புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

ஹொண்ராஸ் சிறை தீ

ஹொண்ராஸ் சிறை தீ பொறியில் விழுந்த கைதிகள்

ஹொண்டூராஸ் சிறையில் எழுந்த தீ 358 பேரின் உயிரைக் காவுகொண்ட போது எத்தனையோ உறவுகளின் இதயங்களை வேரறுக்கச் செய்தது. சென்ற செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்கு ஹொன்டூராஸின் கொமாயகுவா சிறையில் வெகுண்டெழுந்த தீ சுமார் மூன்று மணிநேரம் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி முழு மூச்சுடன் பெரும் சுவாலைகளைக் கிளப்பியெரிந்தது. செய்தி கேட்ட உறவினர் அயலவர்கள் எல்லோரும் ஆலாய்ப் பறந்து வந்து பார்த்தபோது சிறைக்குள்ளே அமர்க்களமும் அவலக்குரலும் உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு வெளியே தாவிப்பாய்ந்து தப்பித்துக் கொள்ள முயன்றோர் சிறையில் வைத்து எரிக்கப்பட்ட சடலங்கள் போல் கருகிமாண்டனர். களவு, கொள்ளை, கப்பம், கொலை போன்ற குற்றங்களுக்காகத் தண்டனை விதிக்கப் பட்டோர் வாழும் இடமே சிறைச்சாலை. வாரக்கணக்கில் மாதக்கணக்கில் வருடக்கணக்கில் இன்னும் ஆயுள் தண்டனைக்கும் உள்ளானாரே இச்சிறையிலிருந்தனர். அச் சிறையில் தீ யேற்பட்டதால் ஆயுள்தண்டனை பெற்ற சிலர் தப்பி யோடியும், மாத வருடக்கணக்கில் அடைக்கப்பட்டோர் வாழ்வேயில்லாமல் சிறைக்குள் சாம்பலானதும் இறைவனின் ஏற்பாடே. என்ன வடிவில் ஆண்டவனின் இந்த ஏற்பாடு வந்ததோ தெரியாது.

இன்னும் சொல்லப் போனால் ஆண்டவனின் ஏற்பாட்டா அல்லது ஏண்டவன் (இயலுமானவன்) ஏற்பாடா இத் தீ விபத்து என்பது இன்னுமே தெரியாது. ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளின் முடிவுகளிலே இது தெரியும். ஹொண்டூராஸ் வடமத்திய அமெரிக்க நாடு. எல்லா நாடுகளிலுமுள்ளதைப் போல் சிறை நீதிமன்றம் பொலிஸ் எல்லாம் இங்குண்டு. மொத்தம் 24 சிறைச்சாலைகளில் எட்டாயிரம் பேரை அடைத்துவைக்க வசதிகளுள்ளன.

ஆனால் நாட்டிலுள்ள 24 மொத்த சிறைச்சாலைகளில் 24 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனராம். அப்படியானால் 16 ஆயிரம் பேர் அளவுக்கதிகம். இதேபோல தீ அனர்த்தம் நிகழ்ந்த சிறையிலும் அளவுக்கு அதிகமான கைதிகளாம். ஏறக் குறைய 250 பேரைக் கொள்ளும் இச் சிறைச்சாலையில் 852 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இங்கு இது வரைக்கும் உலகின் எந்தச் சிறைச்சாலையிலும் ஏற்படாத அனர்த்தம் ஏற்பட்டதையெண்ணி அனைவரும் ஆச்சரிய மடைகின்றனர். சிறைக்காவலர்கள் பொறுப்புடன் நடந்திருந்தால் உரிய வேளைக்கு சாவியுடன் வந்து கதவுகளைத் திறந்திருந்தால் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பில்லையென்கின்றனர். இதனால் சிறைக் காவலர்கள் அதிகாரிகளின் தொழில்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் பக்கச் சார்பற்ற விசாரணைகளும் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயரும் போது அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் கண்டனப் பேணிகள் களைகட்டும் வேளையில் நிலைமைகள் மேலும் மோசமடைய வாய்ப்புண்டு. சிறைக்குளுண்டான தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பல சிறைக்