தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம்

தமிழ் தலைமைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை

தமிழ் அரசியல் தரப்புகள் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்

சீன அரசாங்கத்தினால் கடற்றொழிலாளர்களுக்காக நன்கொடையாக பெற்றுக்கொண்ட மண்ணெண்ணெய்யை பூநகரி கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக நேற்று (02) வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், கடற்றொழிலாளர்களின் நலனுக்காக இந்திய தூதுவரை சந்திப்பதற்காக தாங்கள் ஏற்கனவே எடுத்த நிலைப்பாட்டை தற்போது மாற்றிக் கொண்டிருப்பது அவர்களின் சுயநல அரசியலை வெளிப்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத தொழில் முறைகளையும் அத்துமீறல்களையும் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்தியத் தூதுவரை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக, கடந்த மாதம் 30ஆம் திகதி யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மறுதினம் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமது நிலைப்பாட்டை மாற்றியிருந்தமை தொடர்பாகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.


Add new comment

Or log in with...