இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி, அது தொடக்கப்பட்ட காலந்தொட்டு கொழும்பு மாநகர
பிரதேசங்களிலும், கொழும்பை அண்டியுள்ள பிரதேசங்களிலும் சேவை செய்து வருகிறது.
இந்திய வம்சாவளி மக்களின் உரிமையும் அவர்களுக்குரிய தனித்துவ பண்புகள்
பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாகச் செயற்பட்டு வந்துள்ளது.
அதே நேரத்தில் இதர இன மக்களோடு இந்திய வம்சாவளி மக்கள் நல்லுறவை வளர்த்துக் கொள்வதை
இடைவிடாது வற்புறுத்தி வந்துள்ளது. நாட்டில் சகல இன மக்களிடையேயும் பரஸ்பர
புரிந்துணர்வும் நல்லுறவும் வளர்ந்தோங்க வேண்டும் என்பதே முன்னணியின் இலட்சியமாகும்.
மலையகத்தில் இருந்து பெருந்தொகையான இந்திய வம்சாவளி இளைஞர்கள் வேலைதேடி கொழும்புக்கு
வந்துள்ளார்கள். பல்வேறு தொழில்களில் திறமையாக உழைப்பவர்கள், நம்பிக்கைக்குப்
பாத்திரமானவர்கள் என்ற நல்ல பெயரைப் பெற்றுள்ளார்கள்.
இன்று கொழும்பு வந்து இங்கு தொழில் புரிந்து கொண்டிருக்கும் மலையக இளைஞர்கள் என்னைச்
சந்தித்து முன்னணியின் சேவையை மலையகத்திற்கும் விஸ்தரிக்க வேண்டும் என்று
வற்புறுத்துகிறார்கள்.
சிறப்பான முறையில் நீண்டகாலமாக பல மலையக அமைப்புகள் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது
நாம் வேறு எதற்கு என்று அவர்களிடம் கூறினேன். ஆனால், அவர்கள் விட்டபாடில்லை.
அவர்களுடைய அன்பு வேண்டுகோளை என்னால் மறுக்க முடியவில்லை என்று முத்தப்பன்
செட்டியார் தெரிவித்தார்.
இந்தப் பின்னணியில்தான் ஒரு தொடக்க நிகழ்ச்சியாக தொழிலாளர்களுக்கு புனித மாதமான மே
மாதத்தில் நுவரெலியா மாவட்ட அம்பேகமுவ பிரதேச ஹட்டனில் ஒரு கூட்டம் நடத்த முடிவு
செய்தோம். மே தினம் மாதத்தின் முதல் திகதி என்றாலும் மே தின நிகழ்ச்சிகள் முழு
மாதத்திலும் நடைபெறலாம் என்று அன்பர்கள் கூறியதற்கிணங்க மே 27 ஆம் திகதி இந்தக்
கூட்டம் நடைபெற்றது.
ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அந்நியர் வந்து புகலென்ன நீதி என்று அன்று பாரதி
பாடினான். மலையகத் தலைவர்களிடையே கருத்து முரண்பாடுகள் நிலவினால் அதைச் சீர்படுத்தி
ஒற்றுமையை வளர்ப்பதே இன்றைய தேவையாகும். இந்திய வம்சாவளி மக்களுக்தெதிராக
கபடத்தனமான சூழ்ச்சிகளை முறியடித்து ஒற்றுமையை வளர்ப்பதையே முன்னணி குறிக்கோளாகக்
கொண்டிருக்கிறது.
விட்டுக்கொடுப்பு, சமூக நலன் கருதிய உளப்பூர்வமான சிந்தனை, இனப்பற்று, சமூகநலன்
கருதிய தூரசிந்தனை, மக்கள் நலன் கருதிய குறிக்கோள் இவையனைத்தும் எதிர்கால மலையகச்
சமூகத்தின் மாற்றத்திற்கு மிகவும் அவசியமான தொன்றாகும்.
இவ்வாறான அனைத்து நடவடிக்கை களையும் எதிர் காலத்தில் பரவலாக முன்னெ டுத்துச் செல்ல
மலையகத்திலுள்ள அனைத்து பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், அறிஞர்கள்,
எழுத்தாளர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினரும் முன்வந்து உதவவேண்டும்.
அதுமட்டுமன்றி மலையகப் பிரதேசத்தில் பொது அமைப்புகள் என்பவற்றில் நடக்கும் பொது
வைபவங்களில் அரசியல் வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறான நடவடிக்கைகள் ஊடாக மலையக அரசியல், தொழிற்சங்கங்களிடையேயான சிறுசிறு அரசியல்
கருத்து வேறுபாடுகளைத் தெரிந்து எதிர் காலத்தில் எதிர் கொள்ளப்போகும் பாரிய
பிரச்சினைகளை தீர்த்து வைப்பதன் மூலம் அரசியல் வேறுபாடுகளை காணாமல்
பேகச்செய்யமுடியும்.
மே தின தீர்மானங்கள்
இந்திய வம்சாவளி மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அதன் மேதின விழா முதன் முதலாக
முத்தப்பன் செட்டியார் தலைமையில் ஹட்டன் மாநகரில் கோலாகலமாக நடைபெற்றது. நுவரெலியா
பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதகிருஷணன் சிறப்பு அதிதியாகவும் மற்றும் அந்தனி ஜீவா,
புத்திரசிகாமணி ஆகியோருடன் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையை தங்கள் தாயகமாக ஏற்று ஒரே இலங்கை அதற்குள்
அனைவருக்கும் சமத்துவம் நிலவ வேண்டும் என்பதையே தமது நோக்காகக் கொண்டுள்ளனர்.
மொழியுரிமை மொழிக்கொள்கையை சரிவர நிறைவேற்றுதல், நியாயபூர்வமான அதிகார பகிர்வு,
எல்லாச் சமூகங்களும் அவர்கள் மக்கள் தொகைக்கேற்ப சகல மட்டங்களிலும் பிரதிநிதித்துவம்
ஆகியவை வேண்டும் என்பதே இலங்கை, இந்திய வம்சாவளி பேரணியின் அடிப்படைக் கொள்கையாகும்.
இந்திய வம்சாவளி மக்களுக்கு இன்று போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. மாத்தளை,கண்டி,
இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை போன்ற மாவட்டங்களில் இந்திய வம்சாவளி மக்களுக்கு
தகுந்த பாராளுமன்ற, மாகாண சபை, பிரதேச சபை பிரதிநிதித்துவம் இல்லாமலிருப்பது பெரும்
குறையாகும்.
தகுந்த பிரதிநிதித்துவம் இல்லாமலிருப்பது நாட்டின் அரசியலிலே சில முக்கிய
விடயங்களிலே இந்திய வம் சாவளியினருக்கு பங்களிக்கும் வாய்ப்புக் கிடைக்காமல் போய்
விடுகிறது.
இலங்கை, இந்திய வம்சா வளி மக்களை பிரதிநிதித்து வப்படுத்தும் அனைத்து
அமைப்புக்களினதும் ஒரு மாநாடு கூட்டப்பட வேண்டும் என்று இந்த மே தின விழா வின் போது
நாம் கோரிக்கை விடுகிறோம். கட்சி பேதங் களின்றி நாம் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசிக்க
வேண்டும் என்று இங்கு விழா அறைகூவல் விடுக்கப்படுகின்றது.