சவூதி நாட்டில் ஈரானிய தூதரகம் இன்று திறப்பு

கடந்த ஏழு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சவூதி அரேபியாவில் உள்ள ஈரானிய தூதரகம் இன்று திறக்கப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

சீனாவின் மத்தியஸ்தத்தில் கடந்த மார்ச் மாதம் ஈரான் மற்றும் சவூதி இடையிலான இராஜதந்திர உறவை மீண்டும் ஆரம்பிக்கும் உடன்பாடு எட்டப்பட்டது.

இந்நிலையில் சவூதி நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டிருந்த ஈரானிய இராஜதந்திரிகள் அலிரேசா எனாயதி தலைமையில் மீண்டும் சவூதிக்கு திரும்பவுள்ளனர். எனாயத்தி முன்னர் குவைட்டுக்கான ஈரானிய தூதுவராக செயற்பட்டவராவார். “புதிதாக நியமிக்கப்பட்ட ஈரானிய தூதுவரின் பங்கேற்புடன் ஈரானிய தூதரகம் செவ்வாய்க்கிழமை (06) உள்ளூர் நேரப்படி பி.ப. 6.00 மணிக்கு திறக்கப்படவுள்ளது” என்று ரீயாதிலுள்ள சவூதி இராணுதந்திர தரப்பினரை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் ஈரானில் உள்ள சவூதி தூதரகத்தை திறக்கும் திகதியை சவூதி இன்னும் உறுதி செய்யவில்லை.


Add new comment

Or log in with...