புத் 64 இல. 23

நந்தன வருடம் வைகாசி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ரஜப் பிறை 12

SUNDAY JUNE 03  2012

 
தமிழக பங்களிப்பை தொடலாமா? விடலாமா?

தமிழக பங்களிப்பை தொடலாமா? விடலாமா?
 

ஹிதாயத்துல்லா மிர்சா
 

கல்முனைக்கு வழிகேட்டால் கல்கண்டு விலை சொல்கிறார்!
நாகூர்கனி மீது பாய்கிறார் மிர்ஸா

,ந்த மாதம் மே 20ம் திகதி நம் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு தமிழகப் பங்களிப்பைத் தொடலாமா, விடலாமா? என்ற மணிப் புலவர் மருதூர் ஏ.மஜீது அவர்களின் கருத்துக்கு ஒரு மாற்றுக் கருத்து என்ற விமர்சனத்தை தினகரன் வார மஞ்சரியில் படித்தேன்.

எனவே எனக்கு ஏற்பட்ட ஒரு விமர்சனத்தையும் எழுத வேண்டும் போல் தோன்றியது. எனவே எனது பேனாவின் பகர்வு! நாட்டுப்பற்று கலை இலக்கியப் பற்றும் நிறைந்த பிரபலமான நடிகர் காமினி பொன்சேகாவின் சாத்வீகமான கேள்விக்கு மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீது அவர்கள் கூறிய பதிலில் எமக்கு அறிவுறுத்தப்படுவது யாதெனில் கலை இலக்கியம் வளர்ச்சி பெற வேண்டுமென்றால், கலை விலை போக வேண்டும். கலை விலைபோனால் தான் கலைஞர்கள், கவிஞர்கள், எழுத் தாளர்கள் ஊக்கம் கொண்டு தங்களின் பணிகளை மேற்கொள்ளுவார்கள்.

மாறாக தென்னிந்திய சஞ்சிகைகளும் புத்தகங்களும் சினிமாக்களும் நமது நாட்டுக்கு வருகை தரும் போது, எமது பணம் தென்னிந்தியாவுக்கு போகின்றது. இதனால் நமது கலைஞர்களின் ஊக்கம் கட்டுப்படுவதோடு, கலை இலக்கியமும் வளர்ச்சி பெறாது குன்றிவிடும்.

மேலும் ஒரு சமூகம் சுயகலை இலக்கிய வளர்ச்சி இல்லாத சமூகமாக இருந்தால் அந்தச் சமூகம் ஒரு முடவனைப் போன்ற நொண்டிச் சமூகமாக நலிந்து காணப்படும். கலை இலக்கிய வளர்ச்சி உள்ள சமூகம் பூரணமான மகிழ்ச்சி நிறைந்தவனைப் போல் அந்தச் சமூகம் காணப்படும். இதைத்தான் மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் அவர்கள் அறிவுறுத்துகிறார்.

‘நமது காலத்தில் 1977ம் ஆண்டிற்கு முன்பிருந்தே தென்னிந்தியாவின் சஞ்சிகைகள், புத்தகங்கள், சினிமாப் படங்கள் நமது நாட்டிற்குள் புகுந்து எமது கலை கலாசாரத்தையும், இலக்கியத்தையும் வளரவிடாது தடுத்து எங்களின் நாட்டுச் செல்வத்தை சுருட்டி செல்லவிடக்கூடாது’ என்ற கோசம் இன்றுவரை தொடர்கிறது என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

இந்தக் கோசம் நாகூர்கனி நினைப்பது போன்ற ஒரு சிறு சாதாரண கோசமல்ல. நாட்டின் பொருளாதாரத்தையும் வேறு சில அம்சங்களையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையான கோசம். நாகூர் கனி அவர்கள் இக் கோசத்தை ஆதரிக்காமல் இருப்பதற்கு தந்தை நாட்டுப் பற்றுக் காரணமாக இருக்கலாம்.

இந்தியர்களே உலகில் நாட்டுப்பற்றுக் கூடியவர்கள் என்பது சர்வதேசத்துக்குத் தெரியும். நாகூர்கனி அவர்களின் பெயரிலேயே உள்ள ‘நாகூர்’ என்ற ஊரின் பெயரை; தனது பெயரோடு சேர்த்து வைத்துள்ள தந்தையின் நாட்டுப் பற்றை என்னவென்று கூறுவது.

எனவே நாகூர் கனி போன்றவர்கள் இதனை ஆதரிக்காமல் இருக்கலாம் அதற்காக எல்லோரையும் அப்படி எதிர்பார்ப்பது தவறாகும்.

இதேவேளை நமது நாட்டிலிருந்து ஒரு நூல் அல்லது ஒரு சஞ்சிகையேனும் தென்னிந்தியாவுக்கு ஏற்றுமதியாவதில்லை.

இந்த ஒரு வழிப்பாதையை மணிப்புலவர் அவர்கள் பல தடவைகள் தென்னிந்தி யாவில் பல கூட்டங்களில் சுட்டிக் காட்டி யுள்ளார் என்பது எனக்குத் தெரியும்; இதற்கு அவர்கள் தென்னாட்டுச் சட் டத்தைக் காரணங்காட்டித் தப்பித்துக் கொள்ளப்பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களுடைய சந்தையாக இருந்தே ஆக வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். இதற்கு இங்குள்ள தந்தை நாட்டுப்பற்றாளர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள்.

இது இவ்வாறிருக்க இந்தப் பொதுவான பிரச்சினையை எழுதப்புகுந்த நாகூர் கனி அவரது கட்டுரையில் ‘மனச்சிக்கல்’ பொருள் அறிந்து பேசவேண்டிய மணிப்புலவர் எதை எதையோ பேசி தனது மேதா விலாசத்தின் மீது வெளிச் சமிட்டுக் கொண்டார்; சாச்குப்போக்கு சரிந்த பார்வை; வார்த்தைகளை அளக் காமல்; இந்த உணர்வு ஆரோக் கியமானதா? தமிழ் பண்டிதர் களையும்; தமிழ் இலக்கிய வாதிகளையும் பேசித்திரிவோர் போன்ற பதப்பிர யோகங்களைப் பாவித்துள்ளது. அவரது தமிழ் அறியாமையும், மனம் விசா லமில்லாததையும் காட்டுகிறது எனலாம்; இது விமர்சனமல்ல, விசமம்.

இவ்வாறு கூறும் நாகூர் கனி ஒரு விடயத்தை நன்றாகப் புரிந்து கொண்டு விமர்சனத்துக்கு வர வேண்டும். கல்முனைக்கு வழி கேட்கும் மணிப் புலவரிடம் கல்கண்டு விலை சொல்லும் வியாபாரியைப் போல் எழுதுகிறார் அவர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.