![]()
நந்தன வருடம் சித்திரை மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை |
||
ஒபாமாவின் ஒருபால் திருமண அங்கீகாரத்தால்அமைதியிழக்கும் அமெரிக்கா, ஐரோப்பா?அமெரிக்காவின் எல்லையில்லாத தனிமனித சுதந்திரம் இறைவனின் ஏற்பாடுகளை
கட்டமைப்புகளை உடைத்துச் செல்லுமளவு அல்லது உதாசீனம் செய்யுமளவிற்கு போய்விடுமோ
என்பதே இன்றைய மத தலைமைகளின்
மனித வரலாறு ஆரம்பமானது தொட்டு இன்று வரை இதுவே பொது வான முறையாகவும் உள்ளது. புதிதாக மேற்குலகிலும் அமெரிக்காவிலும் முளைத்துள்ள தனிமனித உரிமைவாதம் ஒருபால் திருமணத்தை அங்கீகரிக்கு மாறு ஆர்ப்பாட்டம் செய்கின்றது. ஒரு பெண் இன்னொரு பெண்ணையும், ஒரு ஆண் மற்றொரு ஆணையும் திருமணம் செய்து குடும்பம் நடத்த அனுமதிக்க வேண்டுமாம் எப்படியிருக்கு தனிமனித உரிமை சிந்தனையின் உச்சக்கட்ட வளர்ச்சி. ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலனவற்றில் இந்த நடைமுறை சட்டத்திலுள்ளது.
கனடா, தென்னாபிரிக்கா போன்றவையும் இந்த ஒருபால் திருமணங்களை ஏற்றுள் ளன. அண்மையில்
அமெரிக்க ஜனாதிபதி யும் இந்த வினோதமான மனித உரி மைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
கிறிஸ்தவ மத அமைப்புகள் இது குறித்து இன்னும் வாய்திறக்கவில்லை. தென்னமெரிக்க
நாடுகளிலுள்ள பழமை பேணும் கிறிஸ்தவ அமைப்புகள் கடுமையாக இதைக் கண்டித்துள்ளன. இந்த தீய நடைமுறைக்கு தென்ன மெரிக்க நாடுகள் இடமளிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ அமைப்புகள் கள த்தில் குதித்துள்ள போதும் 2010 ஆம் ஆண்டு ஆர்ஜன்டீனா ஒருபால் திருமணத்தை அங்கிகரித்தது. தென்னமெரிக்க நாடுகளில் ஆர்ஜன்டீனாவே முதலாவதாக இந்த ஒருபால் திருமணத்தை அங்கீ கரித்ததென்பதால் கிறிஸ்தவ மத அமைப்புக்களின் எதிர்ப்பையும் அதி ருப்தியையும் சம்பாதித்துக் கொண்டது. ஏனய தென்னமெரிக்க நாடுகள் எல்லாவிடயத்திலும் அமெரிக்காவை எதிர்ப்பதைப் போல் இந்த ஒருபால் திருமண விடயத்திலும் அமெரிக்காவை ஆட்சேபிக்கின்றன. மதம், கலாசாரம் ஒரு காரணமாக இல்லாவிடினும் அரசியலே இதற்குப் பின்னணியாயுள்ளது. அவுஸ்திரேலியாவின் பாராளுமன்றத்தில் மூன்று வகையான சட்டமூலங்கள் இந்த ஒருபால் திருமணம் சம்பந்தமாக முன்வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் ஜுலியட் கிலாட் இது தொடர்பான தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறிவிட்டார். ஒபாமா நடைமுறையை தான் பின்பற்றமாட்டாராம். தனது கட்சி எம்.பிக்கள் பல பேர் இந்த ஒருபால் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கும்படியும் அனுமதிக்கும்படியும் கோரியுள்ள நிலையில் தன்னால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார். ஒபாமா இதை அங்கீகரித்திருந்தால் அவரது தனிப்பட்ட நிலைப்பாட்டின் வெளிப்பாடு. இயற்கை உணர்வின் அடிப்படையில் எழுவதே திருமணம் இதில் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வதே மானிட வரலாறு. ஒருசிலர் இதை வேறு வகையில் எதிர்பார்ப்பதால் அதையும் பிழையென்று சொல்ல முடியாத நிலையுள்ளது என்கிறார் அவுஸ்திரேலிய பெண் பிரதமர் ஜூலியட்கிலாட். பிரேஸில் இந்த ஒருபால் திருமணத்தை சிவில் சமூகங்களின் கையில் ஒப்படைத்து விட்டு அந்த அமைப்புக்களின் ஆலோசனை அங்கீகாரங்களுடன் செய்யலாமென்கிறது. ஆனால் அங்குள்ள மத அமைப்புகள் இதைச் சட்டமாக்கக் கூடாது என்று தொடர்ந்தும் போர்க்கொடியிலுள்ளன. பிரான்ஸ் ஜனாதிபதியாகவிருந்த நிக்கலஸ் சர்கோஸி இந்த ஒருபால் திருமணத்தை கடுமையாக எதிர்த்தார். சென்ற தேர்தல் பிரச்சாரங்களிலும் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த நடைமுறையை ஒழிப்பதாகவும் ஒருபால் திருமணத்தை சட்டமாக்கப்போவதில்லை என்றும் மேடைகளில் சூளுரைத்தார். ஆனால் தேர்தலில் தோற்றுப்போய்விட்டார். இப்போது புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஹோலண்ட் அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்குள் இதை சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்கிறார்.
இப்போது அமெரிக்காவின் பக்கம் வருவோம். நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எப்படியாவது மீண்டும் வெற்றி பெற வேண்டுமென்ற ஆசை ஒபாமவை பாடாய்ப்படுத்துகிறது. ஏற்கனவே பல வெளிநாட்டு இராணுவ நடவடிக்கைகளால் பொருளாதாரம் பாரிய சுமையாக மாறியுள்ளன. எனவே, ஒருபால் திருமணத்தை அங்கீகரித்தாவது வாக்குகளைப் பெறலாமென்று ஒபாமா நினைத்திருப்பார். இதனால் ஆணும், ஆணும், பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்வதை சட்டமாக்கியுள்ளார். அமெரிக்காவிலுள்ள அதிகமான மானிலங்கள் இந்தச் சட்டத்தை எதிர்க்கின்றன. சுமார் 30 மாநிலங்கள் குறிப்பாக கரோலினா, புலோரிடா, கொலரொடோ, வேர்ஜினியோ, நிவாடோ, ஒஹியோ, வளிகொன்ஸன் போன்ற மாறிலங்கள் இந்த இயற்கைக்கு மாறான ஒருபால் திருமணத்தை எதிர்த்துள்ளன. ஒட்டுமொத்தமாக 61% வீதமானோர் இந்த இயற்கைக்கு முரணான திருமணத்தை எதிர்க்கின்றனர். இதற்கிடையில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள மிற்ரொமினி ஒருபால் திருமணத்தை எதிர்த்து கடுமையாக பிரச்சாரம் செய்யவுள்ளாராம். ஒபாமாவுக்கும் இரண்டு பெண்பிள்ளைகள் உள்ளனர். “என்னை ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தால் அப்பெண்ணை என்ன முறை சொல்லி அழைப்பீர்கள் என்று ஒபாமாவின் மகள் தனது தந்தையைப் பார்த்துக் கேட்டபோது” வாய் பிளந்தாராம். மகளை ஆண் முடித்தால் மருமகன் என்று சொல்லலாம் பெண்ணே பெண்ணை முடித்தால் எவ்வாறு உறவு சொல்லி அழைப்பது. மேற்குலகில் இவையெல்லாம் பெரிதாக எடுபடப்போவதில்லை. வெள்ளைமாளிகையில் வேலை செய்யும் பலபேர் ஒருபால் நாட்டமுள்ள பெற்றோரை கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு பெற்றோர்களின் அன்பு, பராமரிப்பு விடயத்தில் எதுவித பாரபட்சமும் காட்டப்படுவதில்லை என்பதை அவ்வூழியர்கள் சொல்லத் தான் கேட்டிருக்கிறேன் என்று கூறும் ஒபாமா அரசியலுக்காக இயற்கை முறையை மாற்றுவது தப்பில்லை என்கிறார்போல. ஒபாமாவின் வாதம் சரியென்றால் ஆண்டவன் ஒரு ஆதமையும் ஒரு ஏவாளையும் படைத்திருக்க தேவையில்லையே! இரண்டு ஏவாள் அல்லது இரண்டு ஆதத்தைப் படைத்திருக்கலாமே என்கின்றனர் மத அமைப்பினர். இவை எல்லாவற்றையும் கிறிஸ்தவவர்களின் உயர் மத பீடமான வத்திக்காண் பார்த்துக் கொண்டிருக்கிறது. வத்திக்கானின் அறிக்கைகள் வெளிவந்த பின்னரே மேற்குலகம் அமெரிக்கா என்பன தடுமாறப் போகின்றன. வத்திக் கானும் இதை அங்கீகரிக்கமாட்டா தென்பதே பலரின் கருத்து. காதலென்றால் ஆணும், பெண்ணும் இருவர் வேண்டுமன்றோ....... |
||
|
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். webmanager@lakehouse.lk |