புலிகளால் அடையமுடியாத இலக்கை தமிழ் டயஸ்போறா அடைய முயற்சி

இலங்கைக்கு எதிராக கூட்டுச் சதி முன்னெடுப்பு - சரத் வீரசேக்கர

தமிழீழ விடுதலைப்புலிகளால் அடையமுடியாத இலக்கை தமிழ் டயஸ்போறா அமைப்பினர் அடைவதற்கு முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேக்கர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் என்றபோர்வையில் இலங்கைக்கு எதிராக கூட்டுச்சதியை தமிழ் டயஸ்போறாக்கள் முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு தமிழீழம் தேவையில்லையென தெரிவித்த அவர், தெற்கிலும் தமிழர்கள்  வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டார். ஆனால் கொழும்பில் வாழுகின்ற சில தமிழ் அரசியல்வாதிகளே தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக ஈழம் என்ற கோசத்தை எழுப்புவதாகவும் சரத் வீரசேக்கர குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் குடித்தொகை குறைந்து வருவதனால் அங்கு சென்றுள்ள தமிழர்கள் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருவதாக சரத் வீரசேகர சுட்டிக்காட்டுகின்றார்.

கடந்த 14 வருடங்களுக்கு முன்பு இந்த நாட்டில் இருந்த பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ளோம். அரசியல் இலாபங்களை அடைவதற்காக அப்பாவி மக்களை படுகொலை செய்வதே பயங்கரவாதம்.

ஆனால் போரை நாங்கள் நியாயப்படுத்த முடியாது. ஆனால் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தமுடியும். கனடாவில் அரசியல் ரீதியிலான விடயம் இருக்கின்றது.

தமிழ் இனப்படுகொலையை கொண்டாடும் நோக்கில் கனேடிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எந்தவிதமானா ஆதாரங்களும் இல்லாமல் கனேடிய தமிழர்கள் இவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கனடாவில் காணமல்போன ஆதிவாசிகள் படுகொலை செய்யப்பட்ட விடயத்தை ஏன் தமிழர்கள் கதைக்கவில்லை. கனடாவுக்கும் குற்றஉணர்வு இருக்கின்றது . ஆனால் மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேசத்துக்கு போதிக்கின்றதென்றும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...