புத் 64 இல. 23

நந்தன வருடம் வைகாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 12

SUNDAY JUNE 03  2012

 
நோர்வு+ட் நகர் ஸ்ரீ சிவசுப்பிரமணிய

நோர்வு+ட் நகர் ஸ்ரீ சிவசுப்பிரமணிய

சுவாமி தேவஸ்தான தேர் பவனி இன்று
 

‘ஐந்து முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்

வெஞ்ஞமரில் அங்சேலன் வேல் தோன்றும்

நெஞ்சில் ஒருகால் நினைக்கின் ஒரு காலும்

தோன்றும்

முருகா என்று ஓதுவார் முன்’

ஆன்மா லயிக்கும் இடம் ஆலயம் ஆகும். ஆலயங்கள் இறைவன் அருள் சுரக்கும் இடங்கள் ஆகும். ஆலயங்களில் முதன்மை பெறுவது இறைவனது திருவுருவங்கள் ஆகும். இலங்கையில் பிரசித்திபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்துக்களால் சிவன் பாதம் பட்ட இடம் என போற்றப்படும் சிவனடிபாதமலைக்கு செல்லும் பிரதான பாதையிலும் பலாங்கொடை செல்லும் வழியிலும் இராசாத் தோட்ட நகர் என்று சொல்லப்படும் நோர்வூட் நகரம் அமைந்துள்ளது.

சலசலவென பாய்ந்தோடும் நீர்வீழ்ச்சி களும் காசல்a நீர்த்தேக்கமும் நகரத்திற்கு அழகு சேர்க்கும் அதேவேளை, இலங்கைக்கு அன்னிய செலாவணியை தேடிக் கொடுக்கும் தேயிலைச் செடிக ளும், மாணிக்க கற்களும் நிறைந்த நகரம் என்று சொன்னால் அது மிகை யாகாது, இங்கு தான் குன்று சூழ் கேகிலா நோர்வூட்பதி மேவும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் அமைந்துள்ளது. 1880 ஆண்டுக்கு பிறகு தென்னிந்தியாவில் இருந்து இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்கள் அதுவும் மத்திய மாகாணத்தில் குடியேறியவர்கள் குறிப்பாக அம்மன் வழிபாட்டையே மேற்கொண்டார்கள். அதேபோன்று தான் நோர்வூட் நகர இந்து வர்த்தகர்களும் ஆரம்பத்தில் அம்மன் வழிபாட்டையே மேற்கொண்டார்கள்.

இவ் ஆலயத்தில் ஆரம்ப கர்த்தா ந. றா. ம. அ. பெரிய கருப்பன் செட்டியார். இவர் ஸ்தாபன நிர்வாகியாக தன்னை இறைப்பனியில் ஈடுபடுத்திக் கொண்டு நகர வர்த்தகர்களுடன் கலந்துரையாடி 1943ல் நோர்வூட் நகரில் அழகிய குறிஞ்சி நிலத்தில் குமரனுக்கு கோவில் அமைக்க காணி பெற்றுக்கொண்டார்.

1952.03.15 ஆம் திகதி தான் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அக்காலப் பகுதியில் ஆ. சிதம்பரம் சேரவை தலைவராக நியமிக்கப்பட்டார். இவருடைய காலப் பகுதியில் தான் முதலாவது மகா கும்பாபிஷேகம் 1955.11.09 ஆம் திகதி நடைபெற்றது. அந்தக் காலத்திலேயே இந்தியாவோடு தொடர்பை ஏற்படுத்தி திருச்சி மாவட்டம் ஒக்கரை ஸ்ரீ. சி. கு. கந்தசாமி ஸ்தபதியாரை கொண்டு ஒரே கல்லில் வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி இந்திர மூர்த்தமாக மயில் பொறிக்கப்பட்டு மூலஸ்தான கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு ஆலய பரிபாலன சபை தலைவராக சி. நல்லையா நியமிக்கப்பட்டார்.

இவ்வாலயத்தின் இரண்டாவது மகா கும்பாபிஷேகம் 1972.06.08 ஆம் திகதி நடத்தப்பட்டது. மூன்றாவது கும்பாபிஷேகம் 1983.05.26 சிறப்புற நடைபெற்றது. அக்கால கட்டத்தில் மு. கருப்பையாபிள்ளை, தொடர்ந்து டி. சப்பாணிப்பிள்ளை ஆகியோர் ஆலய பரிபாலன சபை தலைவர்களாக பணி செய்தார்கள்.

இறுதியாக நான்காவது கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பாலஸ்தாபனம் 2000.01.19 ஆம் திகதி செய்யப்பட்டது.

தென்னிந்தியாவில் இருந்து சிற்ப ஸ்தபதிகள் சங்க கரூர் கிளைத் தலைவர் பி. சேதுராமன் ஸ்தபதியார் தலைமையில் சிற்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு ஆலய கட்டட பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. விநாயக பெருமான், மஹாவிஷ்ணு, மஹாலக்ஷ்மி, நடராஜர், கிருஷ்ணர், நவகிரகங்கள், வைரவர், வசந்த மண்டபம் ஆகியன அமைக்கப்பட்டன.

திருப்பணி குழுத் தலைவர் பெரி. சதாசிவம்பிள்ளையின் முயற்சியால் 2001.10.29 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இவ்வாலயம் 70வது வருடத்தில் கால்பதிக்கும் வேளையில் இன்று 3 ஆம் திகதி காலை 7.00 மணிக்கு கங்கா பூஜை அபிஷேக தீர்த்தம் கொண்டு வருதல், பால்குட பவனி அலங்கார பட்டு கொண்டு வருதல், வசந்த மண்டப பூஜை சுவாமி உள்வீதி வலம் வருதல், மகேஸ்வர பூஜை தொடர்ந்து அன்ன தானம் வழங்கப்படும். மாலை 6.00 மணிக்கு சண்முக அர்ச்சனை தொடர் ந்து இரவு 8.00 மணிக்கு அலங்கரிக்கப் பட்ட தேரில் ஹட்டன் சிவநாதன் குழுவினரின் மேளவாத்தியங்கள் சகிதம் கலை, கலாசார நடனங்கள் மற்றுமன்றி கதிர்காமம் பதியிலி நடனமாடிய மயில் நடன தாரகைகளும் கலந்து சிறப்பிக்க இருக்கின்றார்கள்.

கடந்த 23.05.2012 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உற்சவம் எதிர்வரும் 06.06.2012 வரை 15 நாட்கள் திருவிழா நடைபெறும். பொங்கல் பூஜை, கும்ப பூஜை, தேர் பவனி, தீர்த்தோற்சவம் பூங்காவனம், பிராயசித்த அபிஷேகம், வைரவர் பொங்கல் என்பன இடம்பெறும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.