புத் 64 இல. 23

நந்தன வருடம் வைகாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 12

SUNDAY JUNE 03  2012

 
தமிழரை அதலபாதாளத்திற்குள் இட்டுச்செல்ல முயற்சிக்கும் TNA

மீண்டும் தலைதூக்கும் சம்பந்தனின் தனிநாட்டுக்கான அறைகூவல்;

தமிழரை அதலபாதாளத்திற்குள் இட்டுச்செல்ல முயற்சிக்கும் TNA

கடந்த கால அழிவுகள், இழப்புகளை ஞாபகப்படுத்தி அருண் தம்பிமுத்து எச்சரிக்கை

தமிழருக்கு விமோசனம் கிடைக்க தமிழ்த் தலைமைகள் இனியாவது அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலம் தமிழினம் அழிவுகளை சந்தித்த தேயொழிய விமோசனம் எதையுமே பெற வில்லை. தமிழ்த் தலைமைகள் மீண்டும் அதனை உயிர்ப்பித்து தமிழ் மக்களை அதல பாதாளத்துக்கு இட்டுச் செல்ல முயற்சிக்கின்றதா என மட்டக்களப்பு மாவ ட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப் பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் தமிழ்க் கூட்டமைப்பு தலைவரின் ஆக்ரோ சமான பேச்சுக்களும் தனிநாட்டுக் கோரிக் கையை யொட்டிய அறை கூவல்களும் தமிழி னத்தின் எதிர்கால நலனுக்கு ஆரோக்கியமான தல்லவெனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தேசிய நிகழ்வொன்றில் தேசியக் கட்சியுடன் இணைந்து தேசியக் கொடியை ஏந்திய சம்பந்தன், பின்னர் மட்டக்களப்பில் தனிநாட்டுக் கோஷத்தை உரத்துச் சொல்லியமை அவருக்கு ஏற்பட்ட அழுத்தத்தையே காட்டுகிறது.

இலங்கையில் ஏற்பட்ட இனக்கல வரங்களை மீண்டும் ஞாபகப்படுத்துவதன் மூலம், தமிழ் – சிங்கள உறவில் மீண்டும் விரிசலை ஏற்படுத்த சம்பந்தன் ஐயா போன்ற தலைவர்கள் முயற்சிக்கக் கூடாது. வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என மீண்டும், மீண்டும் உச்சாடனம் செய்வது தமிழினத்துக்கு விமோசனம் பெற்றுத் தருமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இனப்பிரச்சினை இற்றைவரை தீர்க்கப்படாமல் இருப்பதன் பிரதான காரணம் புலிகள் தனித் தமிbழக் கோரிக் கையில் இருந்து கீழிறங்கி வராமையே. கிடைத்த சந்தர்ப்பத்தையெல்லாம் புலித் தலைமையும் தமிழ்த் தலைமையும் நழுவவிட்டன. இந்தியாவினால் இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென தமிழ் மக்களுக்கு கதையளந்தனர். தமிழ்த் தலைமைகளின் கபடப் பேச்சுக்களை உண்மையானவை என நம்பிய தமிழினம், இன்று அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இனியாவது விமோசனம் கிடைக்க வேண்டுமெனின் தமிழ்த் தலைமைகள் ஆரோக்கியமான தீர்வு கிடைக்க ஒத்துழைக்க வேண்டும்.

மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு இடம்பெற்ற போது இந்தியத் தூதுவர் கிழக்குக்கு விஜயம் செய்தார். மட்டக்களப்பில் தமிbழத்தை உயிர்ப்பிக்கும் சம்பந்தன் ஐயாவின் முழக்கங்களுக்கும் இந்தியத் தூதுவரின் விஜயத்துக்குமிடையில் தொடர்பை ஏற்படுத்தும் விமர்சனங்கள் எழுந்தன. 1988 ஆம் 1989 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வடக்கு - கிழக்கு மாகாண சபையை ஈ. பி. ஆர். எல். எப். ஆட்சி செய்தபோது இந்தியாவின் திருவிளையாடல்களை அந்தப் பிராந்திய மக்கள் இன்றும் நினைத்துப் பார்க்கின்றனர். அதே நிலைமை மீண்டும் ஏற்பட்டுவிடுமோ என தமிழ் மக்கள் பீதியடைகின்றனர். பொருத்தமற்ற நேரத்தில் இந்தியத்தூதுவரின் கிழக்கு விஜயம் அமைந்ததாக மக்கள் சிலாகிக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை பிரிட்டன், அவுஸ்திரேலிய தூதுவர்களின் இலங்கை தொடர்பான கருத்துக்கள் நாட்டின் இறைமையை பாதிப்பதாகக் கூறும் அவர், இவர்கள் பொறுப்புணர்வுடன் கருத்துக்களை வெளியிட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.