பிரிட்டன் உயர்ஸ்தானிகரின் சர்ச்சைக்குரிய கருத்தும்
பிரிட்டன் உயர்ஸ்தானிகரின் சர்ச்சைக்குரிய கருத்தும்
மேற்குலக நாடுகளின் இரட்டைக் கொள்கையும்
துருப்புகளை நிலை கொள்ளச் செய்தலில் இலங்கைக்கு
ஒரு நியாயம்; பிரிட்டனுக்கு ஒரு நியாயமா?
இவரது கருத்துகள் பொருத்தமானவைகளா!
உலகில் எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டுக்கும், அதன் அரசாங்கத்துக்கும்
பாதுகாப்புத்துறை என்பது ஒரு உயிர் நாடி போன்றது. பாதுகாப்பு கட்டமைப்பை
சரியாகப்பேணி அச்சுறுத்தல்களை அதிரடியாக சந்திப்பதற்கு ஏதுவாக உபாயங்களை வகுத்துக்
கொள்வதில் ஒவ்வொரு நாடும் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நிலையில் இருக்கலாம்.
அவ்வாறான திட்டமிடலில் வியூகங்கள் வகுக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் அரச
பாதுகாப்புத்துறைக்கு நேரிட இடமுண்டு. அந்த வரிசையில் பூகோள ரீதியாக நோக்குகையில்
உலக பொலிஸ்காரன் அமெரிக்கா தனது கடமை போன்றும், கட்டாயம் போன்றும் பாதுகாப்பு
வியூகங்கள் என்ற போர்வையில் பிறநாடுகளுக்கு ஓடோடிப் போய் கால்பதித்து விடுகிறது.
அந்த வகையில் யுத்தம் நீண்டகாலமாக நடைபெற்ற நாடொன்றில் போருக்குப் பின்னரான
வியூகங்களிலிருந்து போருக்கு முன்னரான வியூகங்கள் மாறுபடலாம். யுத்தத்தக்கு
முன்னரான தந்திரோபாயங்களை விடவும் அதன் வெற்றிக்குப் பின்னரான தந்திரோபாயங்கள்
வழ¨மாயனதை விட சற்று வித்தியாசமானதாக அமைந்திருக்க நேரிடும் என சுட்டிக்காட்டும்
ஆய்வாளர்கள் அமைதிச் சூழலிலான பாதுகாப்பு ஒழுங்குகள் திடீரென ஏதும் ஏற்படலாம் என்ற
முன்னெச்சரிக்கை கொண்டதாகவும் சிவிலியன்களை பாதுகாப்பதில் கூடுதல் ஜாக்கிரதையுடன்
இருப்பதை அடியொற்றியதாகவும் இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.
இத்தகைய ஒழுங்குகளிலேயே பாதுகாப்புப்படையின் இருப்பு முகாம்கள் அமைப்பு நிலை கொள்ளச்
செய்யும் இடங்கள், எங்கு, எத்தனை பேரை, எவ்வளவு காலத்துக்கு நிலை நிறுத்த வேண்டும்
என்ற வேலைத்திட்டங்களும் உள்ளடக்கப்படலாம் எனத் தெரிவிக்கும் இலங்கையின்
பாதுகாப்புத்துறையாளர்கள் சமீபத்தில் சர்வதேசமும், சர்வதேச ராஜதந்திரங்களும்
இலங்கையின் வடக்கு, கிழக்கில் நிலை கொள்ளச் செய்யப்பட்டுள்ள இராணுவத்தை குறைக்க
வேண்டுமென கூறியிருப்பதையிட்டு கடுங் கவலையடைந்துள்ளனர்.
பாதுகாப்புப் படையினர் சிவில் நிர்வாகத்தில் வடக்குப் பகுதியில் தலையிடுக்கின்றனர்
என்பது தமிழ்க் கூட்டமைப்பின் குற்றச்சாட்டு, அவ்வாறு நடைபெறவில்லை என்பது
அரசாங்கத்தின் விளக்கம். நாட்டின் சகல பகுதிகளிலும் இருப்பதைப் போன்றே வடக்கிலும்
இராணுவம் நிலை கொண்டுள்ளது, சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்காக படைகளை குறைப்புச்
செய்யவோ, வாபஸ் பெறவோ முடியாதென்பது ஜனாதிபதியின் நிலைப்பாடு, அதனை சரி என ஏற்கின்ற
பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் நாட்டின் ஏனைய இடங்களில் இராணுவம் நிலை கொண்டுள்ள
எண்ணிக்கைக்கு ஏற்ப வடக்கிலும் சமப்படுத்த வேண்டும் என்று அபிப்பிராயம் தெரிவிப்பு.
இதனையே ராஜதந்திரியின் உள்நாட்டு விவகாரம் தொடர்பிலான தலையீடு என்ற குற்றச்சாட்டு
எச்சரிக்கை - முன்னைய அனுபவம்
பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் ஜோன் றென்கின் வடக்கு, கிழக்கில் இராணுவ இருப்பை குறைக்க
முடியாது என்ற ஜனாதிபதியின் கூற்றினை வெளிப்படையாக சவாலுக்குட்படுத்தியுள்ளார்.
புலிகள் இயக்கம் தொடர்ந்தும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லையாதலால்
நாட்டின் ஏனைய பகுதிகளில் காண முடியாத அற்புதம் போன்று வடக்கில் இராணுவம்
குவிந்துள்ளதன் தர்க்க சாஸ்திரம் யாது எனக் கேள்வி எழுப்பி கருத்துக்கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் ஜோன் றென்கின் வெளிவிவகார அமைச்சினால் அழைக்கப்பட்டு அமைச்சரினால்
கடுமையாக எச்சரிக்கப்பட்டார். 1991 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையின்
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பாக கருத்துக் கூறிய டேவிட் கிலட்சன் நாட்டை
விட்டு வெளியேறுமாறு கேட்கப்பட்டதைப் போன்று இவரும் கேட்கப்படுவாரா என்பது தெரிய
வரவில்லை. அல்லது எச்சரிக்கப்பட்டதோடும் நின்றுவிடலாம். எப்படியாயினும் அரசாங்க
சார்பு கட்சிகள் உயர்ஸ்தானிகரின் கருத்துக்கு கடுமையான கண்டனங்களை வெளியிட்டு
வருகின்ற அதேவேளை அவரை நாட்டை விட்டும் வெளியேற்ற வேண்டும் என்றும் கோரி வருகின்றன.
மதிநுட்பமான அணுகுமுறை
எது எப்படியிருந்த போதிலும் இலங்கை பிரிட்டன் ஸ்தானிகர் தொடர்பில் மேலும்
நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் கவனமாக செயல்பட வேண்டிய தேவையுண்டு. ஒரு பக்கம்
தூதுவர் நாட்டுத்தலைவரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் பகிரங்கமாக
உடன்படாத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் சிறந்த சூழ்நிலையின்
அடிப்படையில் நோக்குகையில் அது ராஜதந்திரமல்ல என்பதால் அவருக்கு எதிரான கண்டனத்தை
நியாயப்படுத்தலாம் என நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
தூதுவரின் குறிப்புக்கள் தொடர்பில் மேலும் நடவடிக்கைகளை எடுக்க முனையில் அடுத்த
வருடம் கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டு
ஏற்பாட்டாளர் என்பதையும் மனதில் வைத்துக்கொண்டே பலமான நடவடிக்கைகள் எடுப்பது பற்றி
கொழும்பு யோசிக்க வேண்டும். ஏற்கனவே கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹாபர் குறித்த மாநாடு
கொழும்பில் நடத்தப்பட்டால் தான் சமுகமளிக்கப் போவதில்லை என கூறியிருந்தமையும்,
அவுஸ்திரேலிய பேத் நகரில் இடம்பெற்ற இறுதி கூட்டத்தில் கொழும்பில் நடத்தாதிருக்க
கனடா எடுத்த முயற்சி படுதோல்வி அடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. பொதுநலவாய
தலைவர்கள் மாநாட்டை நடத்துகின்ற கெளரவம் கொழும்புக்குக் கிடைப்பதற்கு அப்பால்
பயங்கரவாதத்தை தோற்கடித்து இலங்கை அதன் சொந்தக்காலில் எழுந்து நிற்பதை ஒரு தேசம்
என்ற அடிப்படையில் காண்பிக்கக் கூடிய ஒரு அரிய வாய்ப்பு தூதுவரை வெளியேற்றுவதன்
மூலம் நழுவிப் போகவோ, அந்த சந்தர்ப்பம் பிரிட்டனுக்கு சாதகமாக அமைவதாகவும்
-எடுத்துக்கொள்ளக் கூடாது.
குற்றச்சாட்டும் உரிமையும்
பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொண்ட பயங்கரவாதத்துக்கு எதிராக இலங்கை
யுத்தத்தை மேற்கொண்டிருந்த போது கண்ணை மூடிக் கொண்டிருந்த மேற்குலக நாடுகள் சில
இலங்கையின் இராணுவ தந்திரோபாயங்கள் தொடர்பில் தற்போது ஆலோசனை வழங்க முற்படுவதாக
குற்றஞ்சாட்டப்படுகிறது.
இத்தகைய முயற்சி மறுபடியும் இலங்கையர்கள் சகலரையும் ஆபத்துக்குள் தள்ளக்கூடிய
மற்றுமொரு பயங்கரவாத பிரசாரத்துக்கு சாத்தியமான வாய்ப்பளிக்கக்கூடிய “இலவச
நிபுணத்துவ இராணுவ ஆலோசனை” போன்றிருப்பதாக கருத்துரைக்கப்படுகிறது.
அரசாங்கம் தேசத்தினதும், பிரஜைகளினதும் நலனில் தூய அக்கறை கொண்டு உரிய நடவடிக்கையை
எடுக்கக்கூடிய நிலையில் இலங்கையின் இராணுவ தந்திரோபாயங்கள் தொடர்பில் வலிந்த
நடவடிக்கைகளை திணிக்க எந்த நாட்டுக்கும் உரிமையில்லை என கூறப்படுகிறது.
இலங்கை ஒரு சுதந்திர நாடு. நாட்டின் எந்தப் பகுதியில் வடக்கிலா, கிழக்கிலா,
தெற்கிலா, மேற்கிலா தனது படையினரை நிலை நிறுத்த வேண்டுமென்பதை தீர்மானிக்கும் உரிமை
உண்டு, கள யதார்த்தத்தை கருத்தில் கொண்டு தர்க்க சாஸ்திரங்களை பரிசீலித்து எதனைச்
செய்ய வேண்டுமென தீர்மானிப்பது இராணுவ அதியுயர் பீடத்தைப் பொறுத்ததாகும். யுத்தம்
வெல்லப்பட்ட போதும் புலிகளின் நோக்கு இருக்கிறது. ஒரு பெரிய புலி சிவில்
சமூகமேயுண்டு.
அந்தடிப்படையில் நிலமை நிச்சயமின்றிக் காணப்படுவதால் எந்த உறுப்பினரையும் திருப்பி
அழைப்பதோ, மட்டுப்படுத்துவதோ சாத்தியமற்றது என்றெல்லாம் கூறும் ஒரு சாரார்
பாதுகாப்புப் படையினரே நாட்டின் பாதுகாவலர்கள் என்பதால் முழுப்பலத்துடன் படையினர்
வடக்கில் நிலை கொண்டிருக்க வேண்டும் என்கின்றனர்.
அச்சமும் அச்சுறுத்தலும்
வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படுமானால் தீவிரவாதமும், பயங்கரவாதமும்
மீண்டும் தலை தூக்கும். பயங்கரவாத அச்சுறுத்தல் புத்துயிர் பெறப் பார்க்கின்றமை
யதார்த்தமானது ஏனெனில் அதற்கு ஆதரவான அரசியல் சக்திகள் மற்றும் புலிகளின் பதிலிகள்
இலங்கை இந்தியா மற்றும் சில நாடுகளில் செயற்பாட்டிலேயே காணப்படுகின்றன. அத்தகையோர்
பிரிவினைவாத இலக்குகளையோ விம்பங்களையே கைவிட்டதாகத் தெரியவில்லை.
பலயீனமான சட்டம் ஒழுங்கு நிலமை அமுலாக்கம் புலனாய்வு போன்றன காரணமாக கோட்பாட்டுத்
தீவிரவாதமும், பயங்கரவாதமும் வளர்ந்து 1975 இல் துரையப்பா கொலையோடு நாடுபூராகவும்
பிரபல்யம் கண்டது. தமிழர்கள் உட்பட அநேக இலங்கையர்கள் இராணுவம் வாபஸாகுவதை
விரும்பவில்லை. அதற்கு இரண்டு காரணங்களுண்டு.
பாதுகாப்பு 1983 வரையில் புலிகளுக்கு பலியானவர்கள் தொண்ணூறு வீதமானோர் தமிழர்கள்,
அப்போதிருந்தே தமிழர்கள் முஸ்லிம்கள், சிங்களவர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கால்
நூற்றாண்டு காலத்துக்கு இலங்கை பின்தள்ளப்பட்டது.
இலங்கையில் புலிகள் முடக்கப்பட்டாலும் தமிழ் நாட்டில் குறிப்பிடத்தக்க
பிரசன்னமுண்டு. பயங்கரவாதத்துக்கு துணைபுரியும் புலி கோட்பாட்டாளர்களும்,
தலைவர்களும், ஒரு புதிய தமிழ் பரம்பரையை ஊக்கப்படுத்தி இராணுவ மயப்படுத்திக்
கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அனுதாபம் கொண்டதும் முன்னணியான இயக்கங்களூடாக
நியூயோக், லண்டன் போன்ற இடங்களில் நாடு கடந்த தமிbழ அரசு என்ற போர்வையில் புலி
இயக்கம் இயங்குவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிவிலியன்களுக்கு இராணுவம் வழங்கியுள்ள செம்மையான பாதுகாப்பு வீதிகள் நிர்மாணம்,
வைத்தியசாலை வசதிகள், பாடசாலைகள் புதுப்பிப்பு, வாழ்வாதார விருத்தி போன்றவை
மீன்பிடித்துறை விவசாய உதவி இரத்ததானம் ஆகிய கட்டமைப்புச் செயல்பாடுகள் மூலமாக
ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த பத்தாண்டுகளில் இலங்கை எதிர்கொள்ளக்கூடிய மாபெரும்
சவால் மீதமாக உள்ள புலிகளாலும், அவர்களது பதிலிகளாலும் பிரசாரப்படுத்தப்படக் கூடிய
இனரீதியான தீவிரவாதமாக இருக்கலாம்.
அரசாங்கம் தமிழர்கள் விவகாரத்தில் ஈடுபட்டு சகல சமூகத்தவருடனும், கெட்டியான தோழமையை
குறிப்பாக வடக்கு, கிழக்கில் கட்டி எழுப்ப வேண்டும். இராணுவம் மற்றும் புலனாய்வு
அநேகமான தமிழர்களை உள்வாங்க வேண்டும் தமிழ் கற்பதை கட்டாயமாக்க வேண்டும். வடக்கு,
கிழக்கில் ஆட்சேர்ப்பு செய்து வேலைக்கமர்த்துவதில் பொலிஸ் பிரிவு ஒரு உதாரணமாக திகழ
முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
ஸ்திரத்தன்மை - ஏகாதிபத்திய உணர்வு
முப்பது வருடங்கள் நீடித்த யுத்தத்தின் பின்புலத்தில் இராணுவ ஸ்திரப்பாடு
அத்தியாவசியமானது. உலகம் அதன் நலன்களை மேற்கொண்டு நகர்த்த ஆட்சி மாற்ற முயற்சிகள்
அல்லது முரண்பாட்டுக்கு உரமூட்டும் வகையில் ஆயுதங்களையும், பணத்தையும் வழங்க
தயாராகவுள்ளது. மேற்குலகில் புலி ஊக்குவிப்பாளர்கள் தனியான நாடு என்ற கோஷத்தையும்,
கனவையும் கைவிடவில்லை அல்லது எந்தவகையிலும் அவர்களது அடிப்படை இயங்கு நிலைப்பாட்டை
‘மாற்றிக்கொள்ளவுமில்லை’
உலகில் என்ன நடக்கிறது என்பது இலங்கைக்கு தெரியும் என்பது தூதுவருக்கும் தெரியும்.
இந்த தனிநபர் அவரது நாட்டின் சார்பாகவோ மடத்தனமாகவோ, மடத்தனமின்றியோ,
விருப்பத்துடன் / கர்வத்துடன் ராஜதந்திர அணுகுமுறை கோட்பாட்டின் எல்லைகளுக்கு
மிதமிஞ்சி கால்பதித்துள்ளார். இலங்கை பிரித்தானியாவின் குடியேற்றமும் அல்ல. அதில்
தூதுவர் ஒரு முக்கியஸ்தருமல்ல. அவருடைய நடவடிக்கை இந்த நாட்டின் பாதுகாப்புக்கு ஒரு
அச்சுறுத்தலாக கருதப்பட வேண்டியுள்ளது. அவரது கூற்று இந்த நாட்டுக்கு எதுவித
அனுகூலத்தையும் ஏற்படுத்தப் போவதில்லையாயினும் ஒருவகை ஏகாதிபத்தியத்தை
உணர்த்திற்று. உலகம் முழுவதும் மனிதத்துவத்திற்கு எதிராக அமெரிக்காவுக்கு
உதவியாகவும், ஒத்தாசையாகவும் இருந்த பிரிட்டனின் றன்கின் தனது பணியை மிஞ்சிவிட்டார்
என தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டனின் துருப்புக்களும்
தர்க்க சாஸ்திரமும்
பிரிட்டனின் துருப்புகள் வெளிநாடுகளில் காலத்துக்கு மிஞ்சியும் நிலை கொண்டுள்ளன.
அத்தகைய நாடுகளிலிருந்து வெளியேற வேண்டும் அல்லது பிரசன்னத்தை குறைக்க வேண்டும் என
இலங்கை கோரினால் நிலமை எவ்வாறிருக்கும் என கேள்வி எழுப்பும் பெரும்பான்மை வாதிகள்
‘றன்கினின் குறும்பைப் பற்றி எவ்வாறு வர்ணிப்பது என பேசிக் கொள்கின்றனர்.
இந்து சமுத்திர வலயத்துக்கே ஒரு அச்சுறுத்தல் இதுவரையில் இருப்பதை மேற்குலக
புலனாய்வு அறிந்துள்ளதனாலேயே புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை தொடரப்படுகிறது.
இலங்கையின் அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் குந்தகமாக அமைந்துள்ளது. தங்களது
நலன்களுக்கு ஒரு அச்சுறுத்தல் என்பதனாலேயே பிரிட்டன் மற்றும் மேற்குலகம் தாங்கள்
விதித்த தடையை முறையாக பேணி வருகிறது. வடக்கு, கிழக்கில் இருந்தே அச்சுறுத்தல்
விரிசலடைகிறது என்பதை புரியாதவர் போல் அப்பிரதேசத்தின் இராணுவ இருப்பின்
எண்ணிக்கையை ஏனைய இடங்களைப் போன்று சமப்படுத்துக் கோருகிறார் போலும்.
பிரிட்டன் தனது துருப்புக்களை 19 இடங்களுக்கு மேல் நிலை கொள்ளச் செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான், அஷென்சன் தீவு, பொல்கன்ஸ், பெலைஸ், புரூணை, கனடா, சைப்பிரஸ், டைகோ
காஸியா, எதியோப்பியா, பொக்லன்ட் தீவுகள், ஜோர்ஜியா, ஜேர்மனி, கிப்ரால்டார், ஈராக்
கென்யா, குவைத், லைபீரியா, ஓமான், சவூதிஅரேபியா, ஸியராலியோன் போன்ற இடங்களில் ஒரு
இலட்சத்து தொண்ணூறாயிரம் படையினரில் 30,000 பேர் வரை பிரிட்டனின் தந்திரோபாய
நலன்களுக்காக நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் பிரிட்டனால் தனது இராணுவத்தினரை உள்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான
மைல்களுக்கு அப்பால் பிரசன்னப்படுத்த முடியுமானால் இலங்கை, பாதுகாப்பு, அமைதி,
ஸ்திரத்தன்மை போன்வற்றுக்கு தந்திரோபாய நலன்களாக கருதப்படக்கூடிய இடங்களில் தங்களது
படையினரை நிலை கொள்ளச் செய்வதில் எத்தகைய தவறு இருக்க முடியும் என்பதே
கேள்வியாகும்.
பிரிட்டனின் மதிப்பீட்டின்படி தேசத்தையும் அதன் கீழானவற்றையும் பாதுகாத்தல் ஒரு
நெருக்கடி நேரிடின் சிவில் அதிகாரிகளுக்கு ஆதரவும் உதவியும் வழங்குதல், போன்றனவே
அந்நாட்டுப் படையினரின் பணியாகும். அந்தடிப்படையில் இரண்டாம் உலகப் போர்
முடிவடைந்து 67 வருடங்களாகிவிட்டன. ஆனால் அமெரிக்காவும் பிரிட்டனும், இதுவரையில்
ஜேர்மனியிலும் ஒக்கினாவாவிலும் - ஜேர்மனியர்கள், ஜப்பானியர்களின் எதிர்ப்புகளுக்கு
மத்தியிலும் தளங்களைக் கொண்டுள்ளன. இந்தப் பின்னணியில் இலங்கையில் மூன்றே ஆண்டுகள்
மாத்திரமே போர் முடிவுக்கு கழிந்துள்ளன. ஆகவே வடக்கு, கிழக்கில் படையினரின் இருப்பு
தொடர்பில் தர்க்கிக்கும் றன்கினின் தர்க்கத்திலுள்ள தர்க்க சாஸ்திரம்தான் என்ன?
அவர் எழுப்பியுள்ள தர்க்கங்களும், தகவல்களும் ஒரு ராஜதந்திரி என்ற ரீதியில்
அவரைப்பற்றிய நல்லபிப்பிராயத்தை உயர்த்தவில்லை என்றே உரைக்கப்படுகிறது.