சுமார் 300 முதல் 400 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் நீக்கம்

- உள்ளூர் உற்பத்திகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை

தற்போது இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ள 300 முதல் 400 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (02) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

டொலருக்கான கேள்வியுடன் ஒப்பிடுகையில் அதன் கிடைக்கும் தன்மை அதிகரித்துள்ளதன் காரணமாக, டொலருக்கான பெறுமதியின் அடிப்படையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உள்ளூர் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையிலான உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கும் எண்ணம் இல்லை என்றும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...