1st IDI; SLvAFG: முக்கிய சாதனைகள்

இலங்கை மற்றும் ஆப்கான் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியின் முக்கிய சாதனைகள் வருமாறு,

  • இலங்கை ஒருநாள் அணிக்காக தனது கன்னி ஒருநாள் போட்டியில் ஆட நேற்று வாய்ப்பு கிடைத்த துஷான் ஹேமன்த இலங்கையின் 208ஆவது ஒருநாள் வீரராக பதிவானதோடு மதீஷ பதிரண 209 ஆவது ஒருநாள் வீரராக இடம்பிடித்தார்.
  • முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்தபோதும் 50 ஓவர்களுக்கு முகம்கொடுத்து 268 ஓட்டங்களை பெற்றது. அதாவது இந்த ஆண்டில் இலங்கை அணி ஆடிய ஆறு ஒருநாள் போட்டிகளிலும் முழுமையான ஓவர்களுக்கும் துடுப்பெடுத்தாடிய இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். எஞ்சிய நான்கு தடவைகளும் குறுகிய ஓவர்களில் சகல விக்கெட்டுகளை பறிகொடுத்தது மாத்திரமல்ல இரு முறை 100 ஓட்டங்களைக் கூட பெறவில்லை.
  • அண்மைக் காலமாக சோபிக்கத் தவறிவரும் சரித் அசலங்க 95 பந்துகளில் பெற்ற 91 ஓட்டங்கள் அவர் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் கடந்த ஓர் ஆண்டில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகும். அவர் கடைசியாக 2021 ஜுன் 21 ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதம் பெற்றிருந்தார். ஒருநாள் போட்டிகளில் இது அவரது இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களாகும்.
  • குசல் மெண்டிஸினால் 11 ஓட்டங்களையே பெற முடிந்தது. அதாவது அவர் கடைசியாக ஆடிய ஆறு ஒருநாள் இன்னிங்ஸ்களில் மொத்தமாக பெற்ற ஓட்டங்கள் 49 மாத்திரமே. இதில் மூன்று முறை அவர் டக் அவுட் ஆகியுள்ளார்.
  • இப்ராஹிம் சத்ரான் தனது நான்காவது ஒருநாள் சதத்தை 2 ஓட்டங்களால் தவறவிட்டார். அவர் இலங்கை அணிக்காக ஆடும் 4 ஆவது ஒருநாள் போட்டியாக இது இருந்தது. இதில் அவர் இரண்டு சதங்களை பெற்றிருப்பதோடு ஓட்ட சராசரி 94 ஆகும்.

Add new comment

Or log in with...