ஆயுததாரிகளால் 30 பேர் கொலை

வடக்கு நைஜீரியாவில் ஆறு கிராமங்கள் மீது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இனங்களுக்கு இடையிலான வன்முறைகள் அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புதிதாக பதவி ஏற்றிருக்கும் நைஜீரிய ஜனாதிபதி இந்த வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். எனினும் கொள்ளைக்காரர்களுக்கு பாதுகாப்புப் பணத்தை செலுத்த தவறியதற்கு பழிதீர்க்கவே தாக்குதல் நடத்தப்பட்டதாக இரு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல்கள் இடம்பெற்ற பகுதியில் கால்நடை மேய்ப்பாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...