அர்ஜூன் மகேந்திரன் நியமிக்கப்பட்டமை சட்ட ரீதியானது : சேமசிங்க

மத்திய வங்கியின் ஆளுநராக

மத்திய வங்கியின் ஆளுநராக 2015ஆம் ஆண்டில் அர்ஜூன் மகேந்திரன் நியமிக்கப்பட்டமை சட்டரீதியானதுடன் அரசியலமைப்புக்குட்பட்டதென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசேக்கர எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே, இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மகேந்திரன் பிணைமுறி மோசடியில் ஈடுபட்டாரா? என பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி எழுப்பிய மற்றுமொரு கேள்வி, சபையில் வாதங்களை ஏற்படுத்தியது.

“பத்திர மோசடி தொடர்பாக பல நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதென்பதை பாராளுமன்ற உறுப்பினர் அறிந்திருக்க வேண்டும்” என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். மகேந்திரன் 2015 ஆம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டாரென அன்றைய தினம் கூறப்பட்டது. இதனால்,இராஜாங்க அமைச்சர் சிரமத்தில் இருப்பதாகத் தெரிகிறதென விஜேசிறி தெரிவித்தார்.

 

 


Add new comment

Or log in with...