சீனாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு வீழ்ச்சி

கொவிட்–19 பெருந்தொற்றுக்கு பின்னர் சீனாவின் பொருளாதாரம் மீட்சி பெற்று வருகின்ற போதிலும் இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களிலும் வெளிநாட்டு நேரடி முதலீடு குறைவடைந்துள்ளது.

சீன வர்த்தக அமைச்சின் தரவுகளின் படி, இவ்வருடம் ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் உண்மையான வெளிநாட்டு நேரடி முதலீடு 73.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் இதனை ஒப்பிடும் போது இவ்வருடம் 3.3 வீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆனால் இவ்வருடத்தின் முதலிரு மாதங்களிலும் 39.71 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நேரடி முதலீடாகப் கிடைக்கப்பெற்றுள்ளது. இது கடந்த வருடத்தை விட ஒரு வீத வளர்ச்சியாகும்.

வெளிநாட்டு முதலீட்டின் உண்மையான பயன்பாடானது வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெறும் பணத்தொகையின் அளவைக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுகிறது.


Add new comment

Or log in with...