புத் 64 இல. 23

நந்தன வருடம் வைகாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 12

SUNDAY JUNE 03  2012

 
உலக பால் தினம் 2012

உலக பால் தினம் 2012
 

கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் நற்செய்தி

தேக ஆரோக்கியம்: நீண்ட ஆயுள் தூய பசும்பாலை தினமும் அருந்துவோம்

ஒவ்வொரு மனிதனும் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ எதிர்பார்க்கின்றான். அந்தவகையில் நல்ல போஷா க்குள்ள நிறைவான புரதச்சத்துமிக்க உணவுகளை உண்பதன் மூலம் முழுமையடை கின்றான் என்ப தற்கிணங்க, உலக பால் தினமான இன்று மஹிந்த சிந்தனைக்கமைவாக தேசிய கால்நடை உற்பத்தியில் இலங்கை தேசம் தன்னிறைவு பெற்று இலங்கை மக்களின் மாற்று பொருளா தார ரீதியில் தேசிய கால் நடை உற்பத்தி பல வழிகளில் வளர்ச்சி அடைந்து வருகின்றது. இத்துறை மக்களுக்கு மிகவும் கைகொடுக்கும் என்பதை உணர்ந்து எமது கால்நடை அபிவிருத்தி அமைச்சு ஏற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து உலக பால் தினமாக இன்று நாட்டு மக்களுக்கு நாம் விடுக்கும் செய்தி என்னவென்றால் "தேக ஆரோக்கியம் தூய திரவ பசும் பாலை தினமும் அருந்துவதன் மூலம் வாழ்க்கையில் செழிப்புற வாழ்ந்து வெற்றி காணலாம்.

இன்று நம் நாட்டில் முறையான வாழ்வாதாரங்களை இழந்துள்ள மக்களுக்கு தேசிய கால்நடை பால் உற்பத்தி ஒரு வரப்பிரசாதமாக நாட்டின் பல பாகங்களிலும் அமைந்துள்ளதோடு இதன் மூலமாக மக்களுக்கு தேசிய பொருளாதார வளர்ச்சியில் துணைநிற்கின்றது. இலங்கை முழுவதற்கும் கால்நடை அபிவிருத்தி அமைச்சு தமது சேவையை நாடெங்கிலும் விஸ்தரித்துள்ள அதேவேளை யுத்தம், ஆழிப் பேரலை ஆகியவற்றின் அனர்த்தங்களால் வடகிழக்கு மாகாணங்கள் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளன. இன்று அமைதி சூழ்நிலை உருக்கொண்டுள்ளது. இந்த நிலையில் இவர்களின் ஜீவாதாரத்திற்காக இதர அமைச்சுக்களும் வெளிநாடுகளும் உதவி புரிகின்றன. எவ்வாறாயினும் அந்த மக்களின் வாழ்வாதாரத்திற்காக பல திட்டங்கள் எமது அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கால்நடைகளிடமிருந்து பெறப்படும் போஷாக்கின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கும் வண்ணம் உலக நாடுகளின் உலக உணவு பாதுகாப்பிற்கு கரிசனை காட்டப்படுகின்றது. இந்த நிலையில் கால்நடை வளர்ப்பு தேசிய, சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது.

கால்நடை உற்பத்தியில் அதிகளவு பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்கள், இறைச்சி வகைகள், முட்டை வகைகள் போன்றன மக்களின் தேவைகளை அதிகரிக்க செய்கின்றன. மேற்குறித்த உற்பத்திகள் மூலம் மக்களின் மாற்று பொருளாதாரம், வாழ்க்கை தர உயர்ச்சியையும், வளர்ச்சியையும் மலர்ச்சியையும் மேம்படுத்துகின்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.