லண்டனில் நடைபெற்ற மலையக இலக்கிய மாநாட்டில் அரங்கேறிய மெய்வெளியின் 'காத்தாயி காதை' நேரடி நாடகமாக அமையாமல், stylised play ஆக மிக நேர்த்தியாக நிகழ்த்தப்பட்டது. சாம் பிரதீபனின் செறிவான எழுத்துரு நாடக வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. நடிப்பில் நன்கு பண்பட்ட ரஜித்தா காத்தாயி பாத்திரத்தைஏற்று...