சாஹிரா விளையாட்டு விழா: 96 குழுவினர் சம்பியன்

கொழும்பு சாஹிரா கல்லூரி 90 குழு பழைய மாணவர்களினால் நடத்தப்பட்ட வருடாந்த விளையாட்டு விழாவில் 96 குழு ஒட்டுமொத்த சம்பியன் கிண்ணத்தை வென்றது.

கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில் ‘8 போல் பூல்’ போட்டியில் 98 குழுவும், கிரிக்கெட் போட்டியில் 99 குழுவும், தடகளப் போட்டியில் 96 குழுவும், கால்பந்து போட்டியில் 96 குழுவும் கயிறிழுத்தல் போட்டியில் 96 குழுவும் வெற்றியீட்டியது.

சாஹிரா கல்லூரி அதிபர் ரிஸ்வி மரிக்கார், ஆளுநர் சபை விளையாட்டுக் குழுத் தலைவர் நைனா முஹம்மட் உட்பட பிரமுகர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.

ருஸைக் பாரூக்


Add new comment

Or log in with...