புத் 64 இல. 23

நந்தன வருடம் வைகாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 12

SUNDAY JUNE 03  2012

 
வாரமஞ்சரி கம்பளை வாசகர்வட்டம்

வாரமஞ்சரி கம்பளை வாசகர்வட்டம்

தினகரன் வாரமஞ்சரி வாசகர் வட்ட விழா கடந்த 27/05/2012 காலை 10.00 மணிக்கு கம்பளை இந்துக் கல்லூரியின் பாரதி மண்டபத்தில் பாடசாலை அதிபர் எஸ்.ரகு முன்னிலையில் இடம்பெற்றது. முதலாவது வாசகர் வட்டம் அட்டனிலும், இரண் டாவதாக பேருவளையிலும், மூன்றாவதாக யாழ்ப் பாணத்திலும், நான்காவதாக கம்பளையிலும் இடம் பெற்றது.

இதன் நோக்கம் பாடசாலை மாணவர் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதோடு, எழுத்தாற் றலை தூண்டுவதற்கு களம் அமைப்பதேயாகும். இந் நிகழ்வு தினகரன் வாரமஞ்சரி, யாழ் தினகரன் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக லேக்ஹவுஸ் ஆசிரியபீடப் பணிப் பாளர் சீலரட்ன செனரத், தினகரன் வாரமஞ்சரி, யாழ் தினகரன் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர் விசு கருணாநிதி, கம்பளை கல்வி வலய கோட்டக் கல்விப்பணிப்பாளர் எஸ். சீவரட்ணம், உதவிக் கல்விப்பணிப்பாளர் கம்பளை கல்வி வலயம் எஸ். சிதம்பரம், நாவலப்பிட்டி கதிரேசன் இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி எஸ். செல்வராஜ், கம் பளை முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் அதிபர் எம்.பி.எம். சார்ஜான், சமூக சேவையாளர் ஆறு முகம் கந்தசாமி ஆகியோரு கலந்துகொண்டு மங்கள விளக்கேற்றிவைத்தனர்.

கம்பளை இந்துக்கல்லூரி மாணவர்கள் தமிழ்த் தாய் வாழ்த்து பாடினார்கள் நிகழ்வில் கலந்து கொண்டவர்களை வரவேற்குமுகமாக வரவேற்பு நடனம் செல்வி.ஏ.எஸ்.கிருஷாலினியால் வழங்கப் பட்டது. கல்லூரியின் அதிபர் எஸ்.ரகு தமது வர வேற்புரையில் கூறியதாவது, இன்று தேசிய பத்தி ரிகை நமது பாடசாலையில் விழா எடுப்பதையிட்டு நான் பெருமை கொள்கின்றேன். அன்று போல் இன்று பத்திரிகைகள், இல்லை. எல்லா பத்திரி கைகளிலும் மாணவர்களின் அறிவை நோக்காக கொண்டு செயல்படுவதையிட்டு பாராட்ட வேண் டும் என்றார்.

இவ் விழாவின் நோக்கத்தைப் பற்றி தினகரன் வாரமஞ்சரி யாழ் தினகரன் செய்தி ஆசிரியரான விசு கருணாநிதி மிக அருமையாகத் தெட்டதெளிவாக கூறினார். லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரிய பீட பணிப்பாளர் சீலரட்ன செனரத் அதிதியாக கலந்து கொண்டு, சிங்கள மாணவர்களும் ஒரே பாடசா லையில் சகோதரர்களைப் போன்ற கல்வி கற்று வந்தததையும் ஒற்றுமையைம் பற்றியும் விபரமாக் கூறினார். கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த (சா) பரீட்சையில் கம்பளை கல்வி வலயத்தில் 9 பாடங்களில் “ஏ” விசேட சித்தியடைந்த மூன்று மாணவிகள்கேடயமும், சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். நாவலப்பிட்டி கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின் மாணவியான கந்தசாமி ஆரண்யாவை கம்பளை கல்வி வலய கோட் டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சீவரட்ணமும், உலப் பனை இக்ரா முஸ்லிம் மகாவித்தியா லயத்தின் மாணவியான எம்.ஏ.எப். சில்பாவை, தினகரன் வாரமஞ்சரி யாழ் தினகரன் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவரும் உலப்பனை இக்ரா முஸ் லிம் மகா வித்தியாலயத்தின் மாணவியான எம். ஆர்.எப்.பஸ்லியாவை கம்பளை இந்துக் கல் லூரி அதிபர் எஸ். ரகு ஆகியோர் கெளரவித்தனர்.

ஊடகமும் சமூக பார்வையும் என்ற தலைப்பில் கண்டி கல்வி வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் எஸ். தமிழ்ச் செல்வன் உரையாற்றினார். எழுத்தா ளரான புசல்லாவை திருமதி இஸ்மாலிகா, கம்ப ளையைச் சேர்ந்த திருமதி மஞ்சுளா கிருஷ்ணசாமி, சாந்தி ராஜதுரை, நாவலப்பிட்டியைச் சேர்ந்த திருமதி ஸ்டெலா மேரி பெனடிக்கும், பத்திரிகை யாளரான கே.ஏ.அலிமும் கேடயமும், சான்றி தழ்கள், மற்றும் பொன்னாடை போர்த்தி சிறப்பு விருந்தினர்களால் கெளரவிக்கப்பட்டனர். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விசயம் என்ன வென்றால் எழுத்தாளர்கள் அனைவரும் பெண்களாவர்.

கம்பளை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர் களால் வில்லுப்பாட்டும், விவாதப் போட்டிகளை நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியும் கம்பளை இந்துக்கல்லூரியும் “சமூகத்தில் அதிக தாக்கம் செலுத்தவது இலத்திரனியல் ஊடகமா அச்சு ஊடகமா இந்த விவாதப் போட்டிக்கு புசல்லாவ யோகலட்சுமி தமிழ் வித்தியாலயத்தில் முன்னாள் அதிபரும், எழுத்தாளருமாகிய திருமதி இஸ்மா லியா நடுவராக செயற்பட்டார். நாவலப்பிட்டி கதிரேசன் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளால் “பாரதியின் புதுமைப் பெண்” என்ற தலைப்பில் நடனமும் உலப்பனை அல்மினா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் அச்சம் அச்சம் இல்லை அடிமை என்னும் காலம் மாறிபோச்சு” நடனத்தை மேடையேற்றினர்.

தனி இசை நிகழ்ச்சியை கம்பளை இந்துக்கல்லூரி மாணவர்கள் நடத்தினர்.

இந்த தினகரன் வாரமஞ்சரி கம்பளை வாசகர் வட்டம் 2012ல் மிக சிறப்பாக நடத்துவதற்கு ஒத்து ழைப்பு வழங்கிய ஆறுமுகம் கந்தசாமி (நாவலப் பிட்டி கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின் பாடசாலை மேம்பாட்டுக்குழு செயலாளர்) எஸ். ஞானசேகரம் (கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபைத்தலைவர்) பாஸ்கரன் (கண்டி இந்து இளைஞர் மன்றத்தலைவர்) பாலசுப் பிரமணியம் (கண்டி) பொன்னுத்துரை ராஜா (வர்த்தகர்) கம்பளை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட மாணவர்களுக்கு தினகரன் வாரமஞ்சரி மூலமாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.