பதற்றமான சூழலில் அமெரிக்காவின் உலகின் மிகப்பெரிய போர் கப்பல் நோர்வே வந்திருப்பது ஆபத்தானது என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
337 மீற்றர் நீளம் கொண்ட அணு சக்தி திறனுடைய இந்தப் போர் கப்பல் கடந்த புதன்கிழமை (24) ஒஸ்லோ பிஜோர்ட் கடல் பகுதியை அடைந்ததோடு இராணுவ ஒத்திகை ஒன்றுக்காக ஆர்டிக் செல்லும் முன்னர் அது அங்கு சில நாட்கள் தங்கி இருக்கும் என்று நோர்வே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் போர் தொடர்பில் மேற்குலகம் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில் இந்தப் போர் கப்பலின் வருகைக்கு நோர்வேயில் உள்ள ரஷ்ய தூதரகம் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
நேட்டோ உறுப்பு நாடான நோர்வே ரஷ்யாவுடன் நில எல்லை மற்றும் பேரண்ட்ஸ் கடலில் ஒரு கடல் எல்லையையும் பகிர்ந்து கொள்கிறது.
Add new comment