எரிபொருள் வணிகத்துக்கு மூன்றாம் தரப்பை பயன்படுத்தும் எண்ணமில்லை

சினோபெக் நிறுவனம் திட்டவட்டமாக அறிவிப்பு

இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்வதற்கு வேறு வெளி நிறுவனங்களை பயன்படுத்துவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானதென, சீனாவின் சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்வது தொடர்பாக சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக அண்மையில் அரசாங்கம் அறிவித்தது. இதனையடுத்து, சினோபெக் நிறுவனம் எரிபொருள் விற்பனை செய்வதற்கு வேறு வெளி நிறுவனங்களை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகின.

இதனை மறுத்துள்ள சினோபெக் நிறுவனம், தமது வணிகத்துக்காக மூன்றாம் தரப்பினரை தொடர்பு கொள்ளவில்லையென குறிப்பிட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...