இராகலையில் பிரித்தானிய உயர் ஸ்தானிகரின் உதவிக்கரம்

நுவரெலியாவில் இயங்கும்  செஞ்சிலுவை சங்கத்தினால் பிரித்தானிய நிதி உதவியின் கீழ் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட  இராகலை சென் லெனாட்ஸ் தோட்ட மக்களுக்கு உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது .

நுவரெலியா செஞ்சிலுவை சங்கத்தின் வழிகாட்டலின் கீழ் இராகலை செஞ்சிலுவை பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு (30) அன்று இராகலை சென் லெனாட்ஸ் தோட்டத்தில் இடம்பெற்றது.

இதில் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன்  கலந்து கொண்டதுடன்  பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் குடும்பங்களைச் சேர்ந்த சென் லெனாட்ஸ் தோட்ட  மக்களுக்கு உதவித்தொகையையும் வழங்கி வைத்தார்.

அத்துடன் உதவித்கொகைகளை பெற்றுக்கொண்ட பயனாளிகளை சந்தித்து கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளையும் அவர் நேரில் கேட்டறிந்தார்.

மேலும்  பிரித்தானிய நிதியுதவியின் கீழ் செஞ்சிலுவை சங்கத்தினூடாக இராகலை சென் லெனாட்ஸ் தோட்டம் மற்றும் மஹா ஊவா தமிழ் வித்தியாலயத்தில் மேற்கொண்டு வரும் சுகாதாரம் மற்றும் உணவு வழங்கும் வேலைத்திட்டங்கள் குறித்தும் மாணவர்களுடன் மகிழ்ந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

ஆ.ரமேஸ்.


Add new comment

Or log in with...