பறக்கும் மர்மப் பொருள் பற்றி நாசா முதல் கூட்டம்

அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் பற்றி அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா நடத்திய முதலாவது பொதுவெளி கூட்டத்தில், வேற்றுக் கிரகவாசிகளின் செயற்பாடுகள் தொடர்பில் இன்றுவரை உறுதியான ஆதாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த மர்மப் பொருட்கள் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக நாசா கடந்த ஆண்டு நிபுணர் குழு ஒன்றை நியமித்திருந்தது. இந்தக் குழுவின் கூட்டமே கடந்த புதனன்று வொசிங்டனில் (31) இடம்பெற்றது.

இதில் பல தசாப்தங்களாக சேகரிக்கப்பட்ட அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களின் 800 மர்மமான அறிக்கைகளை அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ஆனால் ஒரு சிறிய பகுதியே உண்மையில் விளக்கப்படாதவையாக உள்ளன என்று இந்த ஆய்வுக் குழு குறிப்பிட்டுள்ளது.

எனினும் வேற்றுக்கிரகவாசிகள், இராணுவ எதிரிகள் மற்றும் இது தொடர்பில் முன்வைக்கப்படும் விளக்கங்களை இந்தக் குழு முற்றாக நிராகரிக்கவில்லை.

குறிப்பாக 2004 தொடக்கம் இராணுவ விமான ஓட்டிகளால் அவதானிக்கப்பட்ட 144 சம்பவங்கள் குறித்து 2021இல் பெண்டகன் அறிக்கையிட்டிருந்தது. இதில் ஒன்றைத் தவிர எஞ்சிய அனைத்து சம்பவங்களும் விளக்கப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...