகவாதி கடவுள்தான். நல்லது கெட்டது எது வேண்டுமோ அதைத் தெரிவு செய்து கொள்வதற்கு எந்தவித வரையறை ஏற்படுத்தாமல் அவர் தம்மைச் சுதந்திரமாக விட்டிருக்கிறார்.

* நாகரிகங்கள் தோன்றலாம், மறையலாம். நிலம் என்றும் இருக்கும். ஒரு நாகரிகம் மண்ணைப் பாழ்படுத்த முற்பட்டால் மண் அழிந்து போய்விடாது. அந்த நாகரீகம் தான் அழிந்துவிடும்.

* ஒவ்வொருவனும் முயற்சி செய்தால் தன் தேவைகளைக் குறைத்துக் கொள்ள முடியும். அப்படிக் குறைத்துக் கொண்டால்தான் சுகம், ஆரோக்கியம், சாந்தி, இவற்றைப் பெறுவோம். ஆன்மாவானது உடலை ஒரு பாரமாக சுமந்து நிற்கின்றது. ஆசைகளைக் குறைத்துக் கொண்டால் தான் சரீர பாரம் குறையும்.

* பிறரை அழிக்க விரும்புகிறவன் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான். இதுவே இயற்கையின் நியதி.

* முள் நிறைந்த செடியில் தான் அழகும் வாசனையும் பொருந்திய ரோஜா மலர்கிறது. அதுபோலவே சொல்ல முடியாத துன்பத்திற்கும், எதிர்பார்ப்பிற்கும் மத்தியில் தான் உண்மை மலர்கிறது.

* உயர்ந்த போராட்டம் என்பது உள் உள்ளத்தோடு போராடுவதே.

நாளைய தலைவர்கள் இன்றைய சிறார்கள்

நாம் அனைவரும் தாயின் கருவறைக்குள்ளிலிருந்து வெளிவரும் போது எதனையும் கற்றுக்கொண்டு வெளிவருவதில்லை. எதனையும் அறியாத நிலையில் தான் பிறக்கின்றோம். வெள்ளைக் காகிதம் போன்றே எம்மனம் காணப்படுகின்றது. வெறுமையாகக் கிடக்கும் அறிவும், மனமும் பிறந்த பின் சூழலில் கிடைப்பவற்றையும், கண்ணால் பார்ப்பவற்றையும், காதால் கேட்பனவற்றையும் கிரகித்து அதனூடு எம்மறிவு வளர்கின்றது.

எம்மறிவு வளர்ச்சியிலும், உள ஆற்றல் விருத்தியிலும் பெற்றோரின் பங்கு முதன்மையானது. பிள்ளையை பெற்றெடுப்பதுடன் கடமை முடிவதில்லை. அதன் பிறகே பெரும் கடமை துவங்குகின்றது. பெற்றெடுத்த அப்பிள்ளையை உரிய முறையில் செப்பனிட வேண்டும். எந்தப் பிள்ளையும் அறிவாற்றலில் குறைந்த பிள்ளையில்லை. அவர்களின் அறிவும், ஆற்றலும் முதலில் பெற்றோரே இனங்கண்டு ஊக்கப்படுத்தி வளர்த்துவிட வேண்டும். ஒரு பிள்ளையின் முதல் ஆசான் பெற்றோரேமாகும். அதன் முதற் பள்ளிக்கூடம் வீடேயாகும்.

எனவே, உரிய முறையில் வழிகாட்டப்பட்டு திறமைகள் இனங்காணப்பட்டு எக்குழந்தை வழிநடத்தப்படுகின்றதோ அக்குழந்தையே நாளைய உலகை வெற்றி கொள்ளும். இன்று, சுவரில் அக்குழந்தை வரையும் ஓவியமே நாளை இதனை ஒரு பெரும் ஓவியராக மாற்றப் போகின்றது. எனவே, அதன் சிறு கிறுக்கல்களை தடுத்து அதன் வாழ்வில் பெரும் சுருக்களுக்கு நாம் வித்திடக் கூடாது. ஒரு குழந்தையை பெரும் தலைவராக மாற்ற முதலில் ஒழுக்கத்தை விதைப்போம். பின் அதன் திறமைக்கு வித்திட்டு, தட்டிக் கொடுத்து நாளைய உலகை ஆளும் நல் மனிதராக்குவோம்!

தெரிந்து கொள்ளுங்கள்

மூக்கில் பல் உள்ள விலங்கு எது? முதலை

சிரிக்கத் தெரிந்த விலங்கு எது? மனிதன்

வாழ்நாளில் தூங்காத உயிரினம் எது? எறும்பு

நடக்கத் தெரியாத பிராணி எது? முயல்

நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை எது? புறா

ஞாபகசக்தி கூடிய பறவை எது? வெளவால்

மிகச்சிறிய இதயம் உள்ள மிருகம் எது? சிங்கம்

கரப்பான் பூச்சியின் இரத்தம் என்ன நிறம் வெள்ளை


எஸ். எச். எப். சஸ்னா,

தரம்-08, கா/ துந்துவை முஸ்லிம் மகாவித்தியாலயம், துந்துவை

எம். லக்சான்,

தரம் - 04, கலைமகள் தமிழ் வித்தியாலயம், மத்துகம.

ஏ. ஹஸ்னா பர்மின்,

தரம் -03 ஏ, அ/ இகிரிகொல்லாவ மு. ம. வி.அனுராதபுரம்

பி. சதுனி

தரம்-05, அம்பேதென்ன த. வி.

மத்துகம.

டி. மேனகா

தரம்-01, இ/ லேன்ஸ்டவுன் தமிழ் வித்தியாலயம், கோணகும்புர.

ஏ. ஆர். பாத்திமா ரஸ்மினா

தரம் - 03 ஏ, ப/ அல். இர்ஷாட் ம. வி, ஹாலி - எல

எஸ். எப். சிப்லா,

தரம் 02, மாறை/ அல்- மீனா மு. ம. வி.மீயல்லை.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.