புத் 64 இல. 20

நந்தன வருடம் சித்திரை மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ஜ.ஆகிர் பிறை 21

SUNDAY MAY  13  2012

 
தாயிற்சிறந்ந . . . . . .

என்னதான் வளர்ந்து பெரியவர்களானாலும் நெருக்கடி மிகுந்த இன்றைய யுகத்தில், தாயின் மடியில் மறுபடி குழந்தையாய், கவலை மறக்க அனைவருக்குள்ளும் இருக்கும் ஏக்கத்தை உணர்த்தும் கவிதாயினி உமா மகேஸ்வரியின் கவிதை இது.

வாழ்த்தட்டைகள், பூங்கொத்துகள், தங்க மோதிரங்கள் என தாயின் அன்பை விலைபேச, வைப்பதாய் அமைந்து விட்டன. இன்றைய அன்னயர் தினக் கொண்டாட்டங்கள். தாய் சேய் உறவென்பது வெறும் சடங்கோ, சம்பிரதாயங்களோ வேண்டி நிற்பதல்ல.

பல்வேறு சர்வதேச தினங்களைப் போலவே அன்னையர் தினமும் வணிக மயமாக்கப்பட்டு விட்டது. அன்னையர் தினம் சர்வதேச ரீதியாக கொண்டாடப்பட ஆரம்பித்து 9 ஆண்டுகளில் அதனைத் தொடக்கி வைத்தவரே அதன் எதிர்ப் பாளராகவும் மாறி விட்டார். காரணம், ஏனைய தினங்களைப் போலவே அன்னையர் தினமும் வணிகமயமாக்க ப்பட்டதுதான். 16 ஆம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டில்தான் ணிothலீrs ஷிunனீay என்ற நாள் முதன்முறையாக அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. ஈஸ்டர் மாதத்தில் வரும் நான்காம் ஞாயிற்றுக்கிழமை இயேசுவின் தாயை நினைவு கூரும் வகையில் இந்த நாள் கொண்டாட்டப்பட்டு வந்திருக்கிறது.

ஆனால், இன்று உலகெங்கிலும் கொண்டாட்டப்படும் அன்னையர் தினத்துக்கான மூலகாரணம் அமெரிக்காதான்.

அமெரிக்காவின் மேற்கு வேர்ஜீனியா மாநிலத்தில் வாழ்ந்த ‘அனா ஜார்விஸ்’ என்ற பெண் சமுக சேவகிதான், அன்னையர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட வித்திட்டவர்.

போரின் போது, யுத்தகளத்தில் அனேக அமெரிக்க வீரர்கள் பலியாகினர். அமெரிக்க வீரர்களின் குடும்பங்கள் சிதைந்தன. அவ்வாறு யுத்தத்தால் சின்னாபின்னப்பட்ட குடும்பங்களை இணைக்கப்பாடுபட்டவர்தான் இந்த அனாஜார்விஸ் ‘அனா ஜார்விஸ்’ ஒரு சமுக சேவகி தன் உயிர் உள்ளவரை ஒரு சமூக சேவகியாகவே இருந்து மறைத்தவர். அனா ஜார்விஸின் தாய் 1904 ஆம் ஆண்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து தனது தாயின் நினைவாக உள்ளூரில் இருந்த ஒரு மெதடிஸ்த தேவாலயத்தில், 1907ம்ஆண்டு 06 மாதம் 10 ஆம் திகதி சிறப்பு வழிபாடு நடத்தினார்.

இவர் பின்னர் பென்சில்வேனியா மாநிலத்தின் பிலடெல்பியாவில் குடியேறினார். தாயின் சமுகசேவையைத் தான் செய்யத் தொடங்கினார். தாய்மார்கள் கெளரவிக்கப்பட வேண்டும். இதற்கென ஒரு தினம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற தன் எண்ணத்தை அவர் பென்சில்வேனிய மாநில அரசுக்கு அவர் தெரியப்படுத்தினார். 1913ஆம் ஆண்டு முதல் அன்னையர் தினம் அங்கீகரிக்கப்பட்டது.

ஆனால் அமெரிக்கா முழுவதும் இது விடுமுறை தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என எண்ணிய அவர், அதற்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். 1914 ஆண்டில் அன்றைய ஜனாதிபதியாகவிருந்த வூட்ரோ வில்சன், மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாக அறிவித்தார்.

ஆனால் என்ன நோக்கத்திற்காக, அன்னையர் தினம் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்துக்கு மாறாக இன்று அன்னையர் தினமும் வணிகம யப்படுத்தப்பட்டு விட்டது. அன்னையர் தினம் சர்வதேச ரீதியாகக் கொண்டாடப்பட ஆரம்பித்து, 9 ஆண்டுகளே கடந்த நிலையில், அதனை உருவாக்கிவர், அதன் வணிக மயமாக்கலை எதிர்த்துப் போராட ஆரம்பித்திருக்கிறார். அன்னையர் தினம் இவ்வாறான நிலையில் பயணிக்கும் என்று தெரிந்திருந்தால் அவ்வாறானதொரு தினத்துக்காகப் பாடுபட்டிருக்க மாட்டேன் என்று அவர் கூறியிருக்கிறார். அமெரிக்காவில் வணிக ரீதியாக வெற்றிபெற்ற தினங்களில் ஒன்று அன்னையர் தினம்.

அன்னையர் தினத்தில் மட்டும் அமெரிக்கர்கள் மலர்களுக்காக, 2.6 பில்லியன் டொலர்களும், விரும்பிய பரிசுப் பொருட்களுக்கு 1.53 பில்லியன் டொலர்களும், வாழ்த் தட்டைகளுக்கு 68 மில்லியன் டொடர்களும் செலவு செய்கின்றனராம்.

அன்னையர் தினம் என நீங்கள் இணையத்தில் தட்டச்சு செய்தால், பல லட்சம் வலைப் பக்கங்கள், வாழ்த்தட்டைகள் அனுப்ப, பூங்கொத்துக்கள் அனுப்பவென உங்கள் முன் விரியும், இவ்வளவும் ஏன் இலங்கையில் கூட இன்று அன்னையர் தினம் ஒரு கொண்டாட்டந்தான்.

அன்னையர் தினம் என்ற பெயரில் வருடத்தில் ஒருநாளை ஒதுக்கி வாழ்த்தட்டைகளை அனுப்புவதாலோ, பூங்கொத்துகளை வழங்குவதாலோ தாயன்புக்குப் பிரதியுபகாரம் செய்து விட முடியுமா?

புற்aசல்களாக அனுதினமும் முளைக்கும் அன்னையர் இல்லங்களில் தனிமையில் வாடும் அன்னையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையிலும், மகளோ மருமகளோ வேலைக்குச் சென்றுவிட தனது பேரப்பிள்ளைகளைத் தள்ளாத வயதிலும் முகம் கோணாது பார்த்துக் கொள்ளும் வேலைக்காரிகளாய் அன்னையர்களின் தியாகங்கள் தொடரும் நிலையிலும் வருடத்தில் ஒருநாள் மட்டும் தாயை மகிழ்வூட்டுவதோடு எம்கடன் தீர்ந்து விடுகின்றதா?

அம்மாவுக்கு கவிதையெல்லாம்

சும்மா

அடுக்களை இருட்டுள்

அம்மாவின் சூரியன் சுருங்கிப் போச்சு.

 

தன் வீடு, கணவன், குழந்தைகள்

சமையல், புடவை

இவையன்றி வேறெதும்

அறிவாயோ அம்மா சொல்!

 

உன்

கனவுகளின் சருகுகள்தான்

உனக்குக் காலடிப் பாதையோ?

 

அம்மாவுக்குத் தனியாய் எதுவுமில்லை

இருப்பினும் அம்மா எல்லாமும் ஆவாள்.

அம்மாவின் கால் தடங்கள்

தரையிலும், மனதின் கரையிலும்.

 

அம்மா நீ

வரைந்த சித்திரங்கள்

 

காற்று வெளியிலும், என் கனவுவழியிலும்.

மனத் தெளிவில்

 

முக்கிப் பார்த்தால்

சுயம் வெளுத்துப் பல்லிளிக்கும் சொந்தங்கள்

புன்னகைச் சருகுகள்

போர்த்த புதைகுழிகள் பாதையெங்கும்!

 

என் கற்பனையின் சவங்கள் நாறும்

கவிதை நோட்டில்!

 

புத்தக வார்த்தையாய்ப் போச்சு

ப்ரியமும், நேயமும்!

 

எனவே அம்மா நீ,

மறுபடி தொட்டிலிடு உன் மடியில்

எனக்காக,

அறியாச் சிறுமியாய்

அணைத்துக்கொள் என்னை.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.