வளர்ந்துவரும் மகளிர் அணிகளுக்கு இடையில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசியக் கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹொங்கொங்கில் நடைபெறவுள்ள வளர்ந்துவரும் மகளிர் ஆசியக் கிண்ணத் தொடர் ஜூன் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், ஜூன் 21ஆம் திகதி நிறைவுக்கு வரவுள்ளது. இந்தப் போட்டித்தொடரில் இலங்கை ஏ அணி குழு ‘பி’யில் இடம்பெற்றுள்ளதுடன் பங்களாதேஷ், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. இந்த தொடரில் ஒவ்வொரு அணிகளையும் சேர்ந்த 23 வயதின் கீழ் வீராங்கனைகள் விளையாடவுள்ளனர்.
இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய அணியை ஜூன் 12ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளதுடன் அதனைத்தொடர்ந்து ஜூன் 14ஆம் திகதி பங்களாதேஷ் மற்றும் ஜூன் 16ஆம் திகதி மலேசிய அணியையும் எதிர்கொள்ளவுள்ளது.
Add new comment